குழந்தைங்க தொப்புள் கொடியை தாயத்தில் வைப்பது ஏன் தெரியுமா? பலர் அறியா தகவல்!!
Thoppul Kodi Thayathu : தொப்புள் கொடியில் தாயத்து செய்து குழந்தைகளுக்கு அணிவதில் உள்ள மருத்துவ நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

குழந்தைங்க தொப்புள் கொடியை தாயத்தில் வைப்பது ஏன் தெரியுமா? பலர் அறியா தகவல்!!
கிராமங்களில் குழந்தைகளுக்கு தொப்புள் கொடியில் தாயத்து செய்து அணிவித்திருப்பார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கு வசம்பு மூலிகையில் போடுவார்கள். இவற்றை சும்மா ஒன்றும் போட்டுவிட வில்லை. அதற்கென தனிக் காரணங்கள் உண்டு. குழந்தைகளின் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் வசம்பு. இதனை குட்டி துண்டுகளாக்கி குழந்தைகளின் இடுப்பில், கைகளில் தாயத்து வடிவில் கட்டிவிட்டால் வலிப்பு நோய்கள் வருவதை தடுக்க முடியும் என்பது முன்னோர் நம்பிக்கை. நெஞ்சு எரிச்சல், செரிமான கோளாறு, வயிறு உப்பசம், வயிறு வீக்கம், வயிற்று போக்கு ஆகிய பிரச்சனைகளை தடுக்க வசம்பு பலனளிக்கிறது. அது போல தான் குழந்தைகளின் தொப்புள் கொடியில் தாயத்து போடுவதும். இந்த பதிவில் தொப்புள் கொடி தாயத்து குறித்து விரிவாக காணலாம்.
தொப்புள் கொடி:
பிறந்த குழந்தைகளின் வயிற்றை நன்றாக பார்த்தால் தெரியும். அவர்களின் வயிற்றில் சிறிதளவு தொப்புள் கொடி ஒட்டியிருக்கும். காலப்போக்கில் அதுவே காய்ந்து உதிரும். இப்படி உலர்ந்த தொப்புள் கொடியை தாயத்தில் வைப்பார்கள். இதனை கழுத்தில், இடுப்பில் கயிற்றில் தொடுத்து கட்டிவிடுவார்கள். சிலர் வித்தியாசமாக தொப்புள் கொடியை உலரவிட்டு தூளாக்கி தாயத்துக்குள் போட்டுவிடுவார்கள். அது சரி இதை ஏன் செய்கிறார்கள் தெரியுமா?
தொப்புள் கொடி தாயத்து பின்னணி;
குழந்தை வளர்ந்த பின் ஏதேனும் கொடூர நோய் தாக்கினால் அப்போது அதிலிருந்து நிவாரணம் கிடைக்க தாயத்துக்குள் வைத்த தொப்புள் கொடியை எடுத்து பொடி செய்து தருவார்களாம். அதனால் நோய் குணமாகும் என முன்னோர் நம்பியுள்ளனர். பின்னாட்களில் இதை மூடநம்பிக்கை என பலர் தாயத்து செய்வதை நிறுத்திவிட்டனர். ஆனால் சிலர் இன்றும் தொப்புள் கொடி தாயத்தை குழந்தைக்கு அணிவிக்கிறார்கள்.
தொப்புள் கொடி நீளம்:
ஒவ்வொரு குழந்தைக்கும் கொடியின் நீளம் மாறுபடும். சுமாராக 20 முதல் 24 அங்குலங்கள் தொப்புள் கொடி இருக்கலாம். ஆனால் சில குழந்தைகளுக்கு அதைவிட நீளமாக இருக்கும்.
இதையும் படிங்க: கண்டெண்டுக்கு ஆசைப்பட்டு கம்பி எண்ண போகிறாரா இர்பான்? தொப்புள் கொடி வெட்டும் வீடியோவால் சர்ச்சை!
ஆராய்ச்சிகள்:
சில ஆராய்ச்சியாளர்கள் நரம்பியல் கோளாறுகள், திசு சேதம் போன்ற இரத்த நோய்கள் உள்பட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க தொப்புள் கொடி ஸ்டெம் செல்கள் பயன்படும் என சொல்கிறார்கள். அது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியும் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் மறந்தும் கூட இந்த நிலையில் தூங்காதீங்க...கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளுமாம்...
நோய் குணமாகுமா?
குழந்தைகள் வளர்ந்தபின் அவர்களுக்கு புற்றுநோய் மாதிரியான கொடிய நோய்கள் ஏற்பட்டால் தொப்புள் கொடியில் காணப்படும் மூலச் செல்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கமுடியும் என மருத்துவத்தில் சொல்லப்படுகிறது. பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் உள்ள தொப்புள் கொடி ரத்தம் (Umbilical cord blood) அதிகளவு மூலச்செல்களை கொண்டுள்ளன. இதில் இருந்து புதிய உடலின் உறுப்புக்களை உருவாக்க முடியும். ஆகவேதான் பிறக்கும் குழந்தையிடம் இருந்து ஸ்டெம் செல் என சொல்லப்படும் ரத்த ஆதார செல்லை தொப்புள் கொடியில் இருந்து எடுத்து சில மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கிறார்கள். இதன் மூலம் ரத்தம் தொடர்பான பல நோய்களை குணமாக்க முடியும் என சொல்கிறார்கள்.
இதுவே தொப்புள் கொடியின் மகத்துவம் அதனை தாயத்தில் சேமிப்பதற்கான பின்னணியாகும்.இன்றைய காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் தொப்புள் கொடியை சேமித்து வைக்கிறார்கள். பிறந்த குழந்தையிடம் இருந்து தொப்புள் கொடியை எடுத்து சேமிக்க அக்குழந்தையின் பெற்றோரிடம் அனுமதி கோரப்படுகிறது. இதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும்.