MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • முன்பதிவு செய்யாமல் திருப்பதி போறீங்களா? இலவச தரிசன டோக்கன் எங்கு, எப்படி வாங்குவது? A to Z கைடு!

முன்பதிவு செய்யாமல் திருப்பதி போறீங்களா? இலவச தரிசன டோக்கன் எங்கு, எப்படி வாங்குவது? A to Z கைடு!

திருப்பதி இலவச SSD டோக்கன் கிடைக்கவில்லையா? திருப்பதிக்கு டிக்கெட் முன்பதிவு இல்லையா? இலவச SSD டோக்கன் எங்கு கிடைக்கும், எப்படி வாங்குவது? ஏழுமலையான் இலவச சர்வ தரிசன முழு வழிகாட்டி இதோ!

2 Min read
Author : Meenakshisundaram
Published : Oct 14 2026, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
திருப்பதி இலவச தரிசன டோக்கன் எங்கு, எப்படி வாங்குவது?
Image Credit : others

திருப்பதி இலவச தரிசன டோக்கன் எங்கு, எப்படி வாங்குவது?

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது பல கோடி பக்தர்களின் விருப்பம். ஆனால், தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யாமல் திடீரெனத் திருப்பதி செல்ல நினைப்பவர்கள், இலவச தரிசன டிக்கெட் எங்கு கிடைக்கும், எத்தனை மணிக்கு வழங்கப்படும், எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் போன்ற பல கேள்விகளுடன் பயணத்தைத் திட்டமிடுகின்றனர். அப்படிப்பட்ட பக்தர்களுக்கு உதவும் வகையில், திருப்பதி தேவஸ்தானம் (TTD) வழங்கும் இலவச சர்வ தரிசன முறை மற்றும் டிக்கெட் பெறுவதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இலவச தரிசன டிக்கெட் என்றால் என்ன?
Image Credit : Indianeagle

இலவச தரிசன டிக்கெட் என்றால் என்ன?

திருப்பதி கோயிலில் பணம் செலுத்தாமல் ஏழுமலையானைத் தரிசிக்க உதவும் முறைக்கு சர்வ தரிசனம் (Sarva Darshan) என்று பெயர். இதில், குறிப்பிட்ட நேரத்தில் தரிசன வரிசையில் நுழைய உதவும் இலவசநேர ஒதுக்கீட்டுச் சீட்டு, Slotted Sarva Darshan (SSD) டோக்கன் எனப்படுகிறது. இந்த டோக்கன்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழங்கப்படுவதால், அனைவருக்கும் கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.

36
எங்கு சென்று இலவச டிக்கெட் பெறலாம்?
Image Credit : Asianet News

எங்கு சென்று இலவச டிக்கெட் பெறலாம்?

திருப்பதிக்கு நேரில் செல்லும் பக்தர்கள், TTD அறிவிப்புகளின்படி பின்வரும் மையங்களில் SSD டோக்கன்கள் கிடைக்கிறதா என்பதைச் சரிபார்க்கலாம். ஸ்ரீநிவாசம் (Srinivasam): திருப்பதி பேருந்து நிலையம் அருகில். விஷ்ணு நிவாசம் (Vishnu Nivasam): திருப்பதி ரயில் நிலையம் அருகில். பூதேவி காம்ப்ளெக்ஸ் (Bhudevi Complex): அலிபிரி பகுதியில். இந்த மையங்களில் டோக்கன்கள் வழங்கப்படும் நடைமுறையை TTD அறிவித்துள்ளது. இருப்பினும், தற்போதைய விநியோக இடங்கள், நேரம் மற்றும் அன்றைய டோக்கெட் இருப்பு ஆகியவற்றை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உறுதிப்படுத்திய பிறகே பயணத்தைத் திட்டமிட வேண்டும்.

46
டிக்கெட் பெற என்ன செய்ய வேண்டும்?
Image Credit : instagram

டிக்கெட் பெற என்ன செய்ய வேண்டும்?

படி 1: திருப்பதிக்குச் செல்வதற்கு முன்பு TTD அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.

