Weight loss tips: உடல் எடையை குறைக்க ஆசையா..? அப்படினா.! இந்த 6 உணவுப் பழக்கங்களை இப்போதே கைவிட வேண்டும்..!
Weight loss tips: உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறிய மாற்றங்களைச் செய்வது உங்கள் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை முறையிலும் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் உங்களை பல்வேறு உடல்நலம் மற்றும் செரிமானப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அவை என்னென்னெ என்பதை பார்க்கலாம்.
இரவில் அதிக அளவில் உணவு உண்பது:
இரவு நேரத்தில் உண்பது ஆரோக்கியமானதாக கருதப்படுவதில்லை, ஏனெனில் நீங்கள் இரவில் சாப்பிட்டால், உணவை ஜீரணிக்க உங்கள் உடல் வேலை செய்ய வேண்டியிருப்பதால், உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்காது. எனவே, இந்த பழக்கத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். நீங்கள் மிகவும் பசியாக இருந்தால், பருப்புகள் மற்றும் விதைகள் போன்ற இலகுவான உணவுகளை உண்ணலாம்.
ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்
உங்கள் பசியின் அளவை கட்டுப்படுத்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும். உங்களுக்கு ஸ்நாக்ஸ் தேவைப்படும் போதெல்லாம், கேரட், தயிர், ஹம்முஸ், வெள்ளரி துண்டுகள், பருப்புகள் மற்றும் விதைகள், பழங்கள் போன்ற ஆரோக்கியமான தின்பண்டங்களை அணுகவும். அதேபோன்று, சிப்ஸ், சோடா, மிட்டாய் மற்றும் பேக்கரி பொருட்கள் போன்ற ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ் உண்பதை தவிருங்கள்.
உங்கள் உணவை மிக வேகமாக சாப்பிடுவது
நீங்கள் உணவை உட்கொள்ளும் போது, 15-20 நிமிடங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்களிலோ அல்லது அதைவிட குறைவான நேரம் வெறும் உணவை உட்கொள்ளும் போது, மூளை தாமதமாக சிக்னலைக் கொடுப்பதால் நீங்கள் அதிகமாக சாப்பிடலாம். இது தேவையற்ற எடை அதிகரிப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் உணவை மெதுவாகவும், நன்றாக மென்று சாப்பிடுவதையும் உறுதிப்படுத்தவும்.
சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்ப்பது:
இன்றைய நவீன உலகில் ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது நாம் தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை பார்த்து சாப்பிடும் பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நீங்கள் எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்பதை அறியாமலேயே சாப்பிட்டு முடிப்பீர்கள். இது அதிகப்படியான உணவு உண்பதற்கு வழிவகுக்கிறது.
உணவைத் தவிர்ப்பது:
சிலர் சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். அதேபோன்று,இரவு நேரம் உணவு சாப்பிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், உங்கள் உடல் சரியாக எரிபொருளை நிரப்ப முடியாமல் உடல் ஆற்றல் நிலைகள் தொடர்ந்து மாறுபடும். இந்தச் சிக்கலைச் சரிசெய்ய, உங்கள் நாளை முன்கூட்டியே திட்டமிட்டு, உங்கள் உணவுக்கு நேரத்தை ஒதுக்குங்கள். அதேபோன்று, இரவில்எளிதில் ஜீரணிக்ககூடிய உணவைத் சாப்பிட திட்டமிட முயற்சிக்கவும்.