Navaratri 2022: நவராத்திரி நாளில் என்ன செய்யலாம்..? என்ன செய்யக்கூடாது..? கட்டாயம் தெரிந்து வச்சுக்கோங்கோ..
Navaratri 2022: நவராத்திரி நாட்களில் நீங்கள் சில பொருட்களை வைத்திருப்பது சுபமாகவும், சில பொருட்களை வைத்திருப்பது அசுபமாகவும் கருதப்படுகிறது. அப்படி இந்த 2022 ஆம் ஆண்டின் நவராத்திரி உங்களுக்கு சிறப்பாக இருக்க இவையெல்லாம் பின்பற்றுங்கள்.
Navaratri 2022:
நவராத்திரி பண்டிகை நாளில், அன்னை ஆதிபராசக்திக்கு ஒன்பது இரவுகள் கோலாகலமாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வழிபாடுகள் செய்யப்படுகின்றன. நாடு முழுவதுமே ஒவ்வொரு மாநிலத்தவரும் அவரவரின் வழக்கத்திற்கு ஏற்ப நவராத்திரியை மிக விமரிசையாக கொண்டாடுகின்றனர். இந்த நாட்களில் எதையெல்லாம் செய்யலாம் மற்றும் செய்யவே கூடாது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்...
Navaratri 2022:
கொலு வைப்பவர்களின் கவனத்திற்கு:
கொலு வைப்பவர்கள் காலை மாலை என்று இரண்டு வேளையும் விளக்கேற்றி தவறாமல் நெய்வேத்தியம் செய்து வணங்க வேண்டும். அதேபோன்று, அம்பாளின் திருவுருவப்படங்களையே பூஜை செய்து தினமும் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.
பிறரை மதிக்க கற்று கொள்ள வேண்டும்:
பிறரை அவமரியாதை செய்யும் படி நடந்து கொள்ளக்கூடாது. குறிப்பாக, பெண்களுக்கு மரியாதை அளிப்பதை கற்றுக்கொள்ள வேண்டும் அதன்படி நடக்க வேண்டும். இந்த நாட்களில் வீடு அமைதியாக இருக்க வேண்டும். எனவே தேவையில்லாத சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது.
Navaratri 2022:
பழைய காலணிகள் மற்றும் செருப்புகள்
நவராத்திரியின் போது பழைய காலணிகள் அல்லது செருப்புகள், உடைந்த கண்ணாடிப் பொருட்களை வீட்டில் வைத்திருப்பது மங்களகரமானதாகக் கருதப்படுவதில்லை. அவர்களை தூக்கி எறியுங்கள்.
சிலந்தி வலைகள்:
சிலந்தி வலைகள், வாஸ்து சாஸ்திரத்தின் படியும் மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. எனவே, அவற்றை வீட்டில் இருந்து அகற்ற வேண்டும்.
Navaratri 2022:
உடைந்த சிலைகள் அல்லது படங்கள்
ஜோதிடத்தின் படி, வீடு அல்லது பூஜை அறையை சுத்தம் செய்யும் போது, சிலைகள் அல்லது தெய்வங்களின் படங்கள் எதுவும் உடைக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உடைந்தால், உடனடியாக அதை வீட்டிலிருந்து அகற்றி ஆற்றிலோ அல்லது குளத்திலோ போட்டு விட வேண்டும். இல்லையெனில், அது வீட்டில் எதிர்மறை சக்தியை உருவாக்குகிறது.
Navaratri 2022:
பூண்டு-வெங்காயம்
நவராத்திரியின் போது ஒன்பது நாட்களும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். அதே சமயம் நவராத்திரி பூஜையின் போது ஒன்பது நாட்களுக்கு வீட்டில் சாத்வீக உணவு மட்டுமே சமைக்க வேண்டும். எனவே, பூண்டு, வெங்காயம், இறைச்சி, மதுபானம் போன்றவற்றை உட்கொள்வது மட்டுமின்றி, நவராத்திரியின் போது வீட்டில் வைப்பதும் அசுபமாக கருதப்படுகிறது.
Navaratri 2022:
பழைய உணவு
நவராத்திரியில் அம்மனை வழிபடும் முன், உங்கள் வீட்டில் ஏதேனும் உணவு அல்லது பானங்கள் கெட்டுப் போனாலோ, அல்லது சமையலறையில் பழமையான உணவுகள் இருந்தாலோ, அதை வீட்டிலிருந்து அகற்றவும்.
Navaratri 2022:
தினமும் அம்மனுக்கு நைவேத்தியம்:
ஒன்பது நாட்களில் வெள்ளிக்கிழமையன்று பெண்களை அழைத்து விருந்து வைத்து புடவையோ அல்லது ரவிக்கைத் துணியோ வாங்கி கொடுத்து ஆசீர்வாதம் பெறலாம். தினமும் அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் உணவை சிறுமிக்கு சாப்பிட கொடுப்பது மிகவும் நல்லது.