MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களே இல்லன்னா என்னாகும்? அதிர்ச்சி தகவல் 

வாழ்க்கையில் நெருங்கிய நண்பர்களே இல்லன்னா என்னாகும்? அதிர்ச்சி தகவல் 

நெருங்கிய நண்பர்கள் குறைந்து வருவதால் மக்களிடையே "நட்பு மந்தநிலை" காணப்படுகிறது.  

2 Min read
Kalai Selvi
Published : Apr 15 2025, 02:49 PM IST| Updated : Apr 15 2025, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

What Will Happen If You Have No Close Friends : நண்பர்கள் இல்லாத வாழ்க்கையை பலரால் கற்பனை கூட செய்யமுடியாது. ரத்த பந்தம் இல்லாமல் நம்மீது அக்கறை கொள்ளக் கூடிய, அன்பு செலுத்தக் கூடிய உறவுகளாக தான் நண்பர்கள் இருக்கிறார்கள். 'நட்புக்காக', ப்ரெண்ட்ஸ் போன்ற திரைப்படங்களுக்கு இப்போதும் பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் நட்புக்கான மந்தநிலை நிலவுவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. 

26
No Close Friends

No Close Friends

மக்களிடையே நெருங்கிய நண்பர்கள் குறைந்துவிட்டனர். அதனால் நட்பு மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தை சாதாரணமாக பார்க்க முடியாது. ஒரு மனிதன் பண்படுவதில் நட்புக்கும் பங்குண்டு. 'உன் நண்பன் யாரென்று சொன்னால் நீ யாரென சொல்லமுடியும்' என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவனை சுற்றியுள்ள நட்பு வட்டமும் ஒரு காரணம்தான். நல்ல நண்பர்கள் இருந்தால் எதுவும் சாத்தியம். 

இதையும் படிங்க:  ஃபேஸ்புக் யூசரா நீங்கள்? புதிய பிரண்ஸ்ட் டேப் பத்தி தெரியுமா?

36
No Close Friends

No Close Friends

நட்பு மந்தநிலை: 

அமெரிக்காவில் தற்போது  நெருங்கிய உறவுகள் குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதாவது நேருக்கு நேர் தொடர்பு கொள்ளும் சமூகமயமாக்கல் நடவடிக்கைகள் குறைந்து வருகின்றன. இதை கண்டறிய முக்கிய காரணியாக இருந்தது ஒரு தனிமனிதரின் நட்பு வட்டம் சுருங்கியதுதான். ஒருவர் சமூகத்தில் உள்ளவர்களுடன் கொண்டுள்ள தொடர்புகள், அவர்களுடன் காட்டும் இணக்கம் ஆகியவற்றை ஆராயும்போது மக்களிடையே நட்பு மந்தநிலை காணப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  

இதையும் படிங்க:  காஜல் அகர்வால் முதல் கீர்த்தி சுரேஷ் வரை; நண்பர்களையே காதலித்த தென்னிந்திய நடிகைகள் லிஸ்ட்!

46
No Close Friends

No Close Friends

அதிருப்தி:  

மக்களிடையே நட்பு மந்த நிலை காணப்படுவது  மனநல நிபுணர்களிடையே  கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவர் தனிமையை உணராமல் உணர்வுபூர்வமாவும், சமூகத்துடன் ஒன்றியும் வாழ  நட்பு வட்டாரம் தான் காரணமாக அமையும். அதுவே தற்போது குறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

56
No Close Friends

No Close Friends

இது மாதிரியான ஆய்வினை 1990ஆம் ஆண்டில் நடத்தும்போது 33% மக்கள் தங்களுக்கு குறைந்தபட்சம் 10 அல்லது 10க்கும் மேற்பட்ட நெருங்கிய நண்பர்கள் இருப்பதாக கூறியிருந்தனர்.  சில ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து 13% ஆக மாறியது.  இந்த ஆய்வுகள் அமெரிக்க மக்களிடையே நடத்தப்பட்டது. உலகம் டிஜிட்டல் மயமான பிறகு மக்களிடையே நேரடி தொடர்பு குறைந்துவிட்டது. மக்களில் பலருக்கு நெருங்கிய நண்பர்களே இல்லாத சூழல் சமூக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலை சுட்டிக்காட்டுகிறது. 

66
No Close Friends

No Close Friends

நெருங்கிய நண்பர்கள் இல்லாவிட்டால்..

நண்பர்களே இல்லாமல் வாழும்பட்சத்தில் அவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு தனிமையான உணர்வு ஆட்டிப்படைக்கலாம். சுயமதிப்பீடு குறையலாம். நட்பு வட்டம் இல்லாதவர்கள் வித்தியாசமான கோணங்களில் வாழ்க்கையை அணுகாமல் கடிவாளம் பூட்டிய குதிரையை போல யோசிப்பார்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
நண்பர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Winter Constipation Remedies: குளிர்காலத்தில் மலச்சிக்கல் தொந்தரவு கஷ்டமில்லாம 'காலைக்கடனை' முடிக்க சூப்பர் டிப்ஸ்
Recommended image2
Weight Lifting For Women : பெண்கள் கண்டிப்பா 'எடை' தூக்கும் பயிற்சி செய்யனும்!! அதோட நன்மைகள் அவ்ளோ இருக்கு
Recommended image3
குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved