Sani Peyarchi: சனி தோஷம் நீங்கி சனி பகவானின் நேரடி அருள் பெறும் ராசிகள்...இன்று செய்ய வேண்டிய பரிகாரம் என்ன..?
Sani Peyarchi 2022 Palangal: சனி பகவானின் நாளாக கருதப்படும், சனிக்கிழமையில் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சனி தோஷம் நீங்கி சனியின் நேரடி அருள் பெறும் ராசிகள்.
Sani Peyarchi 2022:
ஜோதிடத்தின் படி, நீதியின் கடவுளான சனி பகவான் கிரங்களில் முக்கியமானவர். 2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசி மாறும் சனி பகவான் வழிபாடு செய்தால் நமக்கு சிறப்பு அருள் கிடைக்கும். இது சனி தோஷத்தின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது. எனவே, இந்த நாளில் மாலை நேரத்தில், விரதமிருந்து விளக்கு ஏற்றி சனி பகவானை வழிபாடு செய்தால், குறிப்பிட்ட ராசிகளுக்கு வேண்டிய பலன் உங்களுக்கு கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் இனி வரும் 21 சனிக்கிழமைகள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்களில் ஏதேனும் ஒன்றில் மேற்கொள்ள வேண்டும். எனவே, எந்தெந்த ராசிகளுக்கு சனி பகவானின் சிறப்பு அருள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Sani Peyarchi 2022:
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு அதிபதி சனி பகவான் ஆவார். சனி பகவானின் சிறப்பு அருள் இந்த ராசிக்காரர்கள் மீது எப்போதும் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவு பெறும். இந்த நேரத்தில் குழந்தைகளால் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். இதன் மூலம் மகர ராசிக்காரர்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்
Sani Peyarchi 2022:
துலாம்:
துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் சனி பகவானுக்கு தனி இடம் உண்டு. இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சனி பகவானின் ஆசீர்வாதத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை ஜொலிக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
Sani Peyarchi 2022:
கும்பம் :
சனி பகவானின் ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை சனி பகவானின் அருளால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். இந்த ராசி மக்கள் ஒருபோதும் நிதிப் பிரச்சினைகளை எதிர்கொள்ள மாட்டார்கள்.வாழ்வில் மதிப்பும், மரியாதையும் இருக்கும்.