குளிர்கால வறட்சியால் உதடு வெடிப்பா? ஈஸியா சரி செய்ய டிப்ஸ்!
Tips For Chapped Lips In Winter : குளிர்காலத்தில் உதடு வெடிப்பு பிரச்சனையை சரி செய்வதற்கான சில ஈஸியான டிப்ஸ் இங்கே உள்ளன.
Tips For Chapped Lips In Winter In Tamil
Lips Care In Winter : குளிர்காலத்தில் உதடு வெடிப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். இது பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாகவும் உதடு காய்ப்பு இருந்தது போலவும் இருக்கும். இதன் காரணமாக பலர் சிரமப்படுகிறார்கள். மேலும் உதவு வெடிப்பை சரி செய்ய ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளை முயற்சி செய்தும் பலனில்லை.
Tips For Chapped Lips In Winter In Tamil
Chapped Lips In Winter : அதுமட்டுமின்றி, உதடு வெடிப்பு காரணமாக சில நேரங்களில் சிலருக்கு உதடுகளில் ரத்தம் கசியும் அல்லது சாப்பிடும் போது உதடுகளில் ஏதாவது ஒட்டிக்கொள்ளும். மேலும் இது மிகுந்த வலியை ஏற்படுத்தும். இந்த மாதிரி பிரச்சனையால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா? ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது. ஆம், குளிர்காலத்தில் ஏற்படும் உதடு வெடிப்பு நீங்க சிம்பிள் டிப்ஸ் இங்கே உள்ளன. அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் உங்களது உதடு மென்மையாக மாறும்.
இதையும் படிங்க: Beauty Tips : உங்கள் உதடு கருப்பா இருக்கா..? ஒரே வாரத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் மாற்ற சூப்பரான டிப்ஸ் இதோ!
Tips For Chapped Lips In Winter In Tamil
Tips For Chapped Lips In Winter : குளிர்காலத்தில் உதடு வெடிப்பு நீங்க டிப்ஸ்:
தேங்காய் எண்ணெய் & தேன்:
ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து அதை இரவு தூங்கும் முன் வெடித்த உதடுகள் மீது தடவ வேண்டும். பின் மறுநாள் காலை எழுந்தவுடன் தண்ணீரால் உதட்டை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு வெடிப்பு நீங்கி, உங்களது உதடு மென்மையாக மாறிவிடும்.
அலோவேரா ஜெல்:
வெடித்திருக்கும் உதடுக்கு கற்றாழை ஜெல் சிறந்து தேர்வாகும் இதற்கு வெடித்த உங்கள் உதட்டின் மீது சிறிதளவு கற்றாழை ஜெல் தடவி 10 நிமிடம் கழித்து மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரால் உதட்டை கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு மீது ஈரப்பதம் இருக்கும் மற்றும் மென்மையாக மாறும்.
Tips For Chapped Lips In Winter In Tamil
Tips For Chapped Lips In Winter : வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் வறண்ட உதட்டை ஈரப்பதமாக்க உதவுகிறது. எனவே வெடித்திருக்கும் உங்கள் உதட்டின் மீது வெள்ளரித் துண்டை நன்கு தேய்த்து வந்தால் விரைவிலே உங்களது உதடு மென்மையாகும்.
நெய்:
நெய்யில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சரும செல்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. எனவே வெடித்திருக்கும் உங்கள் உதட்டின் மீது நெய்யை தொடர்ந்து தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
இதையும் படிங்க: சிகரெட் பிடிச்சதால உதடு கருப்பா இருக்கா..? சிவப்பாக மாற சூப்பரான டிப்ஸ்!!
Tips For Chapped Lips In Winter In Tamil
How To Take Care Of Lips In Winter : நினைவில் கொள்:
1. உதட்டில் ஈரப்பதம் இருந்தால் வெடிப்பு ஏற்படாது. இதற்கு வாஸ்லின் பயன்படுத்தலாம். இது உதட்டை மென்மையாக வைத்திருக்கும் மற்றும் உதட்டில் வெடிப்பு ஏற்படுத்தாது.
2. நம்முடைய சருமத்தை போலவே உதடுக்கும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு தேவை. எனவே நீங்கள் பகலில் வெளியில் செல்லும்போது எல்லாம் எஸ்பிஎஃப் கொண்ட லிப் பாம் பயன்படுத்துங்கள். இது புறஉத கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து உங்களது உதட்டை பாதுகாக்கும்.
3. அதுபோல நம்மில் பலருக்கு உதட்டை நக்கும் அல்லது கடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த பழக்கம் உங்களது உதடுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே இந்த பழக்கத்தை உடனே நிறுத்துங்கள் அது நல்லதல்ல.
4. உங்களது உதடு வெடித்திருந்தால் லிப்ஸ்டிக் பயன்படுத்த வேண்டாம். இல்லையெனில் உதட்டில் வெடிப்பு பிரச்சனை மேலும் தீவிரமடை வாய்ப்பு அதிகம் உள்ளது.