MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Chia Seeds or Pumpkin Seeds : சியா விதைகள் vs பூசணி விதைகள்; இரண்டில் எந்த விதைகள் ஆரோக்கியத்தை சிறந்தது?

Chia Seeds or Pumpkin Seeds : சியா விதைகள் vs பூசணி விதைகள்; இரண்டில் எந்த விதைகள் ஆரோக்கியத்தை சிறந்தது?

சியா விதைகள் அல்லது பூசணி விதைகள் இந்த இரண்டு விதைகளும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், எது சிறந்தது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 10 2025, 10:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Chia Seeds vs Pumpkin Seeds
Image Credit : today.com

Chia Seeds vs Pumpkin Seeds

சமீப காலமாகவே பலரும் தங்களது உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். தங்கள் உடல் நலத்தை பற்றி துளியும் கூட அக்கறை கொள்ளாதவர்கள் கூட தற்போது தங்களது ஆரோக்கியத்தை முறையாக கவனித்துக் கொண்டு வருகின்றனர். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில உணவுகளுடன் விதைகளும் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. விதைகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி செரிமானம் போன்றவை பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. அந்த வகையில் சில விதைகள் மற்றும் பூசணி விதைகள் இவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இருந்தபோதிலும் இந்த இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

24
சியா விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் :
Image Credit : Getty

சியா விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் :

நீங்கள் உணவில் நார்ச்சத்தை அதிகம் சேர்க்க விரும்பினால் சியா விதைகள் தேர்வு செய்யலாம். ஏனெனில் சியா விதைகளில் பூசணி விதைகளை விட ஐந்து மடங்கு நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இந்த நார்ச்சத்தானது வயிறை நீண்ட நேரம் நிரம்பி இருக்கும் உணர்வை வழங்கும். இதனால் எடையை சுலபமாக கட்டுப்படுத்தலாம். மேலும் ஆரோக்கியமான செரிமானத்திற்கும் உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், சியா விதைகள் பெரிதும் உதவுகிறது. கூடுதல் சியா விதைகள் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரமாக இருப்பதால், இது ஆரோக்கியத்திற்கும் மூளை செயல்பாட்டிற்கும் மிகவும் நன்மை பயக்கும். சியா விதைகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் இது எலும்புகளை வலிமையாக வைக்க உதவுகிறது.

Related Articles

Related image1
Pumpkin Seeds : பூசணி விதையை சாதாரணமா நினைக்காதீங்க! பெண்கள் கட்டாயம் சாப்பிடணும் தெரியுமா?
Related image2
Flax Seeds vs Chia Seeds : சியா விதை vs ஆளி விதை : இரண்டில் முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?
34
பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் :
Image Credit : Getty

பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் :

சியா விதைகளை விட பூசணி விதைகளில் அதிக புரதம் உள்ளன. இது தசை வலிமைக்கு உதவுகிறது. அதுபோல பூசணி விதைகளில் மெக்னீசியம் அதிகமாக உள்ளதால், அது நரம்பு மற்றும் தசை செயல்பாட்டை ஆதரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தையும் ஒழுங்குப் படுத்துகிறது. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. பூசணி விதைகளில் இருக்கும் வைட்டமின் ஈ அலர்ஜி எதிர்ப்பு நன்மைகளை நமக்கு வழங்குகிறது.

44
சியா விதைகள் அல்லது பூசணி விதைகள் : எது பெஸ்ட்?
Image Credit : Getty

சியா விதைகள் அல்லது பூசணி விதைகள் : எது பெஸ்ட்?

பூசணி விதைகள் மற்றும் சியா விதைகள் இவை இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆகவே இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இரண்டையும் உங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது ரொம்பவே நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இப்படியாக சியா விதைகளில் இருந்து நார்ச்சத்து மற்றும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்களையும், பூசணி விதைகளிலிருந்து மெக்னீசியம் மற்றும் புரதத்தையும் பெறலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Related Stories
Recommended image1
Pumpkin Seeds : பூசணி விதையை சாதாரணமா நினைக்காதீங்க! பெண்கள் கட்டாயம் சாப்பிடணும் தெரியுமா?
Recommended image2
Flax Seeds vs Chia Seeds : சியா விதை vs ஆளி விதை : இரண்டில் முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved