MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Parenting Tips : உங்கள் குழந்தைகளை புத்திசாலியாக வளர்க்க ஆசையா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்

Parenting Tips : உங்கள் குழந்தைகளை புத்திசாலியாக வளர்க்க ஆசையா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்

குழந்தைகள் வளரும் போதே புத்திசாலியாக இருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைப்பதுண்டு. அவர்களுக்கான சில டிப்ஸ்கள் குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 26 2025, 06:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Parenting Tips
Image Credit : Instagram

Parenting Tips

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது குழந்தைகளை புத்திசாலியாக வளர்க்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். குழந்தைகளை புத்திசாலியாக வளர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் சில வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். குழந்தையின் கல்வியில் கவனம் செலுத்துங்கள். அவர்களுக்குப் புத்தகங்கள் படிக்கவும், புதிர் விளையாட்டுகள் விளையாடவும் வாய்ப்புகளை அளியுங்கள். இது குழந்தைகளின் யோசிக்கும் திறனை மேம்படுத்த உதவும். குழந்தைகளின் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லுங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
குழந்தையின் பழக்க வழக்கங்களை மாற்றுங்கள்
Image Credit : Instagram

குழந்தையின் பழக்க வழக்கங்களை மாற்றுங்கள்

குழந்தைகளுக்குச் சத்தான உணவுகளைக் கொடுங்கள். போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சியை ஊக்குவியுங்கள். சர்க்கரை கலந்த தின்பண்டங்கள், துரித உணவுகள், உடலுக்கு தீங்கு தரும் உணவுகளை தவிர்த்து விடுங்கள். டிவி, செல்போன் போன்றவற்றிற்கு அடிமையாக விடாதீர்கள். இது குழந்தைகளின் மூளையை மழுங்கடிக்க செய்து விடும். குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். அவர்களை வெளிப்புற விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். அவர்களின் திறமைகளை வளர்க்கும் வகையில், ஓவியம், இசை, நடனம் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட வையுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறமை இருக்கும். முதலில் அதை கண்டறிந்து அதில் அவர்களை சிறப்பானவர்களாக மாற்ற முயற்சி செய்யுங்கள்.

35
குழந்தைகளின் சமூகத் தொடர்பை வளருங்கள்
Image Credit : Instagram

குழந்தைகளின் சமூகத் தொடர்பை வளருங்கள்

குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் விளையாடவும், பழகவும் ஊக்குவியுங்கள். அவர்கள் சமூக நிகழ்வுகளில் பங்கேற்கவும், மற்றவர்களுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்புகளை அளியுங்கள். சமூகத்துடன் இணைந்த வாழ்வு அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பிற்காலத்தில் தனித்து இயங்குவும் உதவும். குழந்தைகளின் முயற்சிகளைப் பாராட்டுங்கள். அவர்களின் தவறுகளை மென்மையாகத் திருத்துங்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். குழந்தைகள் சொல்லும் விஷயங்களை புறக்கணிக்காதீர்கள். காது கொடுத்து கேளுங்கள். அவர்களுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கவும், தைரியமாக இருக்கவும் கற்றுக்கொடுங்கள்.

45
ஆரோக்கியமான உணவைக் கொடுங்கள்
Image Credit : Instagram

ஆரோக்கியமான உணவைக் கொடுங்கள்

குழந்தைகளிடம் அன்பாகவும் பண்பாகவும் பழகுங்கள். குழந்தைகள் ஏதாவது தவறு செய்தாலோ அல்லது பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டாலோ அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். குழந்தைகள் ஏதேனும் சிக்கல்களில் மாட்டிக் கொண்டால் அதற்கு அவர்களையே தீர்வு காண வைக்க முயற்சி செய்யுங்கள். இது அவர்களின் முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கும். சிறுவயதில் இருந்தே ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்தால் குழந்தைகள் வளரும் போதே அதிக அறிவாற்றலோடு வளர்வார்கள். குழந்தையின் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதால் மூளையின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். எனவே மூளை வளர்ச்சிக்கு உதவும் நட்ஸ், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட வையுங்கள்.

55
கர்ப்பகாலத்தில் பின்பற்றவேண்டியவை
Image Credit : Twitter

கர்ப்பகாலத்தில் பின்பற்றவேண்டியவை

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம் குழந்தையின் புத்திசாலித்தனத்தை பாதிக்கும் காரணியாக அமைகிறது. மன அழுத்தத்தைத் தவிர்க்க, சில கர்ப்ப கால யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம். கர்ப்பமாக இருக்கும் போதே குழந்தைகளின் மூளை ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகளை சாப்பிடுங்கள். முன்கூறப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான கருத்துக்கள் மட்டுமே. ஒவ்வொரு குழந்தைக்கும், தனித்துவமான திறமைகள் இருக்கும். உங்கள் குழந்தைகளின் திறமைக்கு ஏற்ப அவர்களை சிறப்பானவர்களாக மாற்றுங்கள். தகவல் பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கும் பகிருங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெற்றோர் குழந்தை உறவுகள்
பெற்றோர் ஆலோசனை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Related Stories
Recommended image1
குழந்தைங்க ஏன் செல்போன் கேட்டு அடம்பிடிக்குறாங்க தெரியுமா? பெற்றோர் அறியாத அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!
Recommended image2
குழந்தைகளை அடிக்காமல், திட்டாமல் எப்படி கண்டிப்பது? பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved