மதியம் சாப்பிட்ட பிறகு தூக்கம் வருதா? கட்டுப்படுத்த செம்ம டிப்ஸ்!!
Post Lunch Sleepiness : மதிய உணவுக்கு பிறகு உங்களுக்கு தூக்கம் வந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை முயற்சி செய்யுங்கள். அது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

மதியம் சாப்பிட்ட பிறகு தூக்கம் வருதா? கட்டுப்படுத்த செம்ம டிப்ஸ்!!
சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது ஒரு பொதுவான விஷயம். ஆனால் சாப்பிட்ட உடனே தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுவே நீங்கள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தால் உங்களால் அங்கு உடனே தூங்கவும் முடியாது. அது தூங்குவதற்கான இடமும் அல்ல. இத்தகைய சூழ்நிலையில் அலுவலகத்தில் மதிய உணவுக்குப் பிறகு உங்களுக்கு தூக்கம் வருகிறதா? பெரும்பாலானோர் மதிய உணவுக்கு பிறகு தூக்கம் வருவதாக அடிக்கடி சொல்லுகிறார்கள். மேலும் தூக்கத்தை தவிர்ப்பதற்காக மதிய உணவு தவிர்ப்பது நல்லதல்ல. சரியான நேரத்திற்கு சாப்பிடாவிட்டால் உடல் ஆரோக்கியத்தில் பல கோளாறுகள் ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே மதிய உணவுக்கு பிறகு வரும் தூக்கத்தை தவிர்க்க சில விஷயங்களை நீங்கள் முயற்சி செய்யலாம். அவற்றை பின்பற்றுவதன் மூலம் சுறுசுறுப்பாக இருப்பீர்கள், சோர்வாக உணரவே மாட்டீர்கள்.
அதிகம் சாப்பிடாதே!
பொதுவாக நாம் அதிகமாக சாப்பிடும் போது தூக்கம் வருவது இயற்கைதான் எனது நீங்கள் மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் கண்டிப்பாக வரும். எனவே நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஆனால் ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதற்கு பதிலாக அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக ஏதாவது சாப்பிடுங்கள். இதனால் நீங்கள் நிறைய சாப்பிடுவது தடுக்கப்படும் மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலின் அளவும் அதிகரிக்கும்.
பழங்கள் மற்றும் உலர் பழங்களை சாப்பிடு!
நம்முடைய உடல் சோர்வாக இருக்கும் போது தூக்கம் வர ஆரம்பிக்கும். அதுவும் குறிப்பாக மதிய உணவுக்கு பிறகு தூக்கம் வந்தால் அத்தகைய சூழ்நிலையில், உங்களது ஆற்றல் மட்டத்தை பராமரிக்க பழங்கள் மற்றும் உலர் பழங்களை நீங்கள் சாப்பிடுங்கள். இதன் மூலம் உங்கள் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். மேலும் நீங்கள் உங்கள் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.
இதையும் படிங்க: இரவு படுத்தவுடனே தூக்கம் வர வேண்டுமா? இந்த '5' மட்டும் செய்தால் போதும்!!
இரவு நன்றாக தூங்கவும்:
இரவு நீண்ட நேரம் தூங்காமல் இருந்தால் பகலில் தூக்கம் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுபோல மதிய உணவுக்கு பிறகு உங்களுக்கு தூக்கம் வந்தாலோ அல்லது நீங்கள் சோர்வாக உணர்ந்தாலோ இரவு நீங்கள் சரியாக தூங்கவில்லை என்பதற்கான அறிகுறிதான். இதற்கு நீங்கள் இரவு 10 மணிக்கு முன்பாக தூங்கி காலை 6-7 மணிக்குள் எழுந்திருக்கவும். இதனால் உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்கும் மற்றும் சோர்வையும் நீக்கும். எனவே, இரவு நீங்கள் நன்றாக தூங்கினால் மதியம் சாப்பிட்ட பிறகு உங்களுக்கு தூக்கம் வருவது தடுக்கப்படும்.
சூயிங் கம்:
சூயிங் கம் சோர்வை குறைக்கிறது மற்றும் புத்துணர்ச்சி அளிக்கிறது என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. எனவே சாப்பிட்ட பிறகு சுமார் ஐந்து நிமிடங்கள் சூயிங் கம் சாப்பிட்டால் தூக்கம் வருவதை தடுக்கும்.
இதையும் படிங்க: தினமும் இந்த சின்ன சின்ன விஷயங்களை ஃபாலோ பண்ணாலே போதும்.. சிறந்த தூக்கத்தை பெறலாம்..
அதிக தண்ணீர் குடி!
உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். ஒருவேளை நீங்கள் நீரேற்றமாக இல்லை என்றால், மதியம் சாப்பிட்ட பிறகு தூக்கம் வருவது கன்ஃபார்ம். உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் ஆரோக்கியமாக உணருவீர்கள். இதற்கு நீங்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். விரும்பினால் தூக்கம் வரும்போது எல்லாம் கிரீன் டீ அல்லது காபி குடிக்கலாம்.
நடக்கவும்:
பெரும்பாலானவர் சாப்பிட்ட உடனே அலுவலக வேலை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். இதன் காரணமாக அவர்கள் சோம்பேறியாகவும் உணர்வார்கள். பிறகு தூக்கம் வர ஆரம்பிக்கும். எனவே மதிய உணவுக்கு பிறகு தூக்கம் வருவதை தடுக்க நீங்கள் மதிய சாப்பிட்ட பிறகு சுமார் 10-15 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி நடக்க வேண்டும். இதனால் உணவும் எளிதில் ஜீரணமாகிவிடும், உங்களுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும். மேலும் இப்படி நடப்பது மூலம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து உடலிக்குய் புத்துணர்ச்சி அளிக்கும்.
நேரத்திற்குள் சாப்பிடுங்கள்:
நேரத்திற்குள் சாப்பிடுவது மிகவும் அவசியம். ஒருவேளை சாப்பாடு தாமதமானால் தூக்கம் அதிகரிக்கும். எனவே மதியம் 1-2 மணிக்குள் சாப்பிடுங்கள்.
சர்க்கரை மற்றும் கொழுப்பு உணவுகள்:
சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டாம் அதுபோல பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உங்களுக்கு சோர்வை அதிகரிக்க செய்யும். இதனால் மதிய உணவுக்கு பிறகு தூக்கம் வரும். அதற்கு பதிலாக இரும்பு புரதம் நிறைந்த சத்தான உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மதிய உணவுக்கு பிறகு வரும் சோர்வை குறைக்கும்.