MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அதென்ன 8+8+8 விதி.. மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு இப்படி ஒரு வழியா? 

அதென்ன 8+8+8 விதி.. மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு இப்படி ஒரு வழியா? 

8+8+8 Rule For Work Life Balance : வாழ்க்கையை சமநிலையில் வைத்திருக்க 8+8+8 விதியை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 07 2025, 03:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
8+8+8 Rule For Work Life Balance in Tamil

8+8+8 Rule For Work Life Balance in Tamil

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சீரான வாழ்க்கையை வாழ்வது கடினமாக உள்ளது. நேர மேலாண்மையை முறையாக கையாள்வது பலருக்கும் முடியாத காரியமாக உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான வேலைகளை செய்வதற்கே ஒவ்வொருவருக்கும் நேரம் இருக்கிறது. இதனால் வாழ்க்கை தரத்தை, ஆரோக்கியத்தை மேம்படுத்த நேரத்தை செலவிட முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். நேரத்தைத் திறம்பட கையாள 8+8+8 விதி உதவும். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
What is 8+8+8 Rule In Tamil

What is 8+8+8 Rule In Tamil

அதென்ன 8+8+8 விதி?  

உங்களுடைய 24 மணி நேரத்தை 8+8+8 என மூன்று பகுதிகளாக பிரிப்பது நேரத்தை திறம்பட செலவழிக்க உதவும். இதையே 8+8+8 விதி என்கிறார்கள்.  இந்த நேரத்தில் எப்படி வேலைகளை செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

இதையும் படிங்க:  இந்த விஷயங்களில் ஒருபோதும்  அவசர முடிவு எடுக்காதீங்க...பின்னாடி வருத்தப்படுவீங்க...

35
8+8+8 Rule in Tamil

8+8+8 Rule in Tamil

8 மணி நேர வேலை: 

இந்த நேரம் உங்களுடைய உற்பத்தி நேரம் என சொல்லப்படுகிறது. இதில் கல்வி, வேலை, தொழில் ஆகியவை செய்யலாம்.  உங்களுடைய தனிப்பட்ட இலக்குகள், வேலை போன்றவற்றிற்கு இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 

ஓய்வுக்கு 8 மணி நேரம்: 

உங்களுடைய ஓய்வுக்கு 8 மணி நேரத்தை நீங்கள் அவசியம் ஒதுக்க வேண்டும். இந்த நேரம் எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் ஓய்வெடுக்க வேண்டும். உங்கள் மனதை அமைதிப்படுத்த இந்த நேரத்தை பயன்படுத்த வேண்டும். ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்க உடல் மற்றும் உள்ள ஆரோக்கியம் அவசியமானது. இதற்கென 7 முதல் ஒன்பது மணி நேரம் வரை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 8 மணி நேரம் தூக்கம் அவசியம். 

45
Benefits of Applying the 8+8+8 Rule in tamil

Benefits of Applying the 8+8+8 Rule in tamil

தனிப்பட்ட விஷயங்களுக்கு 8 மணி நேரம்: 

உங்களுடைய 3F-களுக்கு நேரம் கொடுக்க வேண்டும்.  குடும்பம் (Family), நண்பர்கள் (Friends), நம்பிக்கை (Faith) ஆகியவை தான் 3F ஆகும். அதைப் போல 3H-களுக்கு கவனம் அளிக்க வேண்டும். அவை ஆரோக்கியம், சுகாதாரம், பொழுதுபோக்கு ஆகியவை. 3S  என சொல்லப்படும் ஆன்மா, சேவை, புன்னகை  இவற்றை அன்றாடம் செய்வதில் கருத்தாய் இருக்க வேண்டும். ஒரு மனிதன் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களுக்கு நேரம் கொடுப்பது அவருடைய நாளில் இன்றியமையாத பகுதியாகும். உங்களுடைய விருப்பமான செயல்களை செய்ய, நீங்கள் நேசிக்கும் நபர்களுடன் நேரம் செலவிட இந்த நேரத்தை பயன்படுத்த வேண்டும். ஓய்வு நேரத்திற்கு முன் புத்தகம் வாசிப்பது, தியானம் செய்வது ஆகியவற்றை செய்யலாம். ஆனால் தூங்கும் முன் டிவி, செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.  

இதையும் படிங்க:  Tips to Live 100 Years: 100 ஆண்டுகள் வாழ எளிய வழிகள்!

55
Work-life balance in tamil

Work-life balance in tamil

8+8+8 விதி நன்மைகள்: 

- உங்களுடைய நேரத்தை சிறப்பாக செலவிட இந்த விதி உங்களுக்கு பயன்படுகிறது. வேலை, தனிப்பட்ட விருப்பங்கள் ஆகியவற்றிற்கு நேரத்தை முறையாக ஒதுக்குவதன் மூலமாக நீங்கள் உங்களுடைய உறவையும், அதே நேரத்தில் தொழிலையும் கவனித்துக் கொள்ள முடியும். 

- உங்களுடைய வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரத்தை செலவிடுவதால் உங்களுடைய மன அழுத்தம் குறைகிறது. இதனால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும். 

- சரியான நேரத்திற்கு ஓய்வெடுத்து நிதானமாக வேலை செய்வதால் உங்களுடைய உற்பத்தி திறன் அதிகரிக்கும் உங்களுடைய வேலையும் திறம்பட செயல்படும் வாய்ப்பு கிடைக்கிறது. 

- 8+8+8 விதி சொல்வதற்கு எளிய விஷயமாக இருந்தாலும் அதை செயல்படுத்துவது சற்று கடினம்தான். உங்களுடைய நேரத்தை சிந்தித்து பயன்படுத்துவதால் ஓய்வு, வேலை, தனிப்பட்ட விருப்பங்கள் (personal desires and space) ஆகியவை சமமாக பிரிகின்றன. இதனால் குடும்பம், தொழில், தனிப்பட்ட விஷயங்களை உங்களால் சமநிலையில் கையாள முடியும். இது ஒரு மனிதனை பண்படுத்தும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved