MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • UPI Budget Usage : UPI-ல் ஒரு கிளிக் போதும்..பட்ஜெட்டை பதம் பார்க்கும் இந்த பழக்கம் உங்களுக்கும் இருக்கா?

UPI Budget Usage : UPI-ல் ஒரு கிளிக் போதும்..பட்ஜெட்டை பதம் பார்க்கும் இந்த பழக்கம் உங்களுக்கும் இருக்கா?

UPI Budget Usage : UPI மூலம் செய்யும் சிறு சிறு செலவுகள் மாத பட்ஜெட்டை எப்படி பாதிக்கிறது? தேவையற்ற UPI செலவுகளை கட்டுப்படுத்தி பணத்தை சேமிக்க உதவும் எளிய பட்ஜெட் டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்.

3 Min read
Author : Vishnupriya
Published : Oct 05 2026, 02:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
பட்ஜெட்டை பதம் பார்க்கும் UPI
Image Credit : Pinterest

பட்ஜெட்டை பதம் பார்க்கும் UPI

பணம் இருக்கிறதா? என்று யோசிக்காமல், QR Code எங்கே? என்று தேடும் அளவுக்கு யுபிஐ (UPI) நம்முடைய வாழ்க்கையை ஈஸியாக்கிவிட்டது. டீக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை, ரூ.20 முதல் ஆயிரக்கணக்கில் பணம் செலுத்துவது சில நொடிகளில் முடிந்துவிடுகிறது. கையில் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்ற வசதி, நம்முடைய ஷாப்பிங் அனுபவத்தையே மாற்றிவிட்டது.

ஆனால் இந்த வசதியே சில நேரங்களில் பட்ஜெட்டுக்கு மிகப்பெரிய எதிரியாகவும் மாறிவிடலாம். இது வெறும் 50 ருபாய் தானே, இதுவும் ஒரு சின்ன செலவுதானே என்று தொடர்ந்து UPI மூலம் செய்யும் சிறுசிறு பரிவர்த்தனைகள் மாத இறுதியில் சேர்ந்து பார்த்தால் பெரிய தொகையாக மாறலாம்.

குறிப்பாக தேவையில்லாத ஆன்லைன் ஆர்டர்கள், உணவு டெலிவரி, திடீர் ஷாப்பிங் போன்றவற்றில் UPI-யின் வேகம் யோசிக்காமல் செலவு செய்யும் பழக்கத்தை உருவாக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
UPI ஏன் அதிகம் செலவு செய்ய வைக்கிறது?
Image Credit : Pinterest

UPI ஏன் அதிகம் செலவு செய்ய வைக்கிறது?

கையில் பணம் இருந்தால் ஒவ்வொரு ரூபாயையும் செலவு செய்யும் முன் ஒருமுறை யோசிப்போம். ஆனால் அதே பணத்தை UPI மூலம் செலுத்தும்போது, அந்த தயக்கம் பல நேரங்களில் காணாமல் போய்விடுகிறது.

கையில் 500 ரூபாய் நோட்டு இருந்தால், அதை கொடுத்து பொருள் வாங்கும்போது, இதை உண்மையிலேயே வாங்க வேண்டுமா? பணத்தை மாற்ற வேண்டுமா? சில்லரையாக இருந்தால் செலவு செய்துவிடுவோம் என்று ஒருமுறை யோசிப்போம். ஆனால் UPI-ல் 100, 200 எனத் தொகையை செலுத்தும்போது, பணம் கையில் இருந்து பிரிவது போன்ற உணர்வு பெரும்பாலும் ஏற்படாது.

சில விநாடிகளில் பணம் செலுத்தப்பட்டு, “Payment Successful” என்ற தகவலும் வந்துவிடுகிறது. இதனால் பணம் செலவாகிறது என்ற உணர்வே தெரியாமல் போகலாம். இதுதான் UPI மூலம் நாம் தெரியாமலேயே அதிகம் செலவு செய்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

38
சிறிய செலவுதான் பெரிய பிரச்சினை
Image Credit : Pinterest

சிறிய செலவுதான் பெரிய பிரச்சினை

சின்னச் சின்ன செலவுதானே என்று நினைத்து UPI-ல் பணம் செலுத்திக்கொண்டே இருந்தால், மாத இறுதியில் பெரிய தொகை கரைந்திருப்பதை பார்த்து ஆச்சரியப்பட வேண்டிய நிலை வரலாம்.

உதாரணமாக ஒரு நாளில் காலை,

  • காலை காபி - ரூ.40
  • ஸ்நாக்ஸ் - ரூ.50
  • ஆன்லைன் டெலிவரி - ரூ.100
  • தேவையில்லாத சிறிய ஷாப்பிங் - ரூ.150 செலவு செய்தால்

மொத்தம் ரூ.340 மட்டுமே என்று தோன்றும். ஆனால் இதே செலவு தினமும் தொடர்ந்தால், 30 நாட்களில் ரூ.10,200 செலவாகும்.

48
UPI செலவுகளை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
Image Credit : Pinterest

UPI செலவுகளை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

UPI இருப்பதால் கையில் பணம் இல்லாமலேயே எளிதாக செலவு செய்ய முடிகிறது. அதனால் தேவைப்படுகிறதா? என்று யோசிப்பதற்குள் பணம் செலவாகிவிடலாம். இதைத் தவிர்க்க, உங்கள் வருமானம் மற்றும் மாத பட்ஜெட்டுக்கு ஏற்றபடி தினசரி அல்லது வாராந்திர UPI செலவு வரம்பை நிர்ணயிக்கலாம்.

உதாரணமாக, தேவையில்லாத சிறிய செலவுகளுக்கு வாரத்திற்கு ரூ.1,000 மட்டுமே என லிமிட் வைத்துக்கொள்ளுங்கள். அந்த தொகை முடிந்துவிட்டால், அடுத்த வாரம் வரை தேவையற்ற UPI செலவுகளைத் தவிர்க்கலாம். இப்படிப் பட்ட ஒரு சிறிய கட்டுப்பாடே, மாத இறுதியில் சேரும் தேவையற்ற செலவுகளை கணிசமாகக் குறைக்க உதவும்.

58
UPI பேமெண்ட் ஹிஸ்டரி பாருங்கள்
Image Credit : Pinterest

UPI பேமெண்ட் ஹிஸ்டரி பாருங்கள்

வாரத்திற்கு ஒருமுறை உங்கள் யுபிஐ பேமெண்ட் ஹிஸ்டரியை (UPI Payment History) திறந்து பாருங்கள். கடந்த 7 நாட்களில் காபி, ஸ்நாக்ஸ், ஆன்லைன் டெலிவரி, சிறிய ஷாப்பிங் என எதற்கெல்லாம் பணம் செலுத்தியிருக்கிறோம் என்பதைப் பார்ப்பது, நம்முடைய செலவு பழக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

ஒவ்வொரு பரிவர்த்தனையும் தனித்தனியாகப் பார்க்கும்போது சிறிய தொகையாகத்தான் தெரியும். ஆனால் அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது, இதற்கெல்லாம் நான் இவ்வளவு செலவு செய்திருக்கிறேனா? என்ற உணர்வு வரலாம்.

செலவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், முதலில் எங்கே பணம் செல்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

68
வாங்குவதற்கு முன் 10 நிமிடம் யோசிக்கலாம்
Image Credit : Pinterest

வாங்குவதற்கு முன் 10 நிமிடம் யோசிக்கலாம்

கண்ணில் பட்டதும் உடனே வாங்கிவிடும் பழக்கத்தை கொஞ்சம் மாற்றிப் பாருங்கள். பொருள் ஏதாவது வாங்கத் தோன்றினால், UPI மூலம் உடனடியாக பணம் செலுத்துவதற்குப் பதிலாக குறைந்தது 10 நிமிடங்கள் காத்திருக்கலாம்.

அந்த நேரத்தில், இது எனக்கு உண்மையிலேயே தேவையா? ஏற்கனவே இதுபோன்ற பொருள் வீட்டில் இருக்கிறதா? இப்போது இதை வாங்காமல் இருந்தால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? என்று உங்களுக்குள் கேட்டு பாருங்கள்.

10 நிமிடங்களுக்குப் பிறகும் அது தேவையான பொருளாகத் தோன்றினால் வாங்கலாம். இல்லையென்றால் தேவையில்லாத செலவைத் தவிர்த்து பணத்தை சேமிக்க உதவும்.

78
சலுகைகள் பார்த்து வாங்காதீங்க
Image Credit : Pinterest

சலுகைகள் பார்த்து வாங்காதீங்க

குறிப்பாக UPI Payment செய்யும்போது, சலுகைகள் (Offer) கிடைக்கிறது என்ற எண்ணத்தில் தேவையில்லாத பொருட்களைக்கூட வாங்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

ஒரு பொருளை வாங்குவதற்கு முன், இந்த சலுகைகள் இல்லையென்றாலும் நான் இதை வாங்குவேனா? என்று உங்களிடம் கேட்டு பாருங்கள். பதில் இல்லை என்றால், அந்த பொருள் உங்களுக்கு உண்மையில் தேவையில்லை என்பதற்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

அதனால் கேஷ்பேக் (Cashback) , டிஸ்கவுண்ட் (Discount), கூப்பன் (Coupon) போன்ற வார்த்தைகளைப் பார்த்து மயங்காமல், முதலில் தேவை, அடுத்ததாக விலை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

88
மாத பட்ஜெட்டில் UPI செலவுகளுக்கும் தனி இடம் கொடுங்கள்
Image Credit : Pinterest

மாத பட்ஜெட்டில் UPI செலவுகளுக்கும் தனி இடம் கொடுங்கள்

வீட்டு வாடகை, மளிகை, EMI என பெரிய செலவுகளை மட்டும் கணக்கில் வைத்தால் பட்ஜெட் முழுமையாகாது.

அதனால், மாத பட்ஜெட் போடும்போதே சிற்றுண்டி, காபி, உணவு டெலிவரி, ஆன்லைன் ஷாப்பிங், சிறிய பயணச் செலவு போன்ற UPI மூலம் செய்யும் செலவுகளுக்கும் தனியாக ஒரு தொகையை ஒதுக்குங்கள்.

பட்ஜெட்டில் இடம் பெற்ற செலவு எது, தேவையில்லாத செலவு எது என்பதை பிரித்துப் பார்ப்பதே பணத்தை கட்டுப்படுத்துவதற்கான முதல் படி.

பிரச்சினை UPI-யில் இல்லை. அதை பயன்படுத்தும் விதத்தில்தான் இருக்கிறது. ஒவ்வொரு Payment-க்கும் முன்பாக தேவையா அல்லது ஆசையா? என்று ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக்கொள்ளும் பழக்கம் வந்தாலே தேவையற்ற செலவுகளை குறைக்க முடியும்.

UPI Payment-ல் ஒரு கிளிக் போதும். ஆனால் அந்த ஒரு கிளிக்கால் உங்கள் மாத பட்ஜெட் பாதிக்கப்படாத அளவுக்கு செலவு செய்வதுதான் முக்கியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
UPI பரிவர்த்தனை வரம்பு
ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற இடைமுகம்
UPI பரிவர்த்தனைகள்
UPI கொடுப்பனவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bathroom Cleaning Tips: 10 நிமிட மேஜிக்: பாத்ரூம் டைல்ஸ் கறைகளை போக்க சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
D-Mart Bill Shock: ரூ.1,000-க்கு மட்டும் பொருட்கள் வாங்கப் போய் ரூ.3,000 பில் வருவது ஏன்? நடுத்தர மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியம்!
Recommended image3
Trending Golu Decoration : டிரெண்டிங் நவராத்திரி கொலு அலங்காரம்..இந்த ஐடியாக்களை டிரை பண்ணிப் பாருங்க!
Related Stories
Recommended image1
UPI Rule: அக்டோபர் 15 முதல் யுபிஐ-ல் புதிய விதி! ரூ.2,000க்கு மேல் பணம் செலுத்தினால் என்ன ஆகும்?
Recommended image2
UPI Charges: யுபிஐ கட்டணம் தவிர்க்க இந்த ட்ரிக் பயன்படுத்தாதீங்க! ஒரே கடைக்கு மீண்டும் பணம் அனுப்பினால் அலர்ட் வரும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved