MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சமையலறையில் அடிக்கடி பயன்படும் குறிப்புகள்..இல்லத்தரசிகள், நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய 7 பெஸ்ட் ஐடியாக்கள்

சமையலறையில் அடிக்கடி பயன்படும் குறிப்புகள்..இல்லத்தரசிகள், நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய 7 பெஸ்ட் ஐடியாக்கள்

Useful cooking tips in Tamil: சமையலறையில் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால், சமைக்கு போது இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்கும். அவை என்னென்னெ என்பதை பார்ப்போம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Oct 27 2022, 04:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஒருவரது வீட்டில் சமையல் அறையே அனைத்து செயல்பாட்டின் மையப் புள்ளியாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து சமைக்கவும், நண்பர்கள், குடும்பத்தினருடன் நன்கு பழகவும் உகந்த இடமாக சமையல் அறை உள்ளது.

மேலும் படிக்க...Kitchen cleaning: தினமும் கஷ்டப்படாமல் சமையல் செய்ய..இல்லத்தரசிகள் இந்த 8 ஐடியாக்கள் தெரிஞ்சுக்கிட்டாலே போதும்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

பொதுவாக சமையல் அறையில் நாம் சில விஷயங்களை சிரமப்பட்டு செய்து கொண்டிருப்போம். இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டால், சமைக்கு போது இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்கும். அவை என்னென்னெ என்பதை பார்ப்போம்.

37

டிப்ஸ் 1: 

அசைவம் சமைத்த பிறகு பார்த்தால் நம் வீட்டு சமையல் மேடை சிங்கில் இருந்து கெட்ட வாடை வீசிக்கொண்டே இருக்கும். இது போன்ற கெட்ட வாடை வராமல் தடுக்க, எல்லா இடத்திலும் முதலில் ஒரு சிறிய துண்டு புளியை வைத்து நன்றாக தேய்த்து விடுங்கள். அதன் பின்பு, வாசம் நிறைந்த பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஊற்றி கழுவி விட்டால் அசைவ வாடை உங்களுக்கு சுத்தமாக வராது.

 

47

டிப்ஸ் 2:

சில சமயம் வெல்லத்தை துருவ வேண்டும் என்றால், காய்கறித் துருவலில் வைத்து துருவினால் சிரமம் இல்லாமல், சீக்கிரமே வெல்ல தூள் நமக்கு கிடைக்கும்.

 டிப்ஸ் 3:

வெயில் காலத்தில் தயிர் சீக்கிரம் புளித்து போய்விடும். அப்படி, தயிர் புளிக்காமல் இருக்க அதில் நசுக்கிய இஞ்சி, ஒரு துண்டு தேங்காய் பத்தை இரண்டையும் தயிரில் போட்டு வைத்தால் தயிர் சீக்கிரம் புளித்து போகாது.

 

57

டிப்ஸ் 4: 

அதேபோல், நெய் ரொம்ப நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்க, நெய்யில் ஒரு சிறிய துண்டு வெல்லக்கட்டியை போட்டு வைத்தால் போதும்.

டிப்ஸ் 5:

அதுபோன்று, நீங்கள் வெங்காயம் நறுக்கும் போது,கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராது.

67

டிப்ஸ் 6:

நீங்கள் சமைத்த உணவுப் பொருளில் உப்பு அதிகமாகி விட்டதா, இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறை பிழிந்து விட்டால் உப்பு சரியாகிவிடும். அதேபோன்று, குழம்பில் உப்பு அதிகமாகி விட்டதா ஒரு துண்டு வெல்லத்தை சேர்க்கவும்.

மேலும் படிக்க...Kitchen cleaning: தினமும் கஷ்டப்படாமல் சமையல் செய்ய..இல்லத்தரசிகள் இந்த 8 ஐடியாக்கள் தெரிஞ்சுக்கிட்டாலே போதும்

77

டிப்ஸ் 7;

சில சமயம் நாம் வைத்திருக்கும் தோசை மாவில் தோசை சரியாகவே வராது. அதேபோன்று, தோசை மாவு கொஞ்சம் தான் இருக்கிறது என்றால் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அந்த மாவில் தோசை வார்த்து பாருங்கள். கல்லில் தோசை ஒட்டாமலும் வரும். அதே சமயம் தோசையில், புளிப்பு தெரியாமலும் இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rocket Stove: சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!
Recommended image2
Trick to identify artificial Mangoes : ஒரு எலுமிச்சை போதும்... கல் வச்சு பழுத்த மாம்பழத்தை ஈஸியா கண்டுபிடிக்க டிப்ஸ் இதோ
Recommended image3
சட்டென்று மாறுது வானிலை...நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved