ஏன் பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் ரயில் வேகமாக செல்கிறது? பலருக்கும் தெரியாத தகவல்
செலவு குறைவு, வசதியான பயணம் ஆகியவை காரணமாக ரயில் பயணங்களை பலரும் தேர்வு செய்கின்றனர்.

இந்திய ரயில்வே நம் நாட்டின் மிகப்பெரிய பொதுப் போக்குவரத்து துறையாக உள்ளது. ஒவ்வொரு நாளும் குறைந்தது இலட்சக்கணக்கான மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இந்திய இரயில்வேயைப் பயன்படுத்திப் பயணிக்கின்றனர்.
பகல் இரவு வித்தியாசம் இல்லாமல் ரயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால் ஆச்சரியமான ஒன்றை கவனித்தீர்களா?ஆனால் பகல் நேரத்தை விட, இரவு நேர ரயில் வேகமாக செல்கிறது. அது ஏன் தெரியுமா?
தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். செலவு குறைவு, வசதியான பயணம் ஆகியவை காரணமாக ரயில் பயணங்களை பலரும் தேர்வு செய்கின்றனர். ஆனால் பகலை விட இரவில் ரயில்கள் வேகமாக இயக்கப்படுகின்றன.
இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இரவில் ரயிலின் வேகம் ஏன் அதிகரிக்கிறது? அதற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் இதோ.
பகலில் அனைத்து ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தண்டவாளத்தை கடந்து மறுபக்கம் செல்கிறார்கள். சுரங்கப்பாதையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் ரயில் தடங்களைக் கடந்து பிளாட்பாரங்களை மாற்றுவது மிகவும் ஆபத்தானது. அதுமட்டுமின்றி விலங்குகளும் பகலில் ரயில் தண்டவாளத்தை கடக்கின்றன. எனவே ரயில் வேகமாக இருந்தால் ஆபத்து அதிகம். ஆனால் இரவில் அந்த பிரச்சனை இல்லை.
இரவில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் இயக்கம் குறைகிறது, இது ரயில் ஓட்டுநருக்கு வசதியானது. இதனால் ரயிலின் வேகம் இரவில் அதிகமாக இருக்கும்.
நீங்கள் பகலில் ரயிலில் பயணம் செய்திருந்தால், தண்டவாளத்தில் நடக்கும் பராமரிப்புப் பணிகளால் சில நேரங்களில் ரயில்கள் திடீரென நின்றுவிடுவதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். ஆனால் இரவில் அப்படி ஒரு பிரச்சனை இல்லை. ஏனெனில் இரவில் ரயில் பாதை பணிகள் நடக்கவில்லை. இதனால் ரயில் வேகமாக செல்ல முடிகிறது.