MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • திருமணத்தில் பெண்களை விட ஆண்களின் வயது ஏன் அதிகமாக இருக்க வேண்டும்?

திருமணத்தில் பெண்களை விட ஆண்களின் வயது ஏன் அதிகமாக இருக்க வேண்டும்?

இந்தியாவில் திருமண வயதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் குறித்தும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் முதல் தற்போதைய சட்டம் வரை உள்ள வரலாற்றையும் விரிவாக பார்க்கலாம்.

3 Min read
Author : Ramya s
Published : Sep 23 2024, 05:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Marriage Age Difference

Marriage Age Difference

திருமணத்தில் பெண்களை விட ஆண்களுக்கு அதிக வயது இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. இந்தியாவில் வயது வந்தோர் என்று கருதப்படுவதற்கான வயது ஒன்று தான். ஆனால் ஏன் திருமணத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கு வயதி வித்தியாசம் இருக்கிறது? திருமணத்தில் இருக்கும் இந்த வயது வித்தியாசம் எப்போது விவாதப் பொருளாகவே உள்ளது.

குறிப்பாக குழந்தை திருமண முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, சட்டப்பூர்வ திருமண வயது அறிவிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவில் குறிப்பிட்ட காலம் பேசு பொருளாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் 1884-ம் ஆண்டு டாக்டர் ருக்மாபாய் வழக்குக்கு பின்னரும், 1889-ம் ஆண்டு புல்மோனி தாசியின் மரணத்தின் போது இந்தியாவில் திருமண வயது தொடர்பான விவாதம் தொடங்கியது. 

இதில் ருக்மாபாய் குழந்தை திருமணம் செய்து கொள்வதை மறுத்தார். 11 வயதான புல்மோனி தாசி 35 வயது கணவரால் வன்புணர்வு செய்யப்பட்ட போது இறந்தார். கொலை குற்றத்திற்காக தண்டனை பெற்ற புல்மோனி தாசியின் கணவர், பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Marriage Age Difference

Marriage Age Difference

குழந்தை திருமணங்கள் சிறுமி இறப்பதை தடுக்கும் வகையில் 1891-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு திருமண வயது வரம்பு சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி உடலுறவு வைத்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச வயது 12 என நிர்ணயிக்கப்பட்டது. அப்போது இந்த சட்டத்திற்கு சில சமூக சீர்திருத்தவாதிகள் ஆதரவு தெரிவித்தனர். 

1894-ம் ஆண்டு மைசூர் மாகாணத்தில் 8 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை திருமணம் செய்து கொள்வதை தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 1914-ம் ஆண்டு ஆண்களின் திருமண வயது 14 என்று, பெண்களின் திருமண வயது 12 என்றும் முடிவு செய்யப்பட்டது.

எனினும் குழந்தை திருமணங்கள் ஒழிந்தபாடில்லை. 1927-ம் ஆண்டு ஆண்கள் குறைந்தபட்ச 18 வயது ஆன பின்னரே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பெண்களின் திருமண வயது 14 என்றும் முன்மொழியப்பட்டது. 1929-ம் ஆண்டு சட்டமாக மாறிய இந்த சட்டம் சர்தா சட்டம் என்று அழைக்கப்படுகிறது. 
1978ம் ஆண்டு இந்த சர்தா சட்டம் திருத்தப்பட்டது.

35
Marriage Age Difference

Marriage Age Difference

அதன்பின்னர் ஆண்களுக்கான திருமண வயது 21 என்றும், பெண்களின் திருமண வயது 18 என்றும் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இந்த வயதுக்கு கீழ் திருமணம் என்பது தொடர்கதையாகவே இருந்தது.

2006-ம் ஆண்டு புதிதாக கொண்டுவரப்பட்ட குழந்தை திருமண தடுப்பு  சட்டம், குழந்தை திருமணம் செய்தால் அது குற்றம் என்ற நிலையை உருவாக்கியது. 
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நிதியம், உலகளவில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில் நடைபெறுவதாக கூறுகிறது. இந்தியாவில் மேற்குவங்கம், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகம நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரி, ஆண், பெண் திருமண வயதில் ஏன் வித்தியாசம்?

மிகப்பெரிய போராட்டத்திற்கு பின்னரே ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண வயதில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்ற நிலை தோன்றியது. பெண்களை விட ஆண்களுக்கு அதிக வயது இருக்க வேண்டும் என்றும் குறிக்கப்பட்டது. குழந்தை திருமண தடுப்பு சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம், இந்து திருமண சட்டம், முஸ்லீம் திருமண சட்டம் என எல்லா சட்டத்திலுமே திருமணம் செய்து கொள்ள குறைந்தபட்ச வயது ஆணுக்கு 21 என்றும், பெண்ணுக்கு 18 என்றும் குறிப்பிடுகிறது. 

45
Marriage Age Difference

Marriage Age Difference

திருமண வயதில் மதம் முக்கிய காரணமாக இருந்தாலும், ஆணை விட பெண்ணுக்கு வயது குறைவாக வேண்டும் என்பது வேறு சில காரணங்களுக்கும் இருக்கின்றன. தன்னை விட அதிக வயதுள்ள பெண்ணை திருமணம் செய்யும் போது அங்கு கணவருக்கு அடங்கிப் போக பெண் மறுக்கலாம்.

சமத்துவம் பற்றி ஆணாதிக்க சமூகம் உற்சாகமாக பேசினாலும், பெண்களின் சமத்துவம் என்று வரும் போது அது கேள்விக்குறியாகிவிடும். தங்களை விட வயதில் குறைவாக இருக்கும் பெண்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆண்கள் விரும்புவார்கள். அப்போது தங்கள் கட்டுப்பாட்டில் அவர்களை வைக்க முடியும்.

பெண்களை அவர்களின் தன்மையை இழந்தவர்களாக பயந்தவர்களாக திணறிய ஆளுமைகளாக தங்களின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்றவாறு ஆண்களை மாற்றிக்கொள்ள முடியும். இதனால் தங்கள் ஆசைகளை அடக்கி பிறரின் ஆசைகளை நிறைவேற்றினால் தான் நல்ல பெண் என்ற எண்ணத்திற்கு பெண்கள் வருகின்றனர். மொத்தத்தில் பெண்களை கட்டுப்பாட்டில் வைக்கவே ஆண்களை விட பெண்களின் திருமண வயது குறைவாக உள்ளது.

55
Marriage Age Difference

Marriage Age Difference

ஆனால் கணவன் – மனைவிக்கு இருக்கும் வயது வித்தியாசத்தில் சட்ட அடிப்படைகள் எதுவும் இல்லை. திருமணத்தில் இணைகின்ற தம்பதி எல்லா நிலையில் சமமானவர்கள் தான். இந்த மனநிலை சிலருக்கு தற்போது வந்திருந்தாலும் பெரும்பாலானோருக்கு இன்னும் வரவில்லை. திருமண வயதில் இருக்கும் வேறுபாடு சமத்துவமின்மை. இது சட்டப்பூர்வமாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். 

இந்தியாவில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது 2023 இல் திருத்தப்பட முன்மொழியப்பட்டது. பெண்களின் திருமண வ்யது 18 முதல் 21 அதிகரிக்க இது பரிந்துரைக்கிறது. ஆனால், இந்தத் திருத்தங்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
திருமணம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Recommended image2
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved