MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃப்ரிட்ஜில் வைக்கும் காய்கறிகள், பழங்கள் சீக்கிரமே அழுகாமல் இருக்க சூப்பரான டிப்ஸ்!

ஃப்ரிட்ஜில் வைக்கும் காய்கறிகள், பழங்கள் சீக்கிரமே அழுகாமல் இருக்க சூப்பரான டிப்ஸ்!

Fridge Using Tips  : உங்கள் வீட்டில் இருக்கும் ஃப்ரிட்ஜை இப்படி பராமரித்தால் காய்கறிகள் பழங்கள் விரைவில் அழுகிப் போகாது. ஃப்ரிட்ஜும் வாசனையாக இருக்கும்.

3 Min read
Author : Kalai Selvi
Published : Sep 23 2024, 04:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Fridge Storage Tips In Tamil

Fridge Storage Tips In Tamil

ஃப்ரிட்ஜ் வசதியானவர்கள் வீட்டில் மட்டும் இருக்கும் என்று காலம் போய், இன்று ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளை பார்க்கவே முடியாது. எல்லோருடைய வீடுகளிலும் ஃப்ரிட்ஜ் இருக்கும். சொல்லபோனால், ஃப்ரிட்ஜ் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகிவிட்டது. பழங்கள், காய்கறிகள், மீந்த உணவுகள் போன்றவற்றை வைக்க ஃப்ரிட்ஜ் பயன்படுத்துகிறோம்.

ஆனால், ஃப்ரிட்ஜில் எந்தெந்த பொருள் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இதனால் பிரிட்ஜில் வைக்கும் பழங்கள் காய்கறிகள் அழுகி போய் விடுகின்றன. அப்படி ஃப்ரிட்ஜில் வைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் அழுகாமல் இருக்க, ஃபிரிட்ஜ் பயன்படுத்துவதற்கு முன் அவற்றை குறித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க:  உங்க ஃப்ரிட்ஜ் வாடையில்லாமல் எப்பவும் வாசனையாக இருக்க சூப்பரான டிப்ஸ்...!.கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Fridge Storage Tips In Tamil

Fridge Storage Tips In Tamil

பிரிட்ஜில் வைக்கும் காய்கறிகள் பழங்கள் அழுகாமல் இருக்க டிப்ஸ் :

உங்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் இருக்கிறது என்றால், முதலில் அந்தந்த பருவ நிலைக்கு ஏற்ப அதை கவனமாக  பாராமரிக்க வேண்டும். மேலும், ஃப்ரீசரில் அதிக ஐஸ் கட்டி உருவானால் ஃப்ரிட்ஜில் கொடுக்கப்பட்டிருக்கும் நடுவில் இருக்கும் பொத்தானை அழுத்தி விடுங்கள். இதனால் ஐஸ் கட்டி உருவாகாது மற்றும் ஃப்ரீசர் கதவும் உடையாமல் இருக்கும்.

அதுபோல காய்கறிகள், பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது பிளாஸ்டிக் பையை பயன்படுத்த வேண்டாம். இதனால் சீக்கிரமே அவை அழுகிவிடும். அதற்கு பதிலாக நீங்கள் ஒரு காட்டன் பை அல்லது மெல்லியதான காட்டன் துணியில் சுற்றி காய்கறிகள் மற்றும் பழங்களை தனித்தனியாக சேமிக்கவும். ஏனெனில், காட்டன் ஈரத்தை உறிஞ்சும். எவ்வளவு நாட்கள் ஆனாலும் அவைகள்
அழுகாது. 

35
Fridge Storage Tips In Tamil

Fridge Storage Tips In Tamil

பச்சை மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை ஆகியவற்றை காம்பை நீக்கி காட்டன் பையில் வைத்து பாருங்கள் அவை நீண்ட நாள் பிரஷ் ஆகவே இருக்கும். மணமும் மாறாமல் அப்படியே இருக்கும். 

இஞ்சியில் மண் இருந்தால் அதை தண்ணீரில் நன்கு கழுவி அப்படியே திறந்தபடி வையுங்கள். மூடி வைத்தால் அதில் பூஞ்சைகள் உருவாகும்.

தேங்காயை நீங்கள் ஃப்ரிட்ஜில் அப்படியே வைத்தால் அழுகிவிடும். எனவே, தேங்காயை துருவி அதை ஒரு டப்பாவில் போட்டு மூடி வையுங்கள். இதனால் சமைக்கும் போது அவசரத்திற்கு கூட பயன்படுத்தலாம்.

சீஸ், பட்டர் போன்ற பால் பொருட்களை அப்படியே பிரிட்ஜில் வைக்காமல், அதை அலுமினிய பேப்பரில் சுருட்டி, அதை ஒரு டப்பாவில் போட்டு வைத்து பயன்படுத்துங்கள்.

இட்லி தோசை மாவை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது மூடாமல் வைக்காதீர்கள். அதற்கென உரிய டப்பாவில் போட்டு நன்கு மூடி வைக்கவும். ஃப்ரிட்ஜில் மீதமான உணவை வைக்கும் போது மூடி வைத்து பழகுங்கள். முக்கியமாக அதை மறுநாளே பயன்படுத்துங்கள்.

45
Fridge Storage Tips In Tamil

Fridge Storage Tips In Tamil

பழங்களை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அதை மூடி வைத்தால் விரைவில் அழுகிவிடும். எனவே, அதை அப்படியே காற்றோட்டமாக வைக்கவும். இல்லை எனில் ஓட்டைகள் இருக்கும் டப்பாவில் வைக்கலாம்.

மல்லிகைப்பூ போன்ற எந்த ஒரு பூவையும் ஃப்ரிட்ஜில் வைக்கும் போது அதை அப்படியே வைக்காமல், அதை ஒரு கவரில் அல்லது காற்று வெளிய போகாதவாறு ஒரு டப்பாவில் அடைத்து வையுங்கள். இல்லையெனில், அதிலிருந்து வரும் வாசனை பிரிட்ஜில் இருக்கும் எல்லா உணவுப் பொருட்களின் மீதும் வீசும்.

ஃப்ரிட்ஜில் எவர்சில்வர் பாத்திரங்களை வைக்காதீர்கள் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்களை அடுக்கி வைப்பதை குறைக்கவும். ஃப்ரிட்ஜில் அதிக இடம் இருக்கிறது என்ற காரணத்திற்காக தேவையற்ற பொருட்களை வாங்கி வைக்காதீர்கள். 

ஃப்ரிட்ஜ் வைத்திருந்தால் அதை சுற்றிலும் போதிய இடைவெளி கண்டிப்பாக இருக்க வேண்டும் குறிப்பாக காற்றோட்டம் பகுதிகளில் ஃப்ரிட்ஜ் இருப்பது ரொம்பவே நல்லது. 

55
Fridge Storage Tips In Tamil

Fridge Storage Tips In Tamil

முக்கிய குறிப்பு :

ஃப்ரிட்ஜை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யுங்கள். அப்போதுதான் உங்களது பிரிட்ஜ் பழுது அடையாமல் நீண்ட நாள் நன்றாக இருக்கும். மேலும், அதில் தேவையற்ற அல்லது நீண்ட நாள் இருக்கும் பொருட்கள் ஏதாவது இருந்தால் அவற்றை தூக்கி போடுங்கள்.

அதுபோல ஃப்ரிட்ஜின் பின்பக்கம் இருக்கும் டப்பாபில் தண்ணீரை அடிக்கடி வெளியேற்றவும் மற்றும் சுத்தமாக வைக்கவும். இல்லையெனில் அதில் கொசுக்கள் தங்கிவிடும். இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.

எலுமிச்சை பழத்தை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜின் மூலையில் வைத்தால் உங்களுக்கு ஃப்ரிட்ஜ் எப்போதும் வாசனையாகவே இருக்கும்.

இதையும் படிங்க:  உங்க வீட்டில் சுவரை ஒட்டிய படி ஃப்ரிட்ஜ் இருக்கா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved