MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • 'ஓ' ரத்தப்பிரிவினர் அதே ரத்த வகை கொண்டவர்களை 'திருமணம்' செய்யலாமா? அறிவியல் உண்மை!! 

'ஓ' ரத்தப்பிரிவினர் அதே ரத்த வகை கொண்டவர்களை 'திருமணம்' செய்யலாமா? அறிவியல் உண்மை!! 

'ஓ' ரத்தப்பிரிவை சேர்ந்த ஆண்கள் அதே ரத்தப்பிரிவை கொண்ட பெண்களை திருமணம் செய்யலாமா? என்பதை குறித்து இந்தப் பதிவில் காணலாம்.  

2 Min read
Author : Kalai Selvi
Published : Mar 08 2025, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Can O Positive Blood Group Marry Each Other : மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு ரத்த வகை பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். திருமண வாழ்க்கைக்கு ரத்த வகை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் இருவர் இணைந்து குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என நினைக்கும்போது ரத்த வகையை குறித்து சற்று கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக உங்களுடைய வாழ்க்கை துணையின் ரத்த பிரிவு குறித்து தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். அவசர காலங்களில், கர்ப்பக் காலத்தில் இரத்த பிரிவு முக்கிய பங்காற்றுகிறது. இந்த பதிவில் ரத்த வகைகள் குறித்தும், 'ஓ' ரத்தப்பிரிவை சேர்ந்த ஆண்கள் அதே ரத்தப்பிரிவை கொண்ட பெண்களை திருமணம் செய்யலாமா? என்பது குறித்தும் காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இரத்த வகைகள்:

இரத்த வகைகள்:

ஒவ்வொருவருக்கும் இரத்த வகை மாறுபடும். இதுவரை நான்கு இரத்த வகைகள் குறித்து அறிவியல் நமக்கு சொல்கிறது. அவை: A,B,O,AB ஆகியவை ஆகும். இந்த ரத்த வகைகள் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் ஆன்டிஜென்கள் மற்றும் ஆன்டிஜென்கள் இல்லாதிருத்தல் மூலம் வேறுபடுகின்றன. இந்த நான்கு ரத்தக் குழுக்களுடன்  ஒவ்வொரு குழுவிலும் (+) அல்லது இல்லாத (-) Rh காரணி எனப்படும் புரதம் இருக்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் ரத்தப் பிரிவுகள் மேலும் எட்டு வகைகளாக பிரிகிறது. அந்த வகையில், ஏ பாசிடிவ், நெகடிவ் (A+,A-), பி பாசிடிவி, நெகடிவ் (B+,B-), ஓ பாசிடிவ், நெகடிவ், (O+, O-), ஏபி பாசிடிவ், நெகடிவ் (AB+,AB-) என பிரிக்கலாம். ரத்த வகையை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. அது மரபுரிமையாக வருவதாகும். நாம் நினைத்தாலும் அதை மாற்ற முடியாது.

இதையும் படிங்க:  O+ ரத்த வகையை சேர்ந்தவர்கள் எப்படி பட்டவர்கள் தெரியுமா?

34
இரத்த பிரிவு கர்ப்பத்தை எவ்வாறு பாதிக்குமா?

இரத்த பிரிவு கர்ப்பத்தை எவ்வாறு பாதிக்குமா?

திருமணப் பந்தத்தில் இருக்கும் இருவருக்கும் ரத்த வகையில் பிரச்சனை இல்லை. ஆனால் கர்ப்பம் என்று வரும்போது ரத்தப் பிரிவில் தம்பதிகள் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் RH காரணியை கவனிக்க வேண்டும். Rh காரணி என்பது ஒரு பரம்பரை புரதம், அது Rh எதிர்மறை (-) அல்லது Rh நேர்மறை (+) என இருக்கிறது. இது ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுடைய  பெற்றோரால் தீர்மானிக்கப்படும். பொதுவாக Rh (+) நேர்மறை  அதிமாக காணப்படும் வகையாகும். Rh (+), Rh (-) ரத்தப்பிரிவுகள் ஆரோக்கியத்தை பாதிக்காது. ஆனால் கர்ப்பத்தை பாதிக்கலாம். அதாவது இருவரில் ஒருவர் Rh நெகட்டிவாகவும், மற்றவர் Rh பாசிட்டிவாகவும் இருந்தால் அது சிக்கலை உண்டாக்கும்.  இந்த பிரச்சனை ஏற்படாமல் தடுக்க கர்ப்பக் காலத்தில் மருத்துவரிடம் தொடர் கண்காணிப்பு செய்யவேண்டும். 

இதையும் படிங்க:  ஒரே ரத்த வகை உள்ளவர்களை திருமணம் செய்ய போகிறீர்களா..? அப்படினா..திருமணத்திற்கு முன்பு கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

44
'ஓ' ரத்தப் பிரிவினர் அதே ரத்தப் பிரிவினரை திருமணம் செய்யலாமா?

'ஓ' ரத்தப் பிரிவினர் அதே ரத்தப் பிரிவினரை திருமணம் செய்யலாமா?

 'O' பாசிட்டிவ் இரத்த வகை உள்ள ஆண்கள் அதே தன்மை கொண்ட 'O' பாசிட்டிவ் ரத்தம் கொண்ட பெண்ணை திருமணம் செய்தால் அவர்களுடைய குழந்தைகளும் 'O' பாசிட்டிவ் ஆகவே பிறப்பார்கள். இதனால் ஆபத்து இல்லை. ஒரு துணை Rh (-), மற்றவர் Rh (+) இருந்தால்தான் அது பிரச்சனை. இருவரும் O பாசிட்டிவ் எனில் இரத்த வகை பொருந்தாத தன்மையில் எவ்வித பிரச்சினையும் வரப்போவதில்லை. தம்பதிகள் இருவருமே ஒரே வகை ரத்தப்பிரிவை  கொண்டிருந்தால் கர்ப்பம் தரிக்கும்போது பிரச்சினைகள் ஏற்படும் ஆபத்தில்லை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved