MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kitchen cleaning: தினமும் கஷ்டப்படாமல் சமையல் செய்ய..இல்லத்தரசிகள் இந்த 8 ஐடியாக்கள் தெரிஞ்சுக்கிட்டாலே போதும்

Kitchen cleaning: தினமும் கஷ்டப்படாமல் சமையல் செய்ய..இல்லத்தரசிகள் இந்த 8 ஐடியாக்கள் தெரிஞ்சுக்கிட்டாலே போதும்

Kitchen cleaning tips: சமையலறையில் நாம் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சின்ன சின்ன பயனுள்ள குறிப்புகளைத்தான் இந்த பதிவின் மூலம் பார்க்கப் போகிறோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Nov 01 2022, 05:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

நம்முடைய வீட்டில் அதிகம் பயன்படுத்தும் ஒரு இடம் என்றால், அது சமையல் அறைதான். பெண்கள் என்னதான் சமையல் குயினாக இருந்தாலும் சின்ன சின்ன விஷயங்களில் தவறு செய்யும் போது அதை அவர்களால் திருத்திக் கொள்ள முடியாது. சமையலறையில் நாம் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய சின்ன சின்ன பயனுள்ள குறிப்புகளைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.  

 

 

27

டிப்ஸ் 1:

நாம் காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை பால் காய்ச்சுவது.  இனிமேல் பால் காய்ச்சும் போது பால், தண்ணீர் எல்லாம் கிச்சன் மேடை மீது வைத்து ஊற்றிய பிறகு அடுப்பின் மீது வைக்கலாம். இதனால் பால் சிந்தி வீணாகாது.  

37

டிப்ஸ் 2:

எலுமிச்சம்பழம் உலர்ந்துவிட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
 
தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

மேலும் படிக்க...தலையில் பொடுகு, முடி உதிர்வு தொல்லையா? முற்றிலும் விடுபட இந்த ஒரு பொருளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்தால் போதும்

 

47

டிப்ஸ்3

பால் காய்ச்சி அடுப்பில் வைக்க மறந்து விட்டீர்களா. அடிபிடித்து லேசாக தீய்ந்த வாடை அடிக்கிறது என்றால், இனிமேல் அதில் ஒரு வெற்றிலையை போட்டால், கருகிய வாடை காணாமல் போகும். 

57

டிப்ஸ் 4:

அதேபோன்று,  பால் பொங்கி வழிவது நமக்கு பெரிய தலைவலியாக இருக்கும். பால் காய்ச்சும் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய கிண்ணத்தை வைத்து விடுங்கள். அதன் பின்பு பாலை அந்த பால் காய்ச்சும் கிண்ணத்தில் ஊற்றினால் அடுப்பில் வைத்து காய்ச்சினால், பால் பொங்கி வழியாது.

மேலும் படிக்க...தலையில் பொடுகு, முடி உதிர்வு தொல்லையா? முற்றிலும் விடுபட இந்த ஒரு பொருளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்தால் போதும்

 

67


டிப்ஸ் 5

 நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

டிப்ஸ் 6

வாழை இலையின் பின்பக்கத்தை லேசாக நெருப்பின் அனலில் காட்டிவிட்டு, அதன் பின்பு அதில் பொட்டலம் மடித்தால், வாழை இலையை எவ்வளவு சுருட்டி மடித்தாலும் அது கிழியாது.

77

டிப்ஸ் 7:

காலிஃப்ளவரை சமைக்கும் போது அதில் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளுங்கள். சமைத்து முடித்த பிறகு அதிலிருந்து பச்சை வாடை வீசாது. அதே சமயம் அதனுடைய நிறம் மாறாமல் இருக்கும்.

டிப்ஸ் 8:

காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்துவிடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
Summer Recipes: வெயில்ல பசங்க ஜில்லுனு இருக்கணுமா? இந்த 3 சிம்பிள் ரெசிபி ட்ரை பண்ணுங்க!
Recommended image2
Heatstroke-ஆ..? கவலையை விடுங்க... உங்க கிச்சன்ல இருக்கிற இந்த பொருள் போதும்..! பாட்டி சொன்ன ரகசியம்
Recommended image3
Curry Leaves: கறிவேப்பிலை செடி வேகமா வளரலையா? இந்த ஒரு பொருளை போடுங்க போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved