இரவு படுத்தவுடனே தூக்கம் வர வேண்டுமா? இந்த '5' மட்டும் செய்தால் போதும்!!
Quick Sleep Tips : இரவு படுத்தவுடனே உங்களுக்கு தூக்கம் வர வேண்டுமானால் இந்த 5 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்.
Quick Sleep Tips in Tamil
இரவு நன்றாக தூங்குவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் இதை செய்ய முடியாமல் இருப்பவர்கள் ஏராளம். இரவு நன்றாக தூங்கினால் பல நோய்கள் நீங்கும் மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். இதுவே இரவு சரியாக தூங்காமல் காலையில் தாமதமாக எழுந்தால் பல நோய்கள் வரும். அதனால்தான் எப்போதும் இரவு நன்றாக தூங்கி காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த வகையில் நீங்கள் இரவில் தாமதமாக தூங்கினாளோ அல்லது தூங்குவதில் சிரமமாக இருந்தாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். இரவு படித்தவுடனே தூங்கி விடுவீர்கள்.
Quick Sleep Tips in Tamil
மன அமைதி:
பொதுவாக மனம் அமைதியாக இல்லையென்றால் இரவு படுத்தவுடனே தூக்கம் வராது. எனவே இரவு தூங்கும் முன் நீங்கள் உங்களது மனதை அமைதிப்படுத்த வேண்டும். நீங்கள் ஏதாவது ஒரு செயலில் ஈடுபடலாம். அதாவது பாட்டு கேட்பது, புத்தகங்கள் படிப்பது என உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள். இதனால் உங்களது மனம் அமைதியாகும். இரவில் நன்றாக தூங்குவீர்கள்.
Quick Sleep Tips in Tamil
சாப்பிடும் முறை:
இரவில் நீங்கள் சாப்பிடுவது மற்றும் குடிப்பது உங்களது தூக்கத்தை பாதிக்கும். அதாவது நீங்கள் மாலையிலோ அல்லது இரவு தூங்கும் முன் கனமான அல்லது காரமான உணவை சாப்பிட்டால் இரவில் உங்களால் சரியாக தூங்க முடியாது. எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதை உங்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும். இதனால் நீங்கள் இரவு தூங்குதில் சிரமம் ஏற்படும். எனவே இரவு தூங்கும் முன் லேசான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: ஆழ்ந்த தூக்கம் வரலயா? இந்த 5 தவறுகள் தான் காரணம்!! உடனே மாத்துங்க!!
Quick Sleep Tips in Tamil
சூடான நீரில் குளியல்:
இரவு நீங்கள் தூங்கும் முன் சூடான நீரில் குளித்தால் உங்களது தசைகள் அமைதியாகும், உடல் சோர்வு அனைத்தும் நீங்கும். இதனால் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
இதையும் படிங்க: ஒருநாள் தலையணை இல்லாமல் தூங்கி பாருங்க; எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Quick Sleep Tips in Tamil
ஒரே நேரத்தில் தூங்குவது:
உங்களது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த மிகவும் பயனுள்ள வழி என்னவென்றால் நீங்கள் ஒரு நிலையான தூக்க அட்டவணையை உருவாக்குவது தான். அதாவது, இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காலையில் எழுந்திருக்க வேண்டும். இப்படி நீங்கள் தினமும் செய்து வந்தால் உங்கள் உடல் இயற்கையாகவே அதற்கு ஏற்றார் போல் மாறிவிடும். பிறகு நாட்கள் செல்ல செல்ல குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு தூக்கம் வரும்.
Quick Sleep Tips in Tamil
தியானம் செய்!
தியானம் நம் உடலுக்கு மனதுக்கும் ரொம்பவே நல்லது. எனவே இரவு நீங்கள் தூங்கும்போது தியானம் செய்தால் உங்களது மனம் அமைதியடையும். குறிப்பாக மன அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். இதனால் நீங்கள் இரவு நிம்மதியாக தூங்குகிறார்கள்.