MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • படிக்கும்போது குழந்தைகளின் கவனம் சிதறுதா? இப்படி பண்ணா சூப்பரா படிப்பாங்க!

படிக்கும்போது குழந்தைகளின் கவனம் சிதறுதா? இப்படி பண்ணா சூப்பரா படிப்பாங்க!

Parenting Tips : படிக்கும் போது உங்கள் குழந்தையின் கவனம் சிதறுவது சகஜம் தான். ஆனால் எல்லா நேரத்திலும் இப்படி நடந்தால் பிரச்சனை. இத்தகைய சூழ்நிலையில், பெற்றோர்களுக்கான சில குறிப்புகள் இங்கே.

2 Min read
Author : Kalai Selvi
Published : Feb 13 2025, 01:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
படிக்கும்போது குழந்தைகளின் கவனம் சிதறுதா? இப்படி பண்ணா சூப்பரா படிப்பாங்க!

படிக்கும்போது குழந்தைகளின் கவனம் சிதறுதா? இப்படி பண்ணா சூப்பரா படிப்பாங்க!

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தை விடாமுயற்சியுடன், கடினமாகவும் படித்து எல்லா பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று, வகுப்பில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். இதற்காக குழந்தைகளும் தீவிரமாக படிக்கிறார்கள். ஆனால் சில சமயங்களில் சில குழந்தைகளின் படிக்கும்போது மனம் படிப்பில் இல்லாமல் திசை திருப்பப்படுகிறது இதனால் பெரும்பாலான பெற்றோர் கவலை அடைகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் பெற்றோர்கள் இனி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இந்த பதிவில் சில எளிதான குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் குழந்தைகள் மனம் சிதறாமல் தடுக்கப்படும். மேலும் அவர்கள் முழு மனதுடன் படிக்க ஆரம்பிப்பார்கள் அந்த குறிப்புகள் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அமைதியான சூழலில் படிக்க வைக்கவும்:

அமைதியான சூழலில் படிக்க வைக்கவும்:

உங்கள் குழந்தை முழு கவனத்துடன் படிக்க வேண்டும், குழந்தையின் மனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவர்கள் படிப்புக்கு அமைதியான சூழல் கொண்ட ஒரு அறையை  அவர்களுக்கு ஒதுக்குங்கள். அந்த அறையில் உங்கள் குழந்தை படிக்கும் புத்தகங்கள் படிப்பு தொடர் மனப் பொருட்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும். மற்ற அனைத்து பொருட்களையும் அகற்றி விடுங்கள். 

35
குழந்தை படிக்கும் அறை

குழந்தை படிக்கும் அறை

இது தவிர, உங்கள் குழந்தை படிக்கும் வகையில் அவர்களுக்கு நாற்காலி, மேஜை, புத்தகங்கள், பேனா, பென்சில் போன்ற அனைத்து பொருட்களையும் அவர்களுக்கு வாங்கி கொடுங்கள். உங்கள் குழந்தை படிப்பு தொடர்பான ஏதாவது ஒன்றை வாங்கி கேட்டால் தயங்காமல் வாங்கிக் கொடுங்கள். முக்கியமாக உங்கள் குழந்தை எதிர்காலத்தில் என்னவாக மாற விரும்புகிறார்கள் என்பதை அறிந்து, அது தொடர்பான புகைப்படங்களை உங்கள் குழந்தை படிக்கும் அறையில் வைக்கவும்.

இதையும் படிங்க:  குழந்தைங்க படித்ததும் மறக்கிறார்களா? ஈஸியா ஞாபகம் வச்சுக்க '5' சூப்பர் டிப்ஸ்

45
இலக்குகளை எழுதி சுவரில் ஒட்டுங்கள்:

இலக்குகளை எழுதி சுவரில் ஒட்டுங்கள்:

உங்கள் குழந்தை இலக்குகள் என்ன என்பது அறிந்து அதை ஒரு சிறிய தாளில் எழுதி குழந்தை படிக்கும் அறையில் ஒட்டலாம். இதனால் உங்கள் குழந்தை படிக்கும் ஆர்வம் தூண்டப்படும். மேலும் அவர்கள் தங்கள் அடைய கடினமாக உழைப்பார்கள். முக்கியமாக உங்கள் குழந்தை தொடர்ந்து 30 நிமிடம் படித்தால் பிறகு அவர்களுக்கு 5-10 இடைவெளி எடுத்து மீண்டும் படிக்க தொடங்க பழக்கப்படுத்துங்கள்

இதையும் படிங்க:  உங்க குழந்தைக்கு படிப்பு மேல ஆர்வம் வரனுமா? சூப்பரான '5' டிப்ஸ்!

55
அழுத்தம் கொடுக்காதே!

அழுத்தம் கொடுக்காதே!

உங்கள் குழந்தை படிக்கும் பாடத்தை எளிதாக புரிந்து கொள்ள அதனுடன் தொடர்புடைய உதாரணத்தை நீங்கள் கொடுக்கலாம் இதனால் குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்ள முடியும். மேலும் வீட்டில் நேர்மறையான சூழலை உருவாக்கி கொடுங்கள். முக்கியமாக குழந்தைகள் படிக்கும் போது எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cockroach: செருப்பால் கரப்பான் பூச்சியை அடிக்கிறீங்களா? உங்கள் குடும்பத்துக்கே ஆபத்தை வரவழைக்கலாம்!
Recommended image2
Gold Jewellery: தங்கத்தில் கிப்ட் கொடுக்கணுமா? 1 கிராம் எடையில் அட்டகாசமான 5 டிசைன்கள்.!
Recommended image3
30 வயதைக் கடந்த பெண்களுக்கான 8 அழகான தங்க ஸ்டட் கம்மல் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved