பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்குறதுக்கு இப்படி ஒரு பின்னணியா? நன்மைகள் நிறைய!
Benefits Of Pottu On Forehead : பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பது அழகை அதிகரிப்பது மட்டுமல்ல, அது அவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது தெரியுமா?
Benefits Of Pottu On Forehead In Tamil
பொட்டு என்பது வெறும் அலங்காரத்தின் சின்னம் அல்ல. இது இந்து கலாச்சாரத்தில் முக்கியமான பகுதியாகும். மேலும் நெற்றியில் பொட்டு வைக்காமல் அலங்காரம் முழுமை அடையாது. பொதுவாக இரண்டு புருவங்களுக்கு இடையில் தான் பொட்டு வைக்கப்படும். நெற்றியில் போட்டு வைப்பது வெறும் அழகுக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் தெரியுமா? நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.
Benefits Of Bindi
பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்:
தலைவலி குணமாகும் :
அக்குபஞ்சர் படி, இரண்டு புருவங்களுக்கிடையே பொட்டு வைத்தால் தலைவலி உடனே சரியாகிவிடும். ஏனெனில், இந்த பகுதியில்தான் ஒரு குறிப்பிட்ட புள்ளி இருக்கிறது. அந்த புள்ளியில் மசாஜ் செய்யும் போது தலைவலி உடனே குணமாகும். இதற்கு தான் இந்த இடத்தில் பெண்கள் தினமும் பொட்டு வைப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது.
தூக்கமின்மை பிரச்சனை சரியாகும் :
நெற்றியில் பொட்டு வைப்பது தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும். உண்மையில், இரண்டு புருவங்களுக்கிடையே பொட்டு வைக்கும் போது மனம் அமைதியாகுவது மட்டுமின்றி, கழுத்து, முகம், மற்றும் முழு உடலும், தசைகளும் தளரும். இதனால் இரவு நிம்மதியாக தூங்குவீர்கள்.
இதையும் படிங்க: திருமணமான பெண்கள் நெற்றியில் கருப்பு பொட்டு வைக்கலாமா..? சாஸ்திரம் சொல்வது என்ன..??
benefits of wearing bindi in tamil
சைனஸ் பிரச்சனை குணமாகும் :
நெற்றியில் பொட்டு வைப்பதால் நாசிப்பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் தூண்டப்படும். அதுமட்டுமின்றி, இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் காரணமாக சைனஸ் பிரச்சனை குணமாகும் மற்றும் முகப்பில் வீக்கம் குறையும்.
மனதை அமைதிப்படுத்தும் :
பொட்டு வைக்கும் பகுதியை தினமும் மசாஜ் செய்து வந்தால் நரம்புகள் தளர்த்தப்படும். இதனால் உடல் மற்றும் மனம் அமைதி அடையும். எனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது இந்த பகுதியை மென்மையாக மசாஜ் செய்தால் மன அழுத்தம் நீங்கும்.
இதையும் படிங்க: பெண்களே! உங்கள் முகத்திற்கு ஏற்ற பொட்டு வையுங்கள்; முகத்தில் அழகு கூடும்..!!
Why ladies applying vermilion in tamil
இளமையாக இருக்கலாம் :
நெற்றியில் பொட்டு வைப்பது அழகை அதிகரிப்பது மட்டுமின்றி உங்களை இளமையாக இருக்க வைக்கவும் உதவுகிறது. அதாவது, பொட்டு வைப்பதன் மூலம் தசைகள் துண்டப்படும், ரத்த ஓட்டம் அதிகரிக்க உதவும். இதனால் சருமத்தில் சுருக்கங்கள் குறைந்து, முகம் பார்ப்பதற்கு எப்போதுமே பொலிவாக இருக்கும்.
பார்வை கூர்மையாகும் :
இரண்டு புருவங்களுக்கிடையே பொட்டு வைக்கும் போது அந்த இடத்தில் இருக்கும் ஒரு நரம்பு கண் நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே பொட்டு வைப்பதன் மூலம் இந்த நரம்பானது தூண்டப்படும். இதனால் பார்வை கூர்மையாகும். சொல்லப்போனால் கண் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, கண் ஆரோக்கியம் மேம்படும்.