MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • அன்புமணி ஒரு அண்டப்புளுகு... ஆகாசப்புளுகு.. தனிக்கட்சி தொடங்கினாலும் வளராது..! ராமதாஸ் ஆவேசம்..!

அன்புமணி ஒரு அண்டப்புளுகு... ஆகாசப்புளுகு.. தனிக்கட்சி தொடங்கினாலும் வளராது..! ராமதாஸ் ஆவேசம்..!

என்னோடு 40 முறை பேசியதாக கூறியது பொய். அன்புமணி பேசுவதெல்லாம் பொய். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதை விட மோசமான பொய். அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்

2 Min read
Author : Thiraviya raj
Published : Sep 11 2025, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : pmk

“என்னுடன் 40 முறை பேசியதாக அன்புமணி கூறுவது பொய். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதை விட மோசமான பொய்.

அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்” என ராமதாஸ் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக அன்புமணிக்கும், ராமதாஸும் இடையே நடைபெற்று வந்த பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அன்புமணி பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், பாமகவில் இதுவரை யாரும் செய்யாத கட்சி விரோத நடவடிக்கைகளில் அன்புமணி ஈடுபட்டதாக ராமதாஸும் அறிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : x

இந்நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "பாமகவின் வளர்ச்சிக்கு அன்புமணியின் நடவடிக்கை குந்தகம் விளைவிக்கும் என்பதால் நீக்கப்பட்டுள்ளார். ஜனநாயக முறைப்படி பல கட்ட விசாரணை, வாய்ப்புகள் கொடுத்த பின்பே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினர் அறிவுரை கூறியும் அன்புமணி ஏற்கவில்லை. அன்புமணி உடன் இருந்தவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் மன்னிக்க தயாராக உள்ளேன்.

பாமகவின் வளர்ச்சிக்கு அன்புமணியின் நடவடிக்கை குந்தகம் விளைவிக்கும் என்பதால் நீக்கப்பட்டுள்ளார். ஜனநாயக முறைப்படி பல கட்ட விசாரணை, வாய்ப்புகள் கொடுத்த பின்பே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினர் அறிவுரை கூறியும் அன்புமணி ஏற்கவில்லை. அன்புமணி உடன் இருந்தவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் மன்னிக்க தயாராக உள்ளேன்.

34
Image Credit : Google

பாமகவின் வளர்ச்சி மட்டுமே முக்கியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அன்புமணியுடன் உள்ள 10 பேரை யாரும் எதிர்பாராத வகையில் நான் வளர்த்துவிட்டேன். யாரை வளர்த்துவிட்டேன் என்பதை சொல்ல விரும்பவில்லை. இது தனி மனிதனாக நான் ஆரம்பித்த கட்சி. இதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. பிள்ளையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் உரிமை கொண்டாட முடியாது. என் மூச்சு உள்ளவரை மக்களுக்கு உண்மையாக இருப்பேன். ஒழுங்கு நடவடிக்கை குழு இரண்டு முறை கடிதம் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைமை.

இது தனி மனிதனாக நான் ஆரம்பித்த கட்சி. இதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை. பிள்ளையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் உரிமை கொண்டாட முடியாது. என் மூச்சு உள்ளவரை மக்களுக்கு உண்மையாக இருப்பேன். ஒழுங்கு நடவடிக்கை குழு இரண்டு முறை கடிதம் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைமை.

44
Image Credit : x

பாமகவுக்கு இது பின்னடைவு கிடையாது. களை முளைக்குமே என பயிரிடாமல் இருப்பதில்லை. களையை நீக்கிவிட்டோம். அன்புமணி தனி கட்சி ஆரம்பித்துக்கொள்ளலாம். ஆனால், அன்புமணியோடு உள்ளவர்கள் தற்போதுள்ள மாதிரி ஆலோசனை சொன்னால், தனியாக கட்சி தொடங்கினாலும் கட்சி வளராது. என்னோடு 40 முறை பேசியதாக கூறியது பொய். அன்புமணி பேசுவதெல்லாம் பொய். அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்பதை விட மோசமான பொய். அது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
இராமதாஸ்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
DMK Ministers : பரபரப்பை கிளப்பிய 6 திமுக முன்னாள் அமைச்சர்களின் கைது! யார் யார்? ஏன் கைது செய்யப்பட்டார்கள்?
Recommended image3
Dhanush : தனுஷ் கொடுத்த வெள்ளி விளக்கில் தாமரை சின்னம்! பாஜக ஆதரவா? நற்பணி இயக்கத்தின் பதில்!
Related Stories
Recommended image1
OTTயில் ரிலீஸ் ஆன கூலி படத்தின் லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு? லியோவை முந்தியதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved