Rahu Ketu Peyarchi 2022: கேதுவின் கருணை மழையில் நனைய காத்திருக்கும் மூன்று ராசிகள்...அதுவும் எதுவரை தெரியுமா.?
Rahu Ketu Peyarchi 2022 Palangal: மர்மமான கிரகமாக கருதப்படும் கேது ஏப்ரல் 12ம் தேதி ராசி மாறுகிறார். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கேது ராசி மாற்றத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Rahu Ketu Peyarchi 2022
நிழல் கிரகமான ராகு, கேது ஒவ்வொரு ராசியிலும் சுமார் 1 1/2 ஆண்டுகள் தங்கி இருப்பார். இந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்று நட்சத்திரங்களில் பயணம் செய்வார்கள். ராகு-கேது எப்போதும் ஒரே அச்சில் தான் சஞ்சரிக்கும். அதன்படி, இந்த ஆண்டு கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு ஏப்ரல் 12ம் தேதி பெயர்ச்சியானார்.இதையடுத்து, கேது வரும் 2023 வரை இந்த ராசியில் மட்டுமே இருப்பார்.
Rahu Ketu Peyarchi 2022
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் மாற்றம், நட்சத்திர பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.தற்போது நிகழும் கேதுவின் இந்த ராசி மாற்றத்தால் வரும் வருடம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான சூழல் இருக்கும். அந்த வகையில் எந்தெந்த ராசிகள் இதன் சிறப்பான பலன்களை அடைவார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Rahu Ketu Peyarchi 2022
சிம்மம்:
கேதுவின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மூன்றாம் வீட்டில் நடக்கிறது. இது வீடு, மற்றும் செல்வத்தின் வீடாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் இலக்குகளை நினைத்தப்படி அடைவீர்கள். நீண்டநாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிர்பாராத திடீர் வரவுகள் வந்து சேரலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி வரும். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறலாம்.
Rahu Ketu Peyarchi 2022
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு கேதுவின் ராசி மாற்றம் வரும் 2023 வரையில் மங்களகரமானதாக இருக்கும். திடீர் சுப செலவுகள் வந்து சேரும். இதன் போது உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுறுசுறுப்பாகவும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். இந்த நேரம் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
Rahu Ketu Peyarchi 2022
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு கேது பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த ராசியில் பிறந்தவர்கள் கேதுவின் தாக்கத்தால் அரசியலில் ஆதாயம் அடைவார்கள். திடீர் பணம் கைக்கு வரும். உங்கள் உயர் அதிகாரிகள் உங்கள் பணியை பாராட்டுவார்கள். வேலை மாற்றத்திற்கு நல்ல நேரம் உண்டாகும். கணவன்- மனைவி அன்னோன்யம் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வு கிடைக்கும்.