MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Astrology : உஷார்... விவாதங்களை தவிர்த்து சிந்தித்து செயல்பட வேண்டிய 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?

Astrology : உஷார்... விவாதங்களை தவிர்த்து சிந்தித்து செயல்பட வேண்டிய 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?

இன்றைய நாள் எப்படி இருக்கு... 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் 

4 Min read
manimegalai a
Published : Dec 04 2021, 06:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113

சனிக்கிழமை

இன்று கார்த்திகை- 18, இன்றைய நட்சத்திரம் - காலை 11.48 வரை அனுஷம் பின்பு கேட்டை.

சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை        

213

இன்றைய ராசி பலன்:

மேஷம் -ராசி:

தொழில் சார்ந்த அலைச்சல்கள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் குழப்பங்களும், தெளிவின்மையும் உண்டாகும். சகிப்புத்தன்மை வேண்டிய நாள்.

உங்களின் அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

அஸ்வினி : தாமதங்கள் உண்டாகும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : குழப்பமான நாள்.

 

313

ரிஷபம் -ராசி:  

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். மேன்மை பொருந்திய நாள்.

உங்களின் அதிர்ஷ்ட திசை : வடக்கு.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

413

மிதுனம் -ராசி:

குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆதரவு கிடைக்கும் நாள்.

உங்களின் அதிர்ஷ்ட திசை : தெற்கு.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு.

மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு மேம்படும்.
புனர்பூசம் : வரவுகள் கிடைக்கும்.

 

513

கடகம் -ராசி:

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய வேலை சம்பந்தமான முயற்சிகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். போட்டிகள் நிறைந்த நாள்.

உங்களின் அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூசம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : லாபம் மேம்படும்.

613

சிம்மம் -ராசி:

எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடல் சோர்வு ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கால்நடை தொடர்பான விஷயங்களில் லாபம் மேம்படும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

உங்களின் அதிர்ஷ்ட திசை : வடக்கு.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் :  சாதகமான நாள்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

 

713

கன்னி -ராசி:

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.

உங்களின் அதிர்ஷ்ட திசை : வடமேற்கு.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

உத்திரம் : இன்னல்கள் குறையும்.
அஸ்தம் : எண்ணங்கள் மேம்படும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.

 

813

துலாம் -ராசி:

வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சூழல் அமையும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது. சோர்வு நிறைந்த நாள்.

உங்களின் அதிர்ஷ்ட திசை : தெற்கு.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

சித்திரை : மதிப்பு மேம்படும்.
சுவாதி : புரிதல் உண்டாகும்.
விசாகம் : புதுமையான நாள்.

913

விருச்சிகம் -ராசி:

உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் மாற்றங்கள் உண்டாகும். இன்பமான நாள்.

உங்களின் அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

விசாகம் : பொறுப்புகள் மேம்படும்.
அனுஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை : மாற்றங்கள் உண்டாகும்.

1013

தனுசு -ராசி:

உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

உங்களின் அதிர்ஷ்ட திசை : கிழக்கு.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : பொறுப்புகள் குறையும்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

1113

மகரம் -ராசி:
எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழல் அமையும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். புதுவிதமான பயணங்களின் மூலம் சோர்வு நீங்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும்.
 அசதியான நாள்.

உங்களின் அதிர்ஷ்ட திசை : மேற்கு.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்.

உத்திராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.
திருவோணம் : தெளிவு பிறக்கும்.
அவிட்டம் : சோர்வு நீங்கும்.

1213

கும்பம் -ராசி:

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.

உங்களின் அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

அவிட்டம் : ஆதரவான நாள்.
சதயம் : ஆர்வம் பிறக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.

 

1313

மீனம் -ராசி:

வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்துவந்த சோர்வு நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். அனுசரித்து செல்ல வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்.

பூரட்டாதி : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : உற்சாகமான நாள்.
ரேவதி : மேன்மை உண்டாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
Recommended image2
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்
Recommended image3
பெண் தோழியிடம் 'இப்படி' தான் பழகனும்- சாணக்கியர்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved