இல்லத்தரசிகளே..இதை அவசியம் தெரிஞ்சு வச்சுக்கோங்க.. இனி உங்க வேலை ஈசி!
Kitchen Tips : சில கிச்சன் ஹேக்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் சமையல் வேலையை எளிதாக முடித்துவிடலாம் தெரியுமா...?
Kitchen Hacks In Tamil
நாம் உணவுகளை சமைக்கும் இடம் சமையலை என்பதால், அவற்றை எப்போதும் சுத்தமாக வைத்திருப்போம். இதற்காக பல கிச்சன் டிப்களை பயன்படுத்துவோம். அதுபோலவே, நாம் சில கிச்சன் ஹேக்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் சமையல் வேலையை எளிதாக முடித்துவிடலாம் தெரியுமா...? அது எப்படி என்று நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்காக சில கிச்சன் ஹேக்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றை தெரிந்துகொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்..
Kitchen Hacks In Tamil
1. நீங்கள் உங்களது வீட்டு பிரிட்ஜில் இட்லி, தோசை மாவு பொங்கும் பிரச்சினையை சந்திக்கிறீர்கள் என்றால், மாவின் மேல் வாழையிலேயே வெட்டி கவிழ்த்து போட்டு வைத்தால், மாவு பொங்குவது தடுக்கப்படும்.
2. நீங்கள் தோசை மாவு அரைக்கும் போது அதனுடன் ஒரு கைப்பிடி அளவு தோல் இல்லாத வேர்கடலையை சேர்த்து அரைத்து, அதில் தோசை சுட்டு சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
3. வெந்தயக் கீரையை சமைக்கும் முன் அதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து கொண்டால், கசப்பு சுத்தமாகவே தெரியாது. சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும்.
4. . சீனி டப்பாவில் அடிக்கடி எறும்புகள் வருவது வழக்கம். எனவே அவற்றை வராமல் தடுக்க, சீனி டப்பாவில் நான்கு அல்லது ஐந்து ஏலக்காய் போட்டு வைத்தால் எறும்புகள் அதன் வாசனைக்கு வராது.
Kitchen Hacks In Tamil
5. தேங்காய் எண்ணெயை நீண்ட நாள் பயன்படுத்தினால் அவற்றிலிருந்து வாடை அடிக்க ஆரம்பிக்கும். எனவே, அவற்றை தடுக்க நீங்கள் தேங்காய் எண்ணெயை கடையிலிருந்து வாங்கிட்டு வந்த உடனே, அதில் சுமார் பத்து மிளகு போட்டு வையுங்கள். இப்படி நீங்கள் வைப்பதன் மூலம் தேங்காய் எண்ணெயானது சுமார் 6 மாதங்கள் வரி பிரஷ்ஷாக அப்படியே இருக்கும்.
6. மார்க்கெட்டில் வாங்கிட்டு வந்த காய்கறிகள் சீக்கிரமே, வதங்கி போய்விட்டால் அவற்றை குப்பையில் போடாமல், அதன் மேல் சில துளிகள் எலுமிச்சை சாறு தெளிக்கவும். சிறிது நேரம் கழித்து பார்த்தால் காய்கறிகள் புதிதாக இருக்கும்.
7. ஒரு உப்பு பொட்டலத்தை உங்கள் வீட்டில் பலகாரங்கள் வைத்திருக்கும் பாத்திரத்திற்கு அடியில் வைத்தால், பலகாரங்கள் நமக்கு போகாமல் பிரஷ்ஷாக இருக்கும்.
Kitchen Hacks In Tamil
8. உங்கள் வீட்டில் நாள்பட்ட அல்லது மர வெஜிடபிள் கட்டர் இருந்தால் அவற்றை சுலபமாக சுத்தம் செய்ய முதலில் அவற்றின் மீது சோடா உப்பு தூவி விடுங்கள். பிறகு அதன் மேல் எலுமிச்சை சாறு பிழியவும். பின் எலுமிச்சைத் தோலை வைத்து கட்டரின் மீது நன்றாக தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து பின் தண்ணீரில் கழுவினால் பளபளக்கும்.
9. நீங்கள் கருணைக்கிழங்கை வேக வைக்கும் போது அதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், புளி ஆகியவற்றை சேர்த்து வேக வையுங்கள். இப்படி செய்வதன் மூலம் கருணைக்கிழங்கில் இருக்கும் அரிப்பு முற்றிலும் நீங்கிவிடும்.
10. நீங்கள் வாழ காயை நறுக்கும் முன் உங்களது கையில் சிறிதளவு உப்பு தடவிக் கொண்டால் உங்களது கையானது பிசுபிசுப்பாக இருக்காது கரையும் படாது.