Motivational Story : இந்த கதை உங்கள் சிந்தனையை மாற்றும்.. வெற்றி கிடைக்கும்!
ஒரு சிறிய கதை உங்களது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அத்தகைய ஒரு நல்ல கதையை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே நம்மில் பலர் சிரமங்களை கண்டு அஞ்சுகிறோம். இதனால் முடிந்தவரை சிரமங்களில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு கதையை படித்தால் உங்களது இந்த சிந்தனை நிச்சயமாக மாறிவிடும். மேலும் எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய சிரமங்களை நீங்கள் எதிர்கொண்டாலும் அதை சுலபமாக கையாளுவீர்கள். சரி வாங்க இப்போது அந்த கதையை பற்றி பார்க்கலாம்.
காட்டில் ஒரு சிற்பி நடந்து செல்கிறான் அப்போது அவன் ஒரு பாறையை பார்க்கிறான். அந்தப் பாறை பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருப்பதால் உடனே உளியை கையில் எடுத்து எதையோ செதுக்க முயற்சிக்கும்போது, பாறை அவனுடன் பேசுகிறது. அதாவது "நீங்கள் என்னை தாக்கும் போது எனக்கு வலிக்கும். தயவு செய்து என்னை தனியாக விட்டு விடுங்கள். நீங்கள் வேண்டுமானால் வேறு பாறையை தேடுங்கள்" என்று கூறியது. உடனே சிற்பி அங்கிருந்து சென்றுவிட்டான்.
சிறிது தூரம் சென்றதும் அங்கே மற்றொரு பாறையை சிற்பி பார்க்கிறார். உடனே அந்தப் பாறையை செதுக்குகிறார். அந்தப் பாறைக்கும் வலி ஏற்படுகிறது. ஆனால் அது பொறுமையாக வலியை தாங்குகிறது. சிறிது நேரம் கழித்து சிற்பி அந்த பாறையை விநாயகர் சிலையாக மாற்றுகிறார். அதன்பிறகு சிறப்பி அங்கிருந்து சென்று விடுகிறார்.
அப்போது அந்த வழியாக சென்று துறவி விநாயகர் சிலையை கண்டு வணங்கி சென்றார். கிராம மக்களும் அந்த சிலையை தினமும் வணங்கத் தொடங்கினர். மேலும் அவர்கள் விநாயகருக்கு தேங்காய் உடைக்க விரும்பினர். இதனால் பாறையை தேடும் போது சிற்பி முதலில் பார்த்த பாறையின் மீது தேங்காய் உடைக்க ஆரம்பித்தனர். தேங்காயின் ஒவ்வொரு அடியும் பாறையில் கீறலை ஏற்படுத்தியது. 'ஒரே ஒரு நாள் சிற்பியின் அடிகளை தாங்கி இருந்தால் இப்போது வாழ்நாள் முழுவதும் இவ்வளவு அடிகளை நான் அனுபவித்திருக்க மாட்டேன்' என்று நினைத்து வருத்தப்பட்டது பாறை.
மேலே சொல்லப்பட்ட அந்த கதைகள் முதல் பாறையை போலவே நம்மில் பலரும் சிரமங்களை தாங்கிக் கொள்ள முடியாமல் அவற்றை தவிர்க்க முயற்சி செய்கிறார். குறிப்பாக சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை தான் வாழ விரும்புகிறோம். ஆனால் நீங்கள் நிகழ்கால சிரமங்களை பொறுமையாக தாங்கினால் அந்த இரண்டவது கல்லை போலவே, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.