MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தண்ணீர் தொட்டி கருப்பு நிறமாக இருப்பதற்கு இப்படி 1 காரணமா! தொட்டி உருளை வடிவத்தில் இருப்பதே நல்லது தெரியுமா?

தண்ணீர் தொட்டி கருப்பு நிறமாக இருப்பதற்கு இப்படி 1 காரணமா! தொட்டி உருளை வடிவத்தில் இருப்பதே நல்லது தெரியுமா?

பெரும்பாலான தண்ணீர் தொட்டிகள் உருளை வடிவத்திலும், கருப்பு நிறத்திலும், கோடுகளுடனும் இருக்கும். அதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? 

2 Min read
Author : maria pani
| Updated : Apr 17 2023, 10:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பெரும்பாலான வீட்டு மாடிகளில் தண்ணீர் தொட்டி இருப்பதை பார்த்திருப்போம். அவை கருப்பு, வெள்ளை, நீலம் ஆகிய வண்ணங்களில் காணப்படும். ஆனால் கருப்பு தான் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் செவ்வகம், சதுரம் என பல வடிவங்கள் இருந்தாலும், தண்ணீர் தொட்டிகள் மட்டும் உருளையாக இருப்பதை கவனித்துள்ளீர்களா? அதற்கு தனிப்பட்ட காரணமும் உள்ளது. வாருங்கள் தெரிந்து கொள்வோம். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

தண்ணீர் தொட்டிகள் உருளையாக இருக்க, நீர் அழுத்தம் முக்கிய காரணம். ஒரு கோள அல்லது உருளை தொட்டி தான் அழுத்தத்தை தொட்டி முழுவதும் சமமாக விநியோகிக்க அனுமதிக்கிறது. உருளை வடிவ தொட்டி கட்டுமானத்திற்கு குறைந்த விலையில் உற்பத்தி தேவைப்படுகிறது. இது தண்ணீர் தொட்டிகள் உருளையாக இருக்க ஒரு காரணம். 

34

தொட்டிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பிவிசி (PVC), ஒரு உருளை வடிவத்தில் செய்யப்படும்போது விரிசல் ஏற்படுவதைத் தடுக்கிறது. சதுர வடிவமைப்பு என்றால் விரைவில் விரிசல் அடையும். உருளையாக இருக்க இப்படி இரண்டு காரணங்கள் உள்ளது போலவே, கருப்பாக இருப்பதற்கும் காரணங்கள் உள்ளன. 

இதையும் படிங்க: கொசு கடியால் ஏற்படும் தடுப்பு சொறி! வெறும் 5 நொடிகளில் முகம் கை கால்களில் தடுப்பு மறையும்! இதை டிரை பண்ணுங்க!!

44

தண்ணீர் தொட்டிகள் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளன? 

தண்ணீர் தொட்டிகள் மற்ற நிறங்களில் இருந்தாலும், பெரும்பாலான தொட்டிகள் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன. கருப்பு நிறம் சூரிய ஒளியை உறிஞ்சுவதால், மற்ற வண்ண தொட்டிகளுடன் ஒப்பிடும்போது இது ஆல்கா (பாசி, பூஞ்சை) வளர்ச்சியை குறைக்கிறது. உருளையாக, கருப்பாக இருக்க காரணத்தை தெரிந்து கொண்டோம். அதில் ஏன் கோடுகள் உள்ளன என்பது தெரியுமா? 

தண்ணீர் தொட்டிகள் பொதுவாக வெளிப்புறத்தில் கோடுகளால் செய்யப்படுகின்றன. இந்த கீற்றுகளை உருவாக்குவதற்கான காரணம், அதிக சுமை அல்லது நீர் அழுத்தம் காரணமாக தொட்டி உடைவதைத் தடுப்பதாகும். எதுவும் காரணம் இல்லாமல் நடப்பதில்லை. தண்ணீர் தொட்டிகளின் வடிவத்துக்கும், நிறத்துக்கும் ஏன் அதிலுள்ள கோடுகளுக்கும் கூட இப்படி காரணங்கள் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. 

இதையும் படிங்க: வற்றாத பணவரவை பெற! வீட்டு ஹாலில் இந்த 1 விஷயம் பண்ணுங்க! வாஸ்து தோஷங்கள் விலகி பணம் பெருகும்!!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
கவரிங் நகை போட்டா அலர்ஜி ஆகுதா? அப்போ இந்த 6 மேஜிக் ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்க!
Recommended image2
Heart Health: ஹார்ட் பேஷன்ட்ஸ் முட்டை சாப்பிடலாமா, கூடாதா? உண்மை என்ன?
Recommended image3
Walking and Weight Loss : எப்படி நடந்தால் எடை குறையும்? புதிய வாக்கிங் முறைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved