ஆழ்ந்த தூக்கம் வரலயா? இந்த 5 தவறுகள் தான் காரணம்!! உடனே மாத்துங்க!!
Sleep Problems : இன்றைய காலத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். போதுமான தூக்கம் வரவேண்டுமென்றால் இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்.
Sleep Problems in Tamil
தூக்கம் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. நாம் இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் கெட்டுவிடும். அதனால் ஒவ்வொரு இரவும் சுமார் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம்.
ஆனால், தூக்கமின்மை இன்றைய காலத்தில் நம்மில் பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும். இந்த பிரச்சனையானது சிலருக்கு சில நாட்கள் முதல் வாரங்கள் வரை நீடிக்கும். ஆனால் இன்னும் சிலருக்கோ பல மாதங்கள் கூட அவர்களை பாடாய்படுத்தும். நாம் சரியாக தூங்கவில்லை என்றால் நாம் நோய்வாய்ப்படுவோம். இந்த தூக்கமின்மை பிரச்சனைக்கு நாம் செய்யும் சில தவறுகள் தான் முக்கிய காரணம். அது என்னென்ன என்று இந்த பதிவில் காணலாம்.
Common mistakes that disrupt sleep in tamil
தூக்கமின்மைக்கு நாம் செய்யும் 5 தவறுகள்:
1. மின்னணு சாதனங்களின் பயன்பாடு
நீங்கள் தூங்க செல்வதற்கு முன் மொபைல் போன், டிவி, லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இவற்றில் இருந்து வரும் நீல ஒளியானது உடலில் தூங்கும் ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை பாதிக்கும். இது மோசமான தூக்கத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் தூங்க செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் எந்த ஒரு மொபைல் சாதனங்களையும் பயன்படுத்தாதீர்கள்.
How to improve sleep quality in tamil
2. காஃபின்
தூங்கு செல்வதற்கு முன் டீ காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவற்றில் இருக்கும் காஃபின் உடலை தூண்டி தூக்கத்தை கெடுக்கும். சொல்லப் போனால் இரவு எட்டு மணிக்கு பிறகு டீ, காபி குடித்தால் சரியாக தூக்கம் வராது.
Sleep tips and tricks in tamil
3. இரவு அதிகம் சாப்பிடாதே!
இரவு நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக சாப்பிட்டால் உணவு சரியாக ஜீரணமாகாமல் இருக்கும். இதனால் நீங்கள் சிரமமாக உணர்வீர்கள். இதன் காரணமாக சரியாக தூங்க முடியாது. எனவே இரவில் லேசான உணவு சாப்பிடுங்கள். சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்.
இதையும் படிங்க: ஸ்வெட்டர், சாக்ஸ் குளிரை தாங்கும்.. ஆனா அதை அணிந்தபடி தூங்கக் கூடாது தெரியுமா?
Better sleep habits in tamil
4. தூக்கம் வழக்கத்தை பின்பற்றாமல் இருப்பது:
இரவு தூங்குவது காலையில் எழுந்திருப்பது ஒரு குறிப்பிட்ட நேரத்துடன் அட்டவணை அமைக்கவும். நீங்கள் வெவ்வேறு நேரங்களில் தூங்க சென்றால் சரியான தூக்கம் வருவது கடினம். நீங்கள் ஒரே நேரத்தை கடைப்பிடித்து வந்தால் உங்களது உடல் சில நாட்களுக்கு அதற்கு ஏற்ப மாறிவிடும். இல்லையெனில் தூங்குவது கடினமாக இருக்கும். எனவேதான் தூங்குவதற்கு என ஒரு அட்டவணையை அமைத்து அதன்படி பின்பற்றுங்கள்.
இதையும் படிங்க: குளிருக்கு முகத்தை மூடி தூங்குவீங்களா? அதனால் ஏற்படும் 'முக்கிய' பிரச்சனை
Sleeplessness in tamil
5. மன அழுத்தம்:
மன அழுத்தம், பதட்டம் இருந்தால் இரவு சரியாக தூக்கம் வராது. கண் மூடினால் கூட தூங்குவது கடினம். இது தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே மன அழுத்தத்தை குறைக்க தினமும் தியானம், உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். அதுபோல தூங்கும் முன் எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம். முடிந்தவரை மூளையை நிதானமாக வைக்க முயற்சி செய்யுங்கள்.