MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ஆம்ஸ்ட்ராங் வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு..! ஒரே நாளில் மூன்று பின்னடைவு..! தமிழக அரசை துரத்தும் நீதி..!

ஆம்ஸ்ட்ராங் வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு..! ஒரே நாளில் மூன்று பின்னடைவு..! தமிழக அரசை துரத்தும் நீதி..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் சம்பவம், கிட்னி திருட்டு வழக்கு மூன்று முக்கிய வழக்குகள் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளன. மூன்று உத்தரவுகளும் ஒரே நாளில் வந்ததால், திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக பெரும் சவாலாக மாறியுள்ளன. 

2 Min read
Author : Thiraviya raj
Published : Oct 10 2025, 07:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மூன்று முக்கிய வழக்குகளால் தமிழக அரசுக்கு பின்னடைவு
Image Credit : Asianet News

மூன்று முக்கிய வழக்குகளால் தமிழக அரசுக்கு பின்னடைவு

இன்று நீதிமன்றத்தில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு வழக்கு மூன்று முக்கிய வழக்குகள் தமிழக அரசுக்கு பெரும் அழுத்தத்தையும், பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளன. தமிழக அரசுக்கு இந்த மூன்று உத்தரவுகளும் ஒரே நாளில் வந்ததால், திமுக அரசுக்கு அரசியல் ரீதியாக பெரும் சவாலாக மாறியுள்ளன.

இதுகுறித்து தமிழகன் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ‘‘திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வெட்கக்கேடான திமுகவின் நிபந்தனைகள்
Image Credit : Asianet News

வெட்கக்கேடான திமுகவின் நிபந்தனைகள்

திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கக் கூறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவில், தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற திமுக அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. திமுக எம்எல்ஏவுக்கு எதிரான விசாரணைக் குழுவில், திமுக அரசு பரிந்துரைக்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற திமுகவின் நிபந்தனை எவ்வளவு வெட்கக்கேடானது.

34
தமிழக அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்
Image Credit : our own

தமிழக அரசை கண்டித்த உச்ச நீதிமன்றம்

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிய திமுகவுக்கு, அந்த வழக்கிலும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் பயப்படுகிறது?

கரூர் தவெக பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

44
திமுகவைத் துரத்தும் நீதியும், தர்மமும்..!
Image Credit : Asianet News

திமுகவைத் துரத்தும் நீதியும், தர்மமும்..!

திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளில், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதியான நீதியரசர் விஜய் குமார், நீதியரசர் ஸ்ரீமதியின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில், விலங்குகளை பலியிடுவதைத் தடை செய்துள்ளார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே தொடர்ந்து அழைக்க வேண்டும்.

ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
உச்ச நீதிமன்றம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
ஒரே இரவில் 30 உடல்களுக்கு கூராய்வு எப்படி? மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர்? சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved