Aadi Amavasai 2022: ஆடி அமாவாசை நாளில் எந்த பொருட்களை தானம் கொடுத்தால்...வேண்டிய பலன் கிடைக்கும்...
Aadi Amavasai 2022: இந்த 2022 ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. அந்த நாட்களில் எந்தெந்த பொருட்களை கொடுத்தால், வேண்டிய பலன் கிடைக்கும். புண்ணியன் வந்து சேரும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
தானம் கொடுப்பது ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய ஒரு நல்ல விஷயம். சில வகை தானங்கள் பல தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் என்பது மத நம்பிக்கை. நம்முடைய முன்னோர்களால், தானம் என்றால் சுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள். அசுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள் என்று வரையறையோடு தானம் செய்யப்பட்டது.
ஆடி அமாவாசை, சிரார்த்தம், கிரகணம் போன்ற விசேஷ நாட்களில் தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வரிசையில், இந்த 2022 ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. அந்த நாட்களில் ஏழைகளுக்கு உணவு, ஆடை, மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு ஆகும். எனவே, ஆடி அமாவாசை நாளில் நீங்கள் எந்த பொருட்களை தானம் செய்வது உங்களின் வாழ்க்கையை பிரகாசிக்கும் என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்:
பித்ருகளுக்கு திதி கொடுக்கும் பொழுது, அன்னதானம் செய்தால் தீராத வினையெல்லாம் தீரும் பித்ருக்களின் முழு ஆசிர்வாதம் கிடைக்கும். தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவருக்குமே ஆசிகள் கிடைக்கும், அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஒருவேளை உங்களால் அன்னதானம் செய்ய முடியாவிட்டால், உங்களால் முடிந்த அளவிற்கு ஹோட்டல்களில் டோக்கன்கள் வாங்கி பசியில் தவிக்கும் ஏழைகளுக்கு கொடுத்து உண்ண செய்யலாம்.
உப்பு தானம்
உப்பை தானம் செய்வது வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து நிற்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. சாதத்தில் உப்பு சேர்த்து வடித்திருந்தால், உப்பு சேர்த்த அந்த சாதத்தை நம்முடைய வீட்டிற்கு பசி என்று வருபவர்களுக்கு கொடுத்து மகிழலாம். இதனால், பூர்வ ஜென்மத்தில் ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் விலகும். அமாவாசை நாளில் உப்பு தானம் செய்வதால், பலன்கள் பன்மடங்காகும்.
கோ தானம்
இந்து தர்மத்தில் கோ தானம் என்னும் பசு தானம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பித்ருசாப நிவர்த்தி இல்லத்தின் தோஷங்கள் விலகும். எந்த ஒரு சுப திதியிலும் பசுவை தானம் செய்வது ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவங்களும் நீங்கும். மேலும் பித்ருக்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். தாய்க்கு இணையாக இருக்கும் பசுவினை போற்றி வணங்குபவர்களுக்கு கிடைக்கக் கூடிய நன்மைகள் ஏராளம்.
ஆடை தானம்:
வறுமையின் பிடியில் சிக்கி தவிப்போருக்கு, புதிய சுத்தமான ஆடைகளை தானம் செய்வதால் சிறந்த பலன் கிடைக்கும். இதனால், ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். உங்கள் பணியில் வரும் தடைகள் அனைத்தும் நீங்கும். அமாவாசை நாளில் ஆடை தானம் செய்வதால் வாழ்வில் வேண்டிய பலன் உண்டாகும்.
நெய் தானம்
ஜோதிட சாஸ்திரப்படி, நெய் தானம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இதனால் சகல விதநோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். இது குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்திற்கான வழி திறக்கிறது.
எந்த ஒரு தானத்தை நாம் செய்வதாக இருந்தாலும் நம்முடைய மனதில் ஒரு துளி அளவுகூட சஞ்சலம் இருக்கக்கூடாது. இந்த தானத்தை செய்வதன் மூலம் நமக்கு ‘நன்மை தான் நடக்கும்’ என்று உறுதியாக நம்பிக் கொண்டு தானம் செய்தால் அதன் பலன் உங்களுக்கு இரட்டிப்பாக கிடைப்பது உறுதியாகும்.