எங்கு பார்த்தாலும் மின்னும் லைட்! குதிரை வண்டி! தடபுடலாக நடந்த டிடிவி தினகரனின் மகள் திருமணம்! போட்டோஸ்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி. டி.வி தினகரன் - அனுராதா தினகரன் தம்பதியரின் மகள் ஜெயஹரிணி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் ராஜேஸ்வரி அம்மாள் ஆகியோரின் மகன் ராமநாதன் துளசி ஐயா வாண்டையார் திருமணம் திருவண்ணாமலையில் இன்று மிகவும் தடபுடலாக நடந்தது.
மணமக்களை வரவேற்க அலங்காரத்தோடு வண்டிகளில் பூட்டப்பட்ட குதிரைகள்... அமோகமாக நடந்த திருமண ஏற்பாடுகள்...
தங்க ரதம் போல்... அலங்கரிக்கப்பட்ட சேரியட் வண்டிகள், மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் அபர்ணா ஓட்டலில் இருந்து வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டவை .
திருவண்ணாமலையில் நடந்த டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணி - ராமநாதன் துளசி தம்பதிகளை நேரில் வந்து மலர் தூவி ஆசிர்வதித்து, விபூதி சாமியார்.
தங்க நிற புடவையில் மின்னும் மணமகள் ஜெயஹரிணி, ஆடைக்கு ஏற்ற எளிமையான அலங்காரத்துடன் ஜொலிக்கும் புகைப்படம்.
கல்யாண கலக்கல் புகைப்படம்... ஒட்டு மொத்த குடும்ப அழகை விளக்கும் புகைப்படம்... அனைவரது முகத்திலும் எவ்வளவு சந்தோசம் பாருங்க.
திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய சசிகலா மற்றும் உறவினர்கள் பாஸ்கரன், சுதாகரன், உள்ளிட்ட பலர் புகைப்படத்தில் காணலாம்.
இன்று காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி புதிய மேடையில் டிடிவி தினகரன் மகள் திருமணம் நடைபெறுகிறது.
திருமண வரவேற்பு சடங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம், நீல நிற பட்டு புடவையில், ஜொலிக்கும் டிடிவி மகள் மற்றும் தங்க நிற பட்டு வேஷ்டி சட்டையில் மாப்பிள்ளை.
மகள் திருமணத்தில் மிகவும் விறுவிறுப்பு மற்றும் பரபரப்பாக காணப்பட்ட டிடிவி தினகரன், பட்டு வேஷ்டி சட்டையில் எப்படி இருக்கிறார் பாருங்க.
சின்னமா சசிகலாவுடன் டிடிவி தினகரன். இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையிலும் கூட, சின்னம்மாவின் பக்கத்தில் அமர்ந்து அவரை எவ்வளவு கனிவாக உபசரிக்கிறார் என்பதை பாருங்கள்.
திருமண வைபோகத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். கொரோனா அச்சம் காரணமாக டிடிவி தினகரன் மகள் திருமணத்தில் முக்கிய உறவினர்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தொண்டர்களின் பாதுகாப்பு கருதி கட்சி தொண்டர்களுக்கும் அழைப்பு வைக்கவில்லை என அறிக்கை மூலம் தெரிவித்தார் டிடிவி தினகரன் என்பது குறிப்பிடத்தக்கது.