- Home
- Lifestyle
- முகம் பிரகாசமாக ஜொலிக்க வேண்டுமா..? இந்த ஒரு பொருள் பயன்படுத்தினால், பிறகு நீங்கள் தான் பேரழகி..!
முகம் பிரகாசமாக ஜொலிக்க வேண்டுமா..? இந்த ஒரு பொருள் பயன்படுத்தினால், பிறகு நீங்கள் தான் பேரழகி..!
Skin care: நீராவிக்கு பிறகு தோல் பராமரிப்புக்காக என்னென்னெ பொருட்களை இயற்கையாக எப்படி பயன்படுத்தலாம் என்றும், சருமத்திற்கு உண்டாகும் நன்மைகள் என்னவென்பதையும் தெரிந்துக் கொள்வோம்.

தோல் பராமரிப்பு பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது, பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். சருமம், நமது உடலைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, உடல் வெப்பநிலையை சீராக்குகிறது. சில வாசனை திரவியங்கள் மற்றும் இரசாயனங்கள் சருமத்தை உலர்த்தலாம், துளைகளை அடைக்கலாம் அல்லது எரிச்சலை ஏற்படுத்தலாம். எனவே என்னென்னெ பொருட்களை பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
skin care
நீராவிக்கு பிறகு தோல் பராமரிப்புக்காக என்னென்னெ பொருட்களை இயற்கையாக எப்படி பயன்படுத்தலாம் என்றும், சருமத்திற்கு உண்டாகும் நன்மைகள் என்னவென்பதையும் தெரிந்துக் கொள்வோம்.
தேன்:
தேன் சருமத்தில் ஆழமாகச் சென்று சுத்தம் செய்யும். இதனுடன், சருமத்திற்கு ஈரப்பதமும் கிடைக்கும். நீராவி எடுத்துக்கொள்வதால் தோலின் துளைகள் திறக்கும். எனவே தேனைப் பயன்படுத்துவதால் சருமம் பளபளக்கும்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயை தடவுவதால் பல சரும பிரச்சனைகள் நீங்கும். நீராவி எடுத்த பிறகு, தேங்காய் எண்ணெயைக் கொண்டு லேசான மசாஜ் செய்ய வேண்டும். இது சருமத்திற்கு ஊட்டமளிக்கும். அதே நேரத்தில், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் குறைக்கிறது.
கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல்லை முகத்திற்கு ஆவி பிடித்த பிறகு பிறகு, தோலில் தடவினால் சருமம் சுத்தமாகும். கற்றாழை ஜெல்லை சிறிதளவு எடுத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். இது சருமத்திற்கு ஊட்டமளிக்கும். கற்றாழை ஜெல்லில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகத்தில் உள்ள தழும்புகளை குறைக்க உதவும்.
பாதாம்:
பாதாம் எண்ணெய் முகத்தில் உள்ள துளைகளை மூட உதவுகிறது. பாதாம் எண்ணெயை லேசான மசாஜ் செய்வது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது.