- Home
- Lifestyle
- Budhan Peyarchi2022: இன்று புதன் மற்றும் சனி கூட்டணி...இந்த ராசிகளுக்கு வாழ்க்கை ஜொலிக்கும், பம்பர் பலன் உறுதி
Budhan Peyarchi2022: இன்று புதன் மற்றும் சனி கூட்டணி...இந்த ராசிகளுக்கு வாழ்க்கை ஜொலிக்கும், பம்பர் பலன் உறுதி
Budhan Peyarchi 2022 Palangal: : ஜூன் 3 ஆம் தேதி புதன் தனது சொந்த ராசியில் பயணிப்பது போல, சனியும் தனது சொந்த வீட்டில் அமர்ந்துள்ளது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு பொன்னான நாள் துவங்கியுள்ளது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.

Budhan Peyarchi 2022
புதன் மற்றும் சனி கூட்டணி:
ஜோதிடத்தின் படி, புத்திசாலித்தனம் மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படுபவர் புதன். இதுவரை மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இவர், 2022 ஜூன் 3 ஆம் தேதி பின்னோக்கி நகர்வார். புதன் மிதுன ராசியில் பெயர்ச்சி பலரது வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. ஏற்கனவே, சனியும் தனது சொந்த வீட்டில் அமர்ந்துள்ளது. புதன் மிதுன ராசியில் ஜூலை 17-ம் தேதி வரை இருப்பார்.
Budhan Peyarchi 2022
இந்த இரண்டு முக்கிய மாற்றங்கள் ஜூன் மாதத்தில் தொடங்கினாலும், ஜூலை முதல் வாரம் வரை இதன் உடனடித் தாக்கம் எதிரொலிக்கும். இந்த இரண்டு ராசி மாற்றங்களுடன் செவ்வாயின் அருட்பார்வையும் சேர்ந்து குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு பண விஷயத்தில் பல நன்மைகளை கொண்டு வரும். இவர்கள் தங்கள் பேச்சு சாதுர்யத்தால் பல பெரிய வெற்றிகளை அடைவார்கள். மேலும், இந்த நேரத்தில் இவர் சூரியனுடன் இணையும் போது புதாதித்ய யோகம் உண்டாகும். எந்தெந்த ராசிகளுக்கு புதன் பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
Budhan Peyarchi 2022
ரிஷபம்:
மிதுன ராசியில் புதன் சஞ்சாரம் செய்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். புதன் அடுத்த மாதம் வரையிலும், சனி அக்டோபர் வரை வக்ரத்திலும் இருப்பார். இந்த ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி காலம் நன்மை தரும். திடீர் பண வரவு உண்டாகும். வருமானம் கூடும். பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். மொத்தத்தில், பணம் மற்றும் தொழில் வளர்ச்சி இருக்கும்.
Budhan Peyarchi 2022
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு பணி புரியும் இடத்தில் யோகம் உண்டாகும். வியாபாரிகள் தொழிலில் லாபம் அடைவார்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க நல்ல வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியான வளர்ச்சி நல்ல நேரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். உயர் அதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பணி பாரட்டப்படும்.
Budhan Peyarchi 2022
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை அள்ளித் தரும். புதிய வேலை தேடுபவர்களின் கனவு நனவாகும். நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கும். சிம்ம ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான நேரமாக இருக்கும். தொழிலில் வளர்ச்சி இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலையில் லாபம் உண்டாகும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.