MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Temples: நீங்கள் சுற்றுலா செல்ல விருப்பமா? கட்டிடக்கலையில் சிறந்த இந்தியாவில் உள்ள 10 பழமையான இந்து கோயில்கள்!

Temples: நீங்கள் சுற்றுலா செல்ல விருப்பமா? கட்டிடக்கலையில் சிறந்த இந்தியாவில் உள்ள 10 பழமையான இந்து கோயில்கள்!

Top 10 popular Temples in India: ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும்  கட்டிடக்கலையில் கம்பீரமாய் நிற்கும் 10 இந்து கோயில்களை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம். 

3 Min read
Anija Kannan
Published : Aug 06 2022, 05:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Kedarnath Temple

Kedarnath Temple

கேதார்நாத் கோயில்:

கம்பீரமான இமயமலைப் பனிப்பாறைகளுக்கு மத்தியில் உத்ரகாண்டில் அமைந்துள்ள  இந்த சிவன் கோயில், ஆன்மீக ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. இந்த கோவில் சிவபெருமானுக்காக  மகாபாரதத்தில் இருந்து பாண்டவர்களால் கட்டப்பட்டது என்று வரலாற்று ரீதியாக கூறப்படுகிறது. குளிர்காலத்தில் இக்கோயில் உள்ள  பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும். அதனால் பாதி வருடம் முழுவதும் இந்த கோவில் மூடியே கிடக்கிறது. இது பன்னிரண்டு ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாகும்.கோயிலை அடைய, சாலை வழியாக செல்ல முடியாதபக்தர்கள் 14 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டும்.

210
Rameshwaram Temple

Rameshwaram Temple


ராமேஸ்வரம் கோயில்:

உலகெங்கிலும் வாழும் இந்து மத மக்களால் ராமேஸ்வரம் கோயில் மிகவும் பிரபலமானது மற்றும் புனிதமானது என்று நம்பப்படுகிறது.இந்து மதத்தில் மிக உன்னத புராணங்களாக ராமாயணம், மகாபாரதம் உள்ளது. ஏனெனில், ராமபிரான் இலங்கைக்கு சென்று ராவணனை தோற்கடித்த பிறகு தனது மனைவி தேவி சீதையுடன் வந்து சிவலிங்கத்தை வடிவமைத்து வழிபட்ட இடம் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கட்டிடக்கலையில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, தமிழ்நாட்டில்  மிகவும் பிரபலமானது.

310
Somnath Temple

Somnath Temple


சோமநாதர் கோவில்

குஜராத்தின் சௌராஷ்டிராவில் அமைந்துள்ள சோம்நாத் கோவில் இந்தியாவின் மிகப் பழமையான கட்டிடக்கலையில் தலைசிறந்த ஒன்றாகும். ஏழாம் நூற்றாண்டில் சிவனுக்காக கட்டப்பட்ட இந்த ஆலயம் பனிரெண்டு ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் சீரமைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. நீங்கள் இந்த ஆண்டில் கோவில் சுற்றுலா செல்ல விரும்பினால் சௌராஷ்டிராவிற்கு ஒருமுறை வந்துஇதன் மகிமை மற்றும் வரலாற்று பக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

410
brihadeeswarar temple

brihadeeswarar temple

பிரகதீஸ்வரர் கோயில்:

பிரகதீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, மேலும்,  இது இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பழமையான கோயில்களில் ஒன்றாகும். கிரானைட் கல்லினால் கட்டப்பட்ட இந்த கோவில் யுனெஸ்கோவால் உலக பாரம்பாரியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோழ வம்சத்தின் மன்னன் முதலாம் ராஜ ராஜ சோழனால் 11-ம் நூற்றாண்டில் 1000 ஆண்டு பழமையான இந்த தஞ்சை பெரியக்கோவில்  கட்டப்பட்டது.  சிவபெருமானுக்கு கட்டப்பட்ட மிகப்பெரிய இந்து கோவில் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

510
Jagannath temple

Jagannath temple

ஜகன்னாதர் கோவில்

ஒடிசாவின் தலைநகரமான புவனேஷ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த பூரி ஜெகன்நாதர் ஆலயம் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சோழ மன்னன் அனந்தவர்மன் சோதகங்க தேவனால் கட்டப்பட்டது. . ஒவ்வொரு கோவிலுக்கும் எதாவது மர்மங்கள் தனி சிறப்புகள் மற்றும் மர்மங்கள் அடங்கி இருக்கும். ஆம், இது மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல், ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின் சிலை புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். இந்த கோவிலில் தேர் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.  ஆலயத்தில் ஜகன்னாதர், தேவி சுபத்ரா மற்றும் பாலபத்திரர் ஆகிய  மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர்.

610
Meenakshi Temple

Meenakshi Temple

மீனாட்சி கோவில்

தமிழ்நாட்டின் மதுரையில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோயில் 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கோயிலின் கட்டிடக்கலை சிறப்பால் உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்பட்டது. முழு கோயிலையும் தொள்ளாயிரத்து எண்பத்தைந்து தூண்கள் அலங்கரிக்கின்றன, மேலும் அவை ஒவ்வொன்றும் வித்தியாசமாக செதுக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள்  வந்து ஆன்மீக அடிப்படையில் மட்டுமின்றி, இந்த கோவிலின் கட்டியக் கலையினையும்  பார்வையிடுகின்றனர். 

710
Badrinath Temple

Badrinath Temple

பத்ரிநாத் கோயில்:

உத்தரகண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் நகரில் அமைந்துள்ள இந்த கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோயில் நான்கு புனிதத் தலங்களில் ஒன்றாகும். சில வரலாற்று தகவல்களின்படி, எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கராச்சாரியார் இந்து கோயிலாக மாற்றும் வரை இது ஒரு புத்த ஆலயமாக இருந்தது.


மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...ஜனவரி 17, 2023 வரை மிகுந்த உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்..

810
thillai nataraja

thillai nataraja


தில்லை நடராஜர் கோயில்:

சிவபெருமானின் முக்கிய கோயில்களில் ஒன்றான தில்லை நடராஜர் கோயில், சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படு.இந்த கோவில் சுமார் 1,06,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, நடராஜராக சிவனின் தனித்துவமான வடிவம் கோயிலின் முதன்மை தெய்வம் மற்றும் அவர் கோயிலின் ஒவ்வொரு கல் மற்றும் தூணிலும் காணப்படுகிறார். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். 

910
Amarnath Cave Temple

Amarnath Cave Temple

அமர்நாத் குகைக் கோயில், ஜம்மு காஷ்மீர்

 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயில் 5000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, ஆனால், இந்த பனிபடர்ந்த புனித குகை கோயில் 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அமர்நாத் குகைக்கோயிலில் சிறப்பம்சமே பனிலிங்கம்.  3900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு குளிர்காலத்தில் பயணிக்க முடியாது. 

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...ஜனவரி 17, 2023 வரை மிகுந்த உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்..

1010
Annamalai Temple:

Annamalai Temple:

திருவண்ணாமலை கோவில்:

இந்த திருவண்ணாமலை கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகும். அண்ணாமலையர் கோயில்  சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோவில் இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாகும். ஒவ்வொரு பௌர்ணமி இரவன்றும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் 14.7 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையை கிரிவலம் வந்து, சிவபெருமானையும் அம்பாளையும் தரிசித்து அவர்களின் அருளையும் சித்தர்களின் ஆசிகளையும் பெறுகின்றனர்.

மேலும் படிக்க...Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...ஜனவரி 17, 2023 வரை மிகுந்த உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்..

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved