வெறும் நெற்றியை பார்த்தே 'உங்களை' பற்றி சொல்ல முடியும்.. இதுதான் 'அந்த' ரகசியம்
Forehead Shape And Personality : ஒருவரது நெற்றியின் வடிவத்தை வைத்து அந்த நபரின் ஆளுமை பற்றிய பல ரகசியங்களை சொல்லிவிடலாம். அது எப்படி என்று இங்கு காணலாம்.

வெறும் நெற்றியை பார்த்தே 'உங்களை' பற்றி சொல்ல முடியும்.. இதுதான் 'அந்த' ரகசியம்
உங்களது உடல் அம்சங்கள் வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிடலாம். அவற்றில் ஒன்று தான் உங்களது நெற்றியின் வடிவத்தை வைத்து உங்களது ஆளுமை பற்றிய பல ரகசியங்களை வெளிப்படுத்தும். உண்மையில், நம்முடைய முகத்தின் ஒவ்வொரு அம்சமும் நமது ஆளுமை பற்றிய பல ரகசியங்களைச் சொல்லுகின்றது. எனவே, உங்களது நெற்றி அகலமாகவோ, மெல்லியதாகவோ அல்லது M வடிவத்திலோ இருந்தால் அது உங்களது தோற்றத்தை மட்டுமல்ல, உங்களது ஆளுமை பற்றிய பல ரகசியங்களையும் சொல்லும். எனவே இந்த பதிவில் உங்களது நெற்றியின் வடிவம் உங்களது ஆளுமையை பற்றி என்ன வெளிப்படுத்துகிறது என்பதை காணலாம்.
பெரிய நெற்றி உள்ளவர்கள்:
பெரிய நெற்றி உள்ளவர்கள் புத்திசாலிகள் மற்றும் திறந்த மனதுடையவர்கள். இவர்கள் விரைவாக எதையும் கற்றுக் கொள்வார்கள் மற்றும் எந்த பணிகளையும் சுலபமாக செய்வதில் வல்லவர்கள். வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு சுலபமாக கையாளுவது என்பது இவர்களுக்கு நன்றாக தெரிந்திருப்பதால், பெரும்பாலான மக்கள் இவர்களிடம் ஆலோசனையை கேட்க விரும்புவார்கள். இவர்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களின் ஈர்ப்பு மையமாக இருப்பார்கள். இந்த பண்பு பொதுவாக பிரபலங்கள் மற்றும் வெற்றிகரமான தொழிலதிபர்களிடம் தான் காணப்படும். முக்கியமாக
இந்த நெற்றியில் உள்ளவர்களிடம் இருக்கும் குறை என்னவென்றால், அவர்கள் சில சமயங்களில், கோபப்படும் போது தங்களது நல்ல குணங்களை மறந்து விடுகிறார்கள்.
சிறிய நெற்றி உள்ளவர்கள் :
சிறிய நெற்றி உள்ள நபர்கள் பெரும்பாலும் தங்களது மனதின் படி தான் நடப்பார்கள். சொந்தமாக தொழில் தொடங்கினால் கூட நீங்கள் உங்களுடன் ஒத்துப்போனவர்களை மட்டுமே கூட்டாளியாக சேர்ப்பீர்கள். மற்றவர்களின் வார்த்தைகளை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். உங்களுக்கு பிடித்தவாறு தான் உங்களது வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள்.
இதையும் படிங்க: நீங்க ஹேண்ட் பேக்கை போடும் ஸ்டைலை வச்சு உங்கள பத்தி சொல்ல முடியும் தெரியுமா?
வளைந்த நெற்றி உள்ளவர்கள் :
உங்களது நெற்றி வளைந்து இருந்தால் நீங்கள் அமைதியானவர் மற்றும் அதிக தன்னம்பிக்கை உடையவர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக வைக்க விரும்புவீர்கள். முக்கியமாக மற்றவர்களிடம் பேசும் போது நேர்மறையான வார்த்தைகளை பேசி அவர்களை ஊக்குவிப்பீர்கள். இதனால் தான் அனைவருக்கும் உங்களை ரொம்பவே பிடிக்கும். உங்களிடம் இருக்கும் அமைதியான குணம் தான் எப்பேர்ப்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் கூட எளிதாக கடந்து செல்ல உதவுகிறது.
இதையும் படிங்க: வெறும் நடையை வைத்தே உங்க மொத்த ஜாதகத்தையும் கண்டுபிடிக்கலாம் தெரியுமா? இந்தமாதிரி நடக்குறவங்ககிட்ட பணம் சேரும்
M வடிவ நெற்றி உள்ளவர்கள் :
M வடிவத்தில் உங்களது நெற்றி இருந்தால் நீங்கள் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்கள் மற்றும் கலைநயமிக்கவர். ஏதாவது ஒரு கலை மூலம் உங்களை வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் பொதுவாக அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பீர்கள். கோபப்பட்டாலும் மற்றவர்கள் மீது எந்தவிதமான வெறுப்பையும் வைத்திருக்க மாட்டீர்கள். நீங்கள் உங்களது வாழ்க்கையில் ரொம்பவே அழகாக வாழ்வீர்கள் மற்றும் தோல்விகளை நன்றாக கையாளுவீர்கள். உங்களிடம் நல்ல கற்பனை மற்றும் படைப்பாற்றல் திறன் இருப்பதால் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.