- Home
- Lifestyle
- Burn Belly Fat: தொப்பையை சட்டென கரைக்கும் அஸ்வகந்தா 'மேஜிக் டீ'..இப்படி ஒருமுறை எடுத்துக் கொண்டால் போதும்..
Burn Belly Fat: தொப்பையை சட்டென கரைக்கும் அஸ்வகந்தா 'மேஜிக் டீ'..இப்படி ஒருமுறை எடுத்துக் கொண்டால் போதும்..
Types Of Tea That Burn Belly Fat Easily: தொப்பையை குறைக்க படாத பாடு பட்டாலும் கொழுப்பு குறையவில்லையே என்ற கவலையில் இருப்பவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை கொடுக்கும்.

இன்றைய காலக்கட்டத்தில், உடல் பருமன், தொப்பை பிரச்சனையால் ஏராளமானோர் அவதிப்பட்டு வரும் நிலையில் ஆயுர்வேதத்தில் உள்ள சில வைத்தியங்கள் உடல் பருமன் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும். இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் கூட தொப்பை பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். தொப்பை கொழுப்பை எளிதாக நீக்குவது எப்படி என்பது பற்றி இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
ஊலாங் டீ:
ஊலாங் டீ என்பது சீன மூலிகை தேநீர் ஆகும், இது எடை இழப்புக்கு உதவுவதாக கண்டறிப்பட்டுள்ளது. ஊலாங் டீயை தினமும் குடிப்பது உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது உடலில் பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடை அதிகரிப்பின் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
கிரீன் டீ:
முதலில் ஒரு கப் வெந்நீரை கொதிக்க வைக்கவும். பிறகு ஒரு தேக்கரண்டி தேயிலை இலைகளை அளந்து அதனுடன் சேர்க்கவும். இப்போது காய்ச்சிய டீயை ஒரு கோப்பையில் வடிகட்டவும். இதில், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால் உடனடியாக கொலஸ்ட்ரால் குறைந்து , உடல் ஆரோக்கியத்தைத் தரும்.
மேலும் படிக்க..இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..மேஷம் ராசிக்கு யோகம்..!கன்னி ராசிக்கு பிரச்சனை..உங்கள் ராசிக்கு என்ன பலன்..?
வொயிட் டீ:
இது புதிய கொழுப்பு செல்களை உருவாக்குவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், உடலை புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமான வைத்துக் கொள்ள உதவுகிறது. இது சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், வயதான தோற்றத்தை மறைத்து இளமை போல் காட்சி தருகிறது.
பிளாக் டீ
இத்தாலிய ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, தினமும் ஒரு கப் பிளாக் டீ குடிப்பது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இரத்த ஓட்டம் மற்றும் இரத்த நாளங்களின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, ஆனால் அதில் பால் சேர்ப்பது இந்த நன்மைகளை தராது என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வகந்தா தேநீர்:
மிக முக்கியமான ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றான அஸ்வகந்தா தேநீரை காலை, மாலை இரு வேளை பருகலாம். இது மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், இந்த தேநீர் தூக்கம் பிரச்சனையால் போராடுபவர்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற உதவுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒன்று அல்லது இரண்டு அஸ்வகந்தா வேர் துண்டுகள் அல்லது ஒரு டீஸ்பூன் அஸ்வகந்தா தூளை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்ததும் கீழே இறக்கி அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து வடிகட்டி பருகலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.