Sani Peyarchi 2022: சனியின் வக்ர பெயர்ச்சி...இன்னும் இரண்டு வருடங்களுக்கு இந்த ராசிகளுக்கு குபேர யோகம் உண்டு..
Sani Peyarchi 2022 Palangal: நீதியின் கடவுளான சனி பகவான் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நல்ல மற்றும் தீய பலன்களை தருபவர். அப்படியாக, யாருக்கு என்னென்னெ பலன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Sani Peyarchi 2022
ஜோதிடத்தின் பார்வையில், சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவார். ஆனால் 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. நீதி தேவனான சனி பகவான் கடந்த 12 ஜூலை 2022 அன்று முதல் மகர ராசியில் தற்போது வக்ர நிலையில் உள்ளார். இதையடுத்து, வரும் ஜனவரி 17, 2023 வரை சனி இந்த ராசியில் இருப்பார்.
Sani Peyarchi 2022
இதையடுத்து, மீண்டும் கும்ப ராசிக்குள் நுழைவார். மார்ச் 29, 2025 வரை சனி தேவன் கும்ப ராசியில் இருப்பார். மகர ராசியில் சனி இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு மட்டுமே சுப மற்றும் அசுப பலன் கிடைக்கும். இதனால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு குறிப்பிட்ட ராசிகளுக்கு சனிபகவான் கருணை காட்டுவார். சனியின் அருள் மழையில் நனைய காத்திருக்கும் அந்த ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Sani Peyarchi 2022
ரிஷபம்:
சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். தொழிலில் நல்ல ஆதாயம் உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி உண்டாகும். சனியின் வக்ர பெயர்ச்சி காலத்தில், நீங்கள் உங்கள் வேலையில் வெற்றி பெறலாம். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். வெளியூர் பயணம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும்.
Sani Peyarchi 2022
தனுசு:
தனுசு ராசியின் நான்காம் வீட்டில் சனி தேவன் வக்ர நிலையில் உள்ளார். வக்ர நிலையில் இருப்பது குடும்ப உறுப்பினர்களிடையேயான நல்ல உறவைக் கொண்டு வரும். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கிய பணத்தை நீங்கள் மீட்க முடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெறும்.
Sani Peyarchi 2022
மீனம்:
சனி பகவான் வக்ர நிலையில், மீன ராசிக்கு 11வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதி ரீதியாக வெற்றி பெறுவீர்கள். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். இந்த நேரத்தில், திடீர் பண ஆதாயத்திற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் வருமானம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.