வெறும் '5' நிமிடங்களில் பாத்ரூம், கிச்சன் குழாய்களில் அழுக்கை நீக்கலாம்!! இந்த '3' பொருள்கள் இருக்கா?
Bathroom Pipe Cleaning Tips : உங்கள் வீட்டு பாத்ரூம் மற்றும் கிச்சனில் இருக்கும் பைப்புகளில் கறைகள் படிந்திருந்தால், அதை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள். அதை உடனே சரி செய்துவிடலாம்.
Bathroom Pipe Cleaning Tips In Tamil
நீங்கள் பார்த்து பார்த்து கட்டின வீடு சுத்தமாக இல்லை என்றால் வேஸ்ட்தான். ஒருவரது வீட்டின் சுத்தத்தை வைத்து அவரது ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை சொல்லிவிடலாம். நாம் வாழும் வீட்டை ரொம்பவே சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஏனென்றால் வீட்டில் தான் நாம் அதிக நேரத்தை செலவழிக்கிறோம்.
Bathroom Pipe Cleaning Tips In Tamil
அதிலும் குறிப்பாக நம் வீட்டின் பாத்ரூம் மற்றும் கிச்சன் பகுதியை ரொம்பவே சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த இரண்டு பகுதிகளில் தான் பாக்டீரியாக்கள் அதிகம் தங்கும்.
அந்தவகையில், உங்கள் வீட்டு பாத்ரூம் மற்றும் கிச்சனில் இருக்கும் பைப்புகளில் நீண்ட நாட்களாக கறைகள் படிந்திருந்தால், அதை போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள். அதை உடனே சரி செய்துவிடலாம்.
இதையும் படிங்க: ஒரே '1' பொருள் இருந்தா போதும்.. டாய்லெட்டில் படிந்த மஞ்சள் கறையை நொடியில் போக்கிடலாம்!!
Bathroom Pipe Cleaning Tips In Tamil
கிச்சன் மற்றும் பாத்ரூம் பைப்புகளில் படிந்திருக்கும் கறையை சுத்தம் செய்ய டிப்ஸ்:
1. பேக்கிங் சோடா
ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் போலாகவும். இப்போது இந்த போஸ்டை கறைகள் படிந்திருக்கும் பைப்புகள் மீது தடவி, சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்து விட்டு, பிறகு கிளீனிங் பிரஷ் கொண்டு குழாயை நன்கு தேய்த்து கழுவினால் போதும் பளிச்சென்று மாறிவிடும்.
2. வினிகர்
இதற்கு ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் வெள்ள வினிகரை சேர்த்து நன்றாக கலக்கவும் இப்போது அதை துருப்பிடித்த பைப் மீது தடவி ஐந்து நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள் பிறகு கீழ் கிளீனிங் பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து கழுவி விடுங்கள்.
இதையும் படிங்க: 1 ஸ்பூன் பேக்கிங் சோடா வைத்து.. டீ வடிகட்டியை 'இப்படி' சுத்தம் பண்ணா பளீச்னு ஆகிடும்!!
Bathroom Pipe Cleaning Tips In Tamil
3. உப்பு மற்றும் எலுமிச்சை சாறு
ஒரு கிண்ணத்தில் ஒரு முழு எலுமிச்சை பழத்தின் சாற்றை நன்கு பிழிந்து கொள்ளுங்கள். அதில் சிறிதழ் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அதை அழுக்கு படிந்த பைப்புகளில் பூசி சுமார் 10 நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு கிளீனிங் பிரஷ் கொண்டு தேய்த்து, பின் தண்ணீரில் கழுவுங்கள்.
4. பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு
கிச்சன் மற்றும் பாத்ரூம் பைப்புகளில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை போக்க, ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சலவைத்தூள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து அதை பைப்புகள் மீது தடவி சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, லேசாக தேய்த்து தண்ணீர் ஊற்றி கழுவுங்கள். அனைத்து கறைகளும் நீங்கி விடும்.