MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • 21 நாட்கள், 13 நாடுகள்: உலகின் நீண்ட ரயில் பயணம் இது தான்! டிக்கெட் விலை இவ்வளவு குறைவா?

21 நாட்கள், 13 நாடுகள்: உலகின் நீண்ட ரயில் பயணம் இது தான்! டிக்கெட் விலை இவ்வளவு குறைவா?

21 நாட்களில் 13 நாடுகளை இணைக்கும் 18,755 கிலோமீட்டர் தூர உலகின் மிக நீண்ட ரயில் பயணம் பற்றி தெரியுமா? இந்த ரயில் பயணத்தின் டிக்கெட் விலை எவ்வளவு? என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramya s
Published : Nov 28 2024, 08:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
World's Longest Train Journey

World's Longest Train Journey

குளிர்காலம் வந்துவிட்ட நிலையில், பலரும் தங்கள் விடுமுறையை அனுபவிக்க விரும்புகின்றனர். சிலர் சிம்லா மற்றும் மணாலி போன்ற அழகிய மலைவாசஸ்தலங்களுக்கு செல்கின்றனர். ஆனால் இன்னும் சிலர் பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நகரங்களை பார்க்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் ஒரு பயணத்தில் நீங்கள் அனைத்தையும் அனுபவிக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
World's Longest Train Journey

World's Longest Train Journey

ஆம். ஒரே ரயில் பயணத்தில் நீங்கள் 13 நாடுகளை பார்க்க முடியும். பாரீஸின் அழகை ஆராய்வதற்கும், சிங்கப்பூரில் ஷாப்பிங்கில் ஈடுபடுவதற்கும், ஸ்பெயினின் வசீகரத்தில் திளைப்பதற்கும், தாய்லாந்தின் கடற்கரைகளில் ஓய்வெடுப்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும். இவை எல்லாம் 21 நாட்களில்..  உலகின் மிக நீண்ட ரயில் பயணத்தைப் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

36
World's Longest Train Journey

World's Longest Train Journey

18,755 கிலோமீட்டர் தூரம் கொண்ட உலகின் மிக நீண்ட ரயில் பயணத்தை முடிக்க 21 நாட்கள் ஆகும். போர்ச்சுகலின் அல்கார்வ் பகுதியில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஸ்பெயின், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட 13 நாடுகளின் வழியாக பயணித்து இறுதியாக சிங்கப்பூரை சென்றடைகிறது. இடையே இந்த ரயில் 11 இடங்களில் நிற்கிறது. வானிலை இடையூறுகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் இந்த பயண நேரம் நீட்டிக்கப்படலாம்.

46
World's Longest Train Journey

World's Longest Train Journey

இந்த ரயில் பயணம், அழகான ஐரோப்பிய நாடுகளில் இருந்து சைபீரியாவின் பனிக்கட்டி நிலப்பரப்பு வரை பலவிதமான கலாச்சாரங்கள் மற்றும் நிலப்பரப்புகளை பயணிகள் கண்டுகளிக்க முடியும். மேலும் பாரிஸ், மாஸ்கோ, பெய்ஜிங் மற்றும் பாங்காக் போன்ற நகரங்கள் முக்கிய நிறுத்தங்களில் ரயில் நின்று செல்வதால், இது பயணிகளுக்கு உலகின் மிகச் சிறந்த இடங்களை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

நீண்ட ரயில் பயணம் பல நாடுகளை உள்ளடக்கிய போதிலும், இந்த ரயில் கட்டணம் மிகவும் மலிவான விலையில் இருக்கிறது என்பதே கூடுதல் சிறப்பு. டிக்கெட் விலை சுமார் 1,350 அமெரிக்க டாலர்கள், இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,13,988 ஆகும்.

இந்த ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்தால் போதும், உணவு அல்லது தங்குமிடம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அனைத்திற்கும் சேர்த்தே டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பயணம் முழுவதும் உணவு, பானங்கள் மற்றும் வசதியான வாழ்க்கை ஏற்பாடுகள். இந்த அனைத்தையும் உள்ளடக்கிய சேவை கிடைக்கும். எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் நீங்கள் அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல நாடுகளை இணைக்கும் போடன்-வியன்டியன் ரயில் பாதை சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில், இந்த ரயில் பாதை சாத்தியமாகியுள்ளது. இந்த பாதை ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை ஒரே இரயில் பயணத்தில் பயணிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது, குறிப்பிடத்தக்க பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் கலாச்சார நிலப்பரப்புகளை உள்ளடக்கியதால் பயணிகளுக்கு இது நிச்சயம் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டுமெனில் முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். வானிலை நிலையைச் சரிபார்த்து, தேவையான அனைத்து ஆவணங்களும் இருப்பதை உறுதிசெய்து, இந்த ரயில் பயணத்தில் சீட் கிடைப்பதையும் உறுதிசெய்து, வெவ்வேறு ரயில்களுக்கு இடையே உள்ள இணைப்புகளைச் சரிபார்க்கவும். முறையான திட்டமிடல் இருந்தால், உங்களுக்கு உலகின் மிக நீண்ட ரயில் பயணத்தில் ஒரு மகிழ்ச்சியான பயண அனுபவம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

56

66

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
ரயில்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved