- Home
- Lifestyle
- Money Plant: மணி பிளாண்ட்னு ஏன் பேர் வந்துச்சு? நிஜமாவே பணம் கொட்டுமா? அறிவியல், வாஸ்து காரணம் இதோ!
Money Plant: மணி பிளாண்ட்னு ஏன் பேர் வந்துச்சு? நிஜமாவே பணம் கொட்டுமா? அறிவியல், வாஸ்து காரணம் இதோ!
Money Plant: நம்மில் பல பேர் வீடுகளில் மணி பிளாண்ட் இருக்கும். ஆனால், அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று தெரியுமா? ஃபெங் சுய், ஜப்பானிய கதைகள், வாஸ்து என்று இதற்குப் பின்னாடி பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அது குறித்து பார்ப்போம்.

மணி பிளாண்ட்னு ஏன் பேர் வந்துச்சு?
பால்கனி, பாட்டில், தொங்கவிடும் தொட்டி என்று எல்லா இடங்களிலும் இந்த மணி பிளாண்டை நாம் பார்க்க முடியும். ரொம்ப கம்மியான பராமரிப்பு போதும் என்பதால், இது பலருக்கும் பிடித்த செடியாக உள்ளது. ஆனால், இதற்கு ஏன் மணி பிளாண்ட் என்று பெயர் வந்தது என்று எப்பவாவது யோசித்ததுண்டா? இந்த செடி நிஜமாவே பணத்தைக் கொண்டு வருமா? இதற்குப் பின்னாடி எந்த மேஜிக்கும் கிடையாது. ஆனால், மூன்று சுவாரஸ்யமான கதைகளும் நம்பிக்கைகளும் உள்ளன.
1. ஃபெங் சுய் நம்பிக்கை
மணி பிளாண்ட்டின் இலைகள் வட்டமாக, பளபளப்பாக, பார்க்கக் காயின் மாதிரி இருக்கும். காயின் மாதிரி இலைகள் இருக்கிற செடி, வீட்டுக்குச் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என்று பழங்கால சீன ஃபெங் சுய் சாஸ்திரத்தில் நம்பினார்கள். இந்த நம்பிக்கையிலிருந்துதான் இதற்கு மணி பிளாண்ட் என்று பெயர் வந்தது. இதன் அறிவியல் பெயர் எபிபிரெம்னம் ஆரியம் (Epipremnum aureum).
2. ஜப்பானிய நாட்டுப்புறக் கதை
இதில் ரொம்பப் பிரபலமான கதை ஜப்பானிலிருந்து வருகிறது. ஒரு ஏழை விவசாயி, காட்டில் ஒரு அழகான செதியைப் பார்த்தாராம். அதை வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்த்து, அதோட கன்றுகளை விற்க ஆரம்பிச்சாராம். அந்த கன்றுகளை விற்று அவர் கொஞ்சம் கொஞ்சமாகப் பணக்காரர் ஆயிட்டாராம். அப்போ இருந்து, இந்த செடி பணத்தைக் கொண்டு வரும்னு மக்கள் நம்ப ஆரம்பிச்சாங்க.
3. ஈஸியாக வளரும்
மணி பிளாண்ட்டின் ஒரு கிளையை வெட்டித் தண்ணியில் வைத்தாலே புதுச் செடி வளர ஆரம்பித்துவிடும். அதாவது, இது ரொம்ப வேகமாக வளரும். பழைய காலத்தில், நண்பர்கள் அல்லது சொந்தக்காரர்களுக்கு அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து இந்தச் செடியைப் பரிசாகக் கொடுப்பார்கள். பணம் எப்படி பெருக்குமோ, அதே மாதிரி இந்த செடியும் வளரும்னு ஒரு நம்பிக்கை இருந்தது.
வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது?
வாஸ்துப்படி, மணி பிளாண்டை வீட்டின் வடக்கு அல்லது தென்கிழக்கு மூலையில் வைப்பது ரொம்ப நல்லது. இந்த செடியை எப்போது காய விடக்கூடாது. அப்படி காய்ந்து போனால், அது பண நஷ்டத்தின் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
அறிவியல் என்ன சொல்கிறது?
நாசா செய்த ஒரு ஆராய்ச்சியில், மணி பிளாண்ட் காற்றில் இருக்கிற நச்சுக்களை உறிஞ்சி, காற்றைச் சுத்தப்படுத்துகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். இது நேரடியாகப் பணத்தை கொண்டு வராது. ஆனால், வீட்டில் ஒரு பாசிட்டிவான சூழ்நிலையை உருவாக்கி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மனது நன்றாக இருந்தால் வேலை நன்றாக நடக்கும், வேலை நன்றாக நடந்தால் தானாவே பணமும் வரும். ஆகையால் மணி பிளாண்ட் என்பது பணத்தைக் காய்க்கிற செடி கிடையாது. அது அதிர்ஷ்டம் மற்றும் பாசிட்டிவ் எனர்ஜியின் அடையாளம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