படி 2: SSD டோக்கன்கள் வழங்கப்படும் மையங்கள் மற்றும் அன்றைய இருப்பு குறித்த அறிவிப்பைப் பார்க்கவும்.

படி 3: டோக்கன்கள் நேரில் வழங்கப்படும் மையத்திற்குச் சென்று, அங்குள்ள பணியாளர்கள் தெரிவிக்கும் நடைமுறையைப் பின்பற்றவும்.

படி 4: டோக்கன் கிடைத்தால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசன நேரம் மற்றும் வழிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும்.

படி 5: ஒதுக்கப்பட்ட நேரத்திற்கே தரிசன வரிசைக்குச் செல்லவும். நேரத்திற்கு முன்னதாகவோ தாமதமாகவோ சென்றால் அனுமதி மறுக்கப்படலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.tirumala.org/

ஆன்லைன் சேவைகள்: https://ttdevasthanams.ap.gov.in

56
இலவச டிக்கெட் கிடைக்காவிட்டால் என்ன செய்வது?
Image Credit : Getty

இலவச டிக்கெட் கிடைக்காவிட்டால் என்ன செய்வது?

SSD டோக்கன்கள் கிடைக்கவில்லை என்றால், முன்பதிவு இல்லாத சர்வ தரிசன வரிசையில் அனுமதி வழங்கப்படுகிறதா என்பதை TTD அறிவிப்பில் சரிபார்க்கலாம். இம்முறையில் காத்திருக்கும் நேரம் அதிகமாக இருக்கலாம். உதாரணமாக, 2026 அக்.14 அன்று வெளியிடப்பட்ட TTD தகவலின்படி, SSD டோக்கன் இல்லாத சர்வ தரிசனத்திற்கு சுமார் 8 முதல் 10 மணி நேரம் காத்திருக்கும் நிலை இருந்தது. இது அன்றைய நிலவரம் மட்டுமே; கூட்டத்தைப் பொறுத்து காத்திருக்கும் நேரம் மாறும்.

66
முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை
Image Credit : Social Media AI Meta

முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை

இலவச SSD டோக்கன்களுக்கு கட்டணம் கிடையாது. டோக்கன்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழங்கப்படுவதால், முன்கூட்டியே சென்றாலும் கிடைப்பது உறுதி இல்லை. தரிசன டோக்கன் பெறுவதற்காக இடைத்தரகர்களிடம் பணம் கொடுக்க வேண்டாம். ஆதார் போன்ற அடையாள ஆவணத்தை எடுத்துச் செல்லவும்; எந்த ஆவணங்கள் கட்டாயம் என்பதை அன்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்கவும்.

குழந்தைகள், முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்னை உள்ளவர்கள் நீண்ட நேரக் காத்திருப்பை கருத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிட வேண்டும். திருப்பதி பயணத்தில் மிக முக்கியமானது, தரிசன டோக்கெட் இருப்பை உறுதிப்படுத்தாமல் பயணச் செலவுகளைச் செய்து விடாமல் இருப்பதுதான். அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பார்த்துத் திட்டமிட்டால், தேவையற்ற காத்திருப்பையும் பயணச் சிரமத்தையும் குறைக்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indolium தோசைக்கல் vs ஸ்டீல் தோசைக்கல்.! முறுகல் தோசைக்கு எந்த தோசைக்கல் பெஸ்ட்?
Recommended image2
Hotel Safety Tricks: கட்டிலுக்கு அடியில் ஆபத்து.! ஹிடன் கேமரா முதல் ரகசிய ஆபத்து வரை.! அறைக்குள் போனதும் உஷார்!
Recommended image3
Water Can Cleaning: பிரஷ் இல்லாமலே தண்ணீர் கேனை சுத்தம் செய்யலாம்! எளிய வழிகள் இதோ!
Related Stories
Recommended image1
Water Can Cleaning: பிரஷ் இல்லாமலே தண்ணீர் கேனை சுத்தம் செய்யலாம்! எளிய வழிகள் இதோ!
Recommended image2
இஞ்சி பூண்டு பேஸ்ட் 6 மாதம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷா இருக்கணுமா? இந்த 1 பொருளை மட்டும் சேர்த்துப் பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved