Tomato Fever: குழந்தைகளை குறி வைத்து தாக்கும் தக்காளி காய்ச்சல்,அதன் அறிகுறிகள் என்ன? எப்படி தற்காத்து கொள்வது
Tomato Fever SPREADS in India: தக்காளி காய்ச்சல் பரவாமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்பதை, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
Tomato flu
தக்காளி காய்ச்சல் முதன்முதலில் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் மே 6 ஆம் தேதி கண்டறியப்பட்டது. பின்னர் நெடுவத்தூர், ஆரியங்காவு, அன்சால் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த காய்ச்சல் பரவி உள்ளது. இதுவரை 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகளும், 10 வயதுக்குட்பட்ட 26 சிறுவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அரசு மருத்துவமனைகள் தகவல் தெரிவிக்கின்றன.
Tomato flu
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன, அது எவ்வாறு பரவுகிறது?
தக்காளி காய்ச்சல் குடல் வைரஸால் ஏற்படுகிறது. அத்துடன் இந்த வைரஸ் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுகிறது. ஏனென்றால், பெரியவர்களுக்கு வைரஸிலிருந்து பாதுகாக்க போதுமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இந்தத் தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு வாய் , கை மற்றும் கால் பாதங்களில் கொப்புளங்கள் தோன்றும். இந்தக் கொப்புளங்கள் பார்ப்பதற்கு "தக்காளி" போல இருப்பதால் இந்த காய்ச்சலுக்கு தக்காளி காய்ச்சல் என்று பெயர் வந்தது.
Tomato flu
தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள்:
இந்த அறிகுறிகள் சிக்குன் குனியாவின் அறிகுறிகளைப் போலவே மக்களின் உடலில் தெரியும். குறிப்பாக தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, அதிக காய்ச்சல், உடல் வலி, மூட்டு வலி, சோர்வு போன்றவை அடங்கும். அதே நேரத்தில், தோலில் ஏற்படும் தடிப்புகள் தோல் எரிச்சலையும் ஏற்படுத்தும். மற்ற வைரஸ் தொற்றுகளைப் போலவே, சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், நீரிழப்பு, மூட்டுகளில் வீக்கம், உடல்வலி மற்றும் பொதுவான காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் அடங்கும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tomato flu
மேலும், இந்தக் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும், நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்ன முன்னெச்சரிக்கைகள் தேவை?
மற்ற குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க ஏதேனும் அறிகுறி தோன்றியதிலிருந்து 5-7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
Tomato flu
தடுப்புக்கான சிறந்த தீர்வாக, சரியான சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தேவைகள் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துதல், அத்துடன் பாதிக்கப்பட்ட குழந்தை பொம்மைகள், உடைகள், உணவு அல்லது பிற நோய்த்தொற்று இல்லாத குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதைத் தடுப்பதாகும்.
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கு இந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருந்தால் அருகில் உள்ள மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.