MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சோப் பாக்கெட்டில் ஏன் பெண்கள் படம் மட்டும் இடம்பெறுகிறது? முக்கிய காரணமே இது தான்!!

சோப் பாக்கெட்டில் ஏன் பெண்கள் படம் மட்டும் இடம்பெறுகிறது? முக்கிய காரணமே இது தான்!!

சோப்பு பாக்கெட்டில் பெண்களின் புகைப்படங்கள் மட்டும் ஏன் இடம்பெறுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

2 Min read
Author : Ramya s
Published : Sep 23 2023, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
soap

soap

அழகை பராமரிக்க மட்டுமின்றி, உடலில் உள்ள அழுக்குகளை அகற்றவும் சோப்பு பயன்படுகிறது. மென்மையான சருமத்திற்கு சோப்பு, வறண்ட சருமத்திற்கு சோப்பு, எண்ணெய் சருமத்திற்கு சோப்பு, பளபளப்பான சருமத்திற்கு சோப்பு என பல்வேறு வகையான சோப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. சோப்பை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் சோப்பு பாக்கெட்டில் பெண்களின் புகைப்படங்கள் மட்டும் ஏன் இடம்பெறுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

25

சந்தையில் பல வகையான சோப்புகள் கிடைக்கின்றன. உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் வெவ்வேறு சோப்பைப் பயன்படுத்துகிறார்களா? சந்தூர், லக்ஸ், பியர்ஸ்... எந்த சோப்பு எடுத்தாலும் அதில் ஒரு பொதுவான காரணி இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். ஆம். சோப்பின் பாக்கெட் தான் அது.

35
soap

soap

நீங்கள் வெவ்வேறு சோப்புகளைப் பயன்படுத்தினாலும், சோப்பு கவரில் உள்ள ஒரு பொதுவான அம்சம் பாக்கெட்டில் உள்ள பெண்களின் புகைப்படமாகும். பெரும்பாலும் அனைத்து நிறுவனங்களின் சோப்பு அட்டைகளிலும், சோப்பு விளம்பரங்களிலும் பெண்களே அதிகம் காணப்படுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று தெரியுமா.. ?அதாவது பெண்கள் தான் காலங்காலமாக குடும்ப சுகாதாரத்தை முதன்மையான பராமரிப்பாளர்களாக உள்ளனர். இதற்காகவே பெண்களின் புகைப்படம் சோப்பு பாக்கெட்டில் இடம்பெறுகிறது என்று கூறப்படுகிறது.

45
soap

soap

இருப்பினும் இதனால், ஆண்கள் சோப்புகளைப் பயன்படுத்துவதில்லை என்று அர்த்தம் கிடையாது. ஆண்கள் சோப்புகள் மற்றும் பிற தனிப்பட்ட சுகாதார பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். ஆனால் வியாபார நோக்கங்களுக்காகவே பெண்களின் படம் சோப்பு பாக்கெட்டில் இடம்பெறுகிறது. ஒரு குறிப்பிட்ட இலக்கு பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் விளம்பரங்கள் உருவாக்கப்படுகின்றன, மேலும் சோப்பு விளம்பரங்களில் பெண்களை சித்தரிப்பது முழுக்க முழுக்க மார்கெட்டிங் உத்தி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

55

பெண்களின் புகைப்படம் இருந்தால், விளம்பரம் கவர்ச்சியாக இருக்கும். அந்த குறிப்பிட்ட பிராண்டு அதிகமானோருக்கு எளிதில் சென்றடையும்.. இதன் காரணமாகவே சோப்பு விளம்பரங்களில் பெண்கள் மட்டுமே நடிக்கிறார்கள். எனினும் சமீபத்திய ஆண்டுகளில், தனிப்பட்ட சுகாதாரத் துறையில் ஆண்களின் அழகு, தோற்றத்தை மையப்படுத்தியும் விளம்பரங்கள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக சோப்புகள், கிரீம்கள், ஷாம்பு என அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் ஆண்களைக் கொண்ட விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved