- Home
- Politics
- அடி அடின்னு அடிச்சுட்டாங்க..! இனிமேலாவது... விஜய்க்கு சூப்பர் ஐடியா கொடுத்த செல்லூர் ராஜூ..!
அடி அடின்னு அடிச்சுட்டாங்க..! இனிமேலாவது... விஜய்க்கு சூப்பர் ஐடியா கொடுத்த செல்லூர் ராஜூ..!
உயிர் பலி ஏற்படும் வகையில் யார் செய்திருந்தாலும் சரி, அவன் குடும்பமே விளங்காது. யார் செய்திருந்தாலும் சரி. உண்மையில் இதற்கு யார் காரணமோ அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை குழு அமைத்தது ஃபாஸ்ட் ஃபுட் போல் நடந்துள்ளது.

விஜய் அரசியலில் புதுமுகம்
“விஜய் அரசியலுக்கு புதுமுகம்... ரொம்பவும் அவரை விமர்சனம் பண்ணியாச்சு. விஜயும் காலதாமதம் பண்ணியிருக்க கூடாது. காவல்துறையும் இந்த இடத்தை கொடுத்திருக்கக் கூடாது’’ என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘விஜய் அரசியலுக்கு இப்போதுதான் வந்திருக்கிறார். அரசியலில் புதுமுகம். அவரை ரொம்ப விமர்சனம் பண்ணி விட்டார்கள். நிர்வாகிகள் செய்த தவறு. கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக மதுரையில் 2010ல் அம்மா கூட்டம் நடத்தினார். பாண்டி கோயிலில் அம்மா திடல் என்பது உங்களுக்கு தெரியும். 5 லட்சம் மக்கள் கலந்து கொண்டார்கள். அம்மா வருவதற்கு 2 1/2 மணி நேரம் ஆனது. திடலுக்கு விமான நிலையத்திலிருந்து பைபாஸ் ரோடு வழியாகத்தான் வந்தார். அவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் இருந்தது. ஆனால் மக்கள் கட்டுக்கோப்பாக இருந்தார்கள்.
முதலில் பார்ப்பவர்கள் பார்த்துவிட்டு போகட்டும்
கரூரில் பத்தாயிரம் பேர்தான் கூடினார்கள். பத்தாயிரம் பேர் கூடும் இடத்தில் 26,000, 27 ஆயிரம் பேர் கூடினார்கள். அங்கு இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்து விட்டது என்பது மிகப்பெரிய மன உளைச்சல். இனிமேல் தவெக தலைவர் விஜய் முதல் கட்டமாக பேருந்தில் போய் அந்தந்த மாவட்ட புறநகர் பகுதிகளில் அந்தந்த தொகுதி தொகுதிகளில் சந்தித்தால் நன்றாக இருக்கும். பொதுவான ஒரு பெரிய திடலில் பரப்புரை செய்து, அடுத்து தேர்தல் நெருங்கும் போது அவர் இப்போது போல் வந்தால் அவரை முதலில் பார்ப்பவர்கள் எல்லாம் பார்த்துவிட்டு போய்விடுவார்கள். அடுத்த கட்சிக்காரர்கள் மட்டும் தான் வருவார்கள்.
அவன் குடும்பமே விளங்காது
ஒன்பது குழந்தைகள், 17 பெண்கள் இறந்திருக்கிறார்கள். வயிற்றெரிச்சலாக இருக்கிறது. இதை இப்போது நாம் விமர்சனம் செய்வது சரியாக இருக்காது. விஜய் அவரது ஆதங்கத்தை சொல்லி இருக்கிறார். அங்கு என்ன நடந்தது என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். உயிர் பலி ஏற்படும் வகையில் யார் செய்திருந்தாலும் சரி, அவன் குடும்பமே விளங்காது. யார் செய்திருந்தாலும் சரி. உண்மையிலேயே இதற்கு யார் காரணமோ அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர், அங்கு இருக்கிற காவல்துறை எஸ்.பி. தான் காரணம். இதற்கு அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழுக்க முழுக்க திமுக அரசுக்கு சப்போர்ட்
என்னதான் டிஎஸ்பி கையை காண்பித்து விட்டாலும் அவர் என்ன செய்வார்? அவ்வளவு பெரிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியுமா? அவ்வளவு பெரிய இளைஞர்கள் பட்டாளம். பாம்பு வந்தால் கூட நடுங்காத கூட்டம். பாம்பை கையில் பிடித்து வீசக்கூடிய இளைஞர்கள் இருக்கிறார்கள். கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. ஆனால் விஜய் தாமதமாக வந்தது தவறு. திமுக அரசு அந்த இடத்தில் இடம் ஒதுக்கி இருக்க கூடாது. ஏற்கனவே இங்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செல்லும்போது அனுமதி மறுத்து விட்டார்கள். அதே இடத்தில் விஜய்க்கு எந்த அடிப்படையில் அனுமதி கொடுத்தார்கள்? இந்த இடத்தில் நீங்கள் கூட்டம் நடத்தினால் மிகப்பெரிய விபரீதம் ஏற்படும் என்று எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக வேறு இடத்தை ஒதுக்கி இருக்க வேண்டும். இனிம் மேல் இது போன்ற தவறு நடக்க கூடாது என்பது தான் எங்கள் விருப்பம்.
அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு அமைத்தது ஃபாஸ்ட் ஃபுட் போல் நடந்துள்ளது. முழுக்க முழுக்க திமுக அரசுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். அவர் ஏன் நியமிக்கப்பட்டார் என்பது எல்லோருக்கும் சந்தேகமாக இருக்கிறது’’ எனத் தெடிவிடததுள்ளார்.