MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?

Left side sleeping: தூங்கும் போது ஏன் இடது பக்கம் தூங்குது நல்லது..? இதனால் உண்டாகும் பலன்கள் என்ன.?

Left side sleeping: நாம் உறங்கும் போது எவ்வாறு படுத்து தூங்க வேண்டும்..? இடது பக்கம் தூங்குவதானால் ஏற்படும் பலன்கள் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Oct 03 2022, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
sleeping

sleeping

நாம் பகல் முழுவதும் ஓடி ஓடி உழைத்துவிட்டு இரவில் தூங்க செல்லும் போது, பல்வேறு திசைகளில் தூங்குவது வழக்கம். அப்படி உறங்கும் போது, சில நேரம் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதற்கான காரணம் என்ன என்று நீங்கள் என்றாவது சிந்தித்து பார்த்தது உண்டா..? எனவே ஒருவர் தூங்கும் திசையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பொதுவாக, நீங்கள் குப்புற படுத்து, அண்ணார்ந்து அல்லது மல்லார்ந்து தூங்குவதை வலது புறம் படுத்து தூங்குவதை காட்டிலும் இடது புறம் தூங்குவதால் பல்வேறு நன்மைகள் வந்து சேரும். இதனை பற்றிய விரிவான தகவலை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். 

24
sleeping

sleeping

ஏன் ஒருவர் இடது புறமான படுத்து தூங்க வேண்டும்:
 
இடது பக்கமாக தூங்குவது உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிப்பதாக இருக்கும்.

இடது பக்கத்தில் தூங்கும் போது, இரைப்பையில் உள்ள அமிலமானது உணவுக்குழாய்க்கு செல்லும் வாய்ப்பு குறைவாக இருக்கும். 

நீங்கள் இடது புறமாகத் தூங்குவது கழிவுகளை சிறுங்குடலிலிருந்து பெருங்குடலுக்கு எளிமையாக நகர அனுமதிக்கிறது. இது சிறந்த செரிமானத்தை விளைக்கிறது.

34
sleeping

sleeping

நீங்கள் மல்லாந்து படுக்கும் போது, குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும். அதுவே நீங்கள் இடது பக்கத்தில் தூங்குவதன் மூலம் உங்களின் குறட்டையை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

  இடதுபுறமாக படுத்திருப்பது மார்பு குழாய்கள் உடலுக்கு நச்சுகள், கழிவுகள் மற்றும் நினநீர் திரவத்தை வடிகட்ட போதுமான நேரம் அளிக்கிறது.  

பெரும்பாலும், இரவு நேரங்களில் நெஞ்செரிச்சல் பிரச்சனையை நம்மில் பலர் எதிர்கொண்டு வருகிறோம்.  எனவே, இடது பக்கத்தில் தூங்கும் ஒருவருக்கு, நெஞ்சு எரிச்சல் உணர்வு குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

 

 

44
sleeping

sleeping

இடதுபுறமாக படுத்திருப்பது கர்ப்பிணி பெண்களுக்கு கருவுக்கு உகந்த ரத்த ஓட்டம், இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு ஆகியவற்றிக்கு பயனளிக்கிறது.  

உங்கள் இடது பக்கமாக தூங்குவது உங்கள் இதய ஆரோக்கியம், மண்ணீரல் ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்தும், முதுகு மற்றும் கழுத்து வலியை தடுக்கிறது மற்றும் உங்கள் முதுகுத் தண்டு அழுத்தத்தையும் நிவாரணம் செய்கிறது.
 
எனவே, இடது பக்கமாக தலையை சற்று உயரமாக வைத்து தூங்குங்கள். ஏனென்றால் இந்த நிலை ஈர்ப்பு விசை வேலை செய்ய அனுமதிக்கும். எனவே, இனிமேல் எப்போதும் தூங்கும் போது இடது பக்கமாக திரும்பி தூங்க வேண்டும்.  

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved