பொங்கல் சாப்பிட்டதும் தூக்கம் சொக்குதா? இதுதான் முக்கிய காரணம்
பொங்கல் சாப்பிட்ட பிறகு தூக்கம் வருபது ஏன் என்பதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Eating Pongal Cause Sleep
Why We Feel Sleepy After Eating Pongal : காலையில் ஒரு பிளேட் பொங்கல் சாப்பிட்டுவிட்டு பள்ளி, கல்லூரி, அலுவலகம் சென்றால் தூங்கி விழுந்திருப்போம். அல்லது தூக்கத்தை கட்டுப்படுத்தும் முடியாமல் முழி பிதுங்கி அனுபவத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையாவது அனுபவித்திருப்போம் தானே. பொங்கல் சாப்பிட்டால் ஏன் இப்படி தூக்கம் வருகிறது என்று நீங்கள் அது குறித்து யோசித்து இருக்கிறீர்களா? அதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
Why do I feel sleepy after eating Pongal?
பொங்கல் சாப்பிட்டதும் தூக்கம் வருவது ஏன்?
அரிசி, நெய், சிறு பருப்பு, முந்திரி, மிளகு, சீரகம், ஆகியவற்றை கொண்டு தான் பொங்கல் தயாரிக்கப்படுகிறது. அரிசி மற்றும் சிறு பருப்பு இவை இரண்டும் தான் நமக்கு தூக்கம் வருவதற்கு முக்கிய காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
இதையும் படிங்க: ஹெட்போன்களுடன் தூங்குவது பாதுகாப்பானதா? உங்கள் காதுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?
Why does rice make you sleepy?
தூக்கம் வருவதற்கு அரிசி ஏன் காரணம்?
அரிசியில் கார்போஹைட்ரேட் உள்ளது. அரிசியை வேக வைத்து அதை மிதமான சூட்டில் சாப்பிடும் போது மிக எளிதில் ஜீரணமாகிவிடும். மேலும் இது நம்முடைய உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க செய்யும் என்று நமக்கு தெரிந்ததே. இத்தகைய சூழ்நிலையில், உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது நம்முடைய உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும் ஓரெக்சின் (orexin) இன்று ஹார்மோன் அளவானது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கும் இதன் விளைவாக தான் நமக்கு மந்த நிலை ஏற்படுகிறது. இது தவிர இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது மூளையில் ஹைபோதலாமஸில் உள்ள MCH (Melanin Concentrating Hormone) என்ற ஹார்மோன் வெளியாகி நம்மை தூங்க வைக்கின்றது.
Why does a green moong dal cause sleepiness?
தூக்கம் வருவதற்கு சிறுபயறு ஏன் காரணம்?
சிறு பயிரில் Triptophan என்ற அமினோ ஆசிட் இருக்கிறது. இதனுடன் அரிசி போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த பொருட்களை சேர்த்து சாப்பிடும்போது இதன் அளவானது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, ஹார்மோன் உற்பத்தி, தூக்கம் மற்றும் விடுப்பு சுழற்சியை கட்டுப்படுத்தும் மெலடோனின் ஹார்மோன் உற்பத்திக்கு வழிவகுக்கும். இதனால்தான் பொங்கல் சாப்பிட்ட பிறகு நமக்கு தூக்கம் வருகின்றது.
இதையும் படிங்க: வெக்கைல இரவு நிம்மதியா தூங்க முடியலயா? ஆழ்ந்த தூக்கத்திற்கு சூப்பர் டிப்ஸ்!