மூர்க்கமாக கோபப்படும் டீன்ஏஜ் பசங்க கிட்ட 'இப்படி' தான் பேசனும்!!
Parenting Tips For Teenage Anger : பதின்ம வயதினரின் கோபத்தைக் கட்டுப்படுத்த பெற்றோர்கள் சில முக்கியமான குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும். அது என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
குழந்தைகள் பருவமடையும் போது அவர்களின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவது இயற்கையானது தான். ஹார்மோன்கள், மன அழுத்தத்தின் தாக்கம் காரணமாக, அவர்கள் மன மோதலால் பாதிக்கப்படுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் அளவுக்கு அதிகமாக அடிக்கடி கோபப்படுகிறார்கள்.
இதுபோன்ற சமயங்களில் பதின்ம வயதினர் மீது பெற்றோர்கள் சில சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, அவர்களது கோபத்தைக்
கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், டீன் ஏஜ் கோபத்தைக் கட்டுப்படுத்த பெற்றோர்களுக்குரிய சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.
டீன் ஏஜ் கோபத்தை குறைக்க டிப்ஸ் :
1. பெற்றோரின் நடத்தை அவசியம் : பொதுவாகவே, குழந்தைகள் தங்கள் பெற்றோரைப் பார்த்து தான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள். ஒருவேளை வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள், கோபம் இருந்தால் வளரும் குழந்தைகளும் அதையே கற்றுக் கொள்வார்கள். இதன் தாக்கம் டீன் ஏஜ் வயதில் அவர்கள் அளவுக்கு அதிகமாக கோபப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, வீட்டில் பெற்றோரின் இடத்தை சரியான முறையில் இருந்தால், குழந்தைகளும் அதையே கற்றுக் கொள்வார்கள்.
2. இணக்கமான சூழல்: பதின்வயதினர் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த சரியான சூழல் இருப்பது மிகவும் அவசியம். எப்படியெனில், அவர்கள் கோபப்படுவதற்கான காரணங்களை கேட்க வேண்டும். அவர்களின் காரணம் நியாயமானதாக இருந்தால், அவர்கள் தங்கள் கோபத்தை நியாயமான முறையில் வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
3. கவனத்துடன் கேளுங்கள்: உங்கள் டீன் ஏஜ் குழந்தை கோபமாக இருந்தால், குறுக்கிடாமல், அவர்கள் சொல்வதை முதலில் கேளுங்கள். அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இப்படி நீங்கள் நடந்து கொண்டால் உங்கள் டீனேஜ் குழந்தை கண்டிப்பாக தங்களது நடத்தையை மாற்றலாம்.
4. தண்டிக்காதே! சில சமயங்களில் டீன் ஏஜ் குழந்தைகளின் கோபம் அவர்களது கட்டுப்பாட்டையும் மீறும். உதாரணமாக சத்தமாக கத்துவது, மற்றவர்களை அடிப்பது, இல்லாவிட்டால் வீட்டில் இருக்கும் பொருட்களை உடைப்பது. இது போன்ற நடத்தை நல்லதல்ல என்று அவர்களுக்கு புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள். ஆனால், எக்காரணம் கொண்டும் அவர்களை ஒருபோதும் தண்டிக்க வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
5. தகராறு செய்யாதே! உங்கள் டீன் ஏஜ் அடிக்கடி கோபப்படுகிறார்கள் என்றால் நீங்கள் அவர்களுடன் ஒருபோதும் தகராறு செய்யக்கூடாது இதனால் அவர்களது கோபம் மேலும் அதிகரிக்கும். மேலும், பதின்ம வயதினரைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர்களை சமாளிக்கும் வழிமுறைகளில் கவனம் செலுத்துங்கள். அவர்களுடன் பேசும்போது உங்களது வார்த்தை எளிதாகவும் அர்த்தம் உள்ளதாகவும் இருக்க வேண்டும் அப்போதுதான் அவர்கள் உங்கள் வழிக்கு வருவார்கள்.
6. மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் : உங்கள் பதின்வயதினர் கோபம் காரணமாக படிப்பில் பின்தங்கினாலோ, உறவினர்களிடம் சரியாக பேசாமல் இருந்தாலோ மற்றும் உடல்நிலையும் கணிசமாக பாதிக்கப்பட்டாலோ தாமதிக்காமல் உடனே மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.
7. கோபத்தை கட்டுப்படுத்த சில நுட்பங்கள் : பதின்வயதினர் தங்கள் கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க சில நுட்பங்களை கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள். உதாரணமாக, ஆழ்ந்த சுவாச நுட்பங்கள், தியானம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை ஆகும். மேலும், இதனால் அவரது உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்கள் டீனேஜ் குழந்தையின் உணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கும்.