Guru Peyarchi 2022: இன்னும் 4 நாட்களில் மீனத்தில் குரு பெயர்ச்சி...இந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாய் மாறும்...
Guru Peyarchi 2022 Palangal: ஜூலை 29 ஆம் தேதி மீனத்தில் குருவின் வக்ர பெயர்ச்சி நடைபெற உள்ளது. குரு பகவானின் இந்த வக்ர பெயர்ச்சி குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும்.
guru peyarchi 2022
குரு பெயர்ச்சி 2022
ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திர பெயர்ச்சியால் 12 ரசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதன்படி, சில கோள்கள் ஒவ்வொரு மாதமும் பின்னோக்கி நகர்கின்றன. அவற்றின் சுப மற்றும் அசுப விளைவுகள் அனைவரது வாழ்க்கையிலும் காணப்படுகின்றன. ஜூலை 29-ம் தேதி வியாழன் கிரகம் மீனத்தில் பின்னோக்கி நகரவுள்ளார்.
guru peyarchi 2022
குரு பகவான் ஒரு நல்ல கிரகமாக கருதப்படுகிறார். வியாழன் கிரகம் அறிவுத்திறன், வளர்ச்சி, செல்வம், மற்றும் நல்லொழுக்கம் போன்றவற்றின் காரணியாக கருதப்படுகிறார். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். சிலருக்கு குருவின் பெயர்ச்சி வாழ்வில் அபரிமிதமான மகிழ்ச்சியை அள்ளித்தரும். அப்படியாக, எந்ததெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும், என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
guru peyarchi 2022
மகரம்:
ஜோதிட சாஸ்திரப்படி மகர ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த காலம் அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். இந்த காலத்தில் திடீர் பண வரவு உண்டாகும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.
guru peyarchi 2022
கடகம்:
கடக ராசியின் ஒன்பதாம் வீட்டில், வியாழன் வக்ரமாவார். இந்த நேரத்தில் உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். அதே சமயம் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். நீங்கள் புதிய தொழில் தொடங்க நினைத்தால், அது சிறப்பாக நடக்கும்.
guru peyarchi 2022
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாழன் சஞ்சாரம் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். இந்த நேரத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வரலாம். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வேலையில் பதவி உயர்வு உண்டாகும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கும் இந்த நேரம் சாதகமானதாக இருக்கும்.