இந்த 5 செடிகளும் ஒரு கொசுவை கூட உங்கள் வீட்டிற்குள் நுழைய விடாது..!!
மழைக்காலத்தை விடவும் கோடைக்காலத்தில் ஈ மற்றும் கொசுக்களின் பாதிப்பு குறைவு தான். எனினும், வெயில் காலங்களில் இப்பூச்சிகளால் பல உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
Mosquitos
எவ்வளவு தடுத்தாலும் இந்த கொசுக்கள் எப்படித்தான் வருகின்றன? என்கிற கேள்வி உங்களுக்குள் எப்போதாவது எழுந்துள்ளதா? கொசுக்கள் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதுபோன்று நம்மை நோக்கி அவை தொடர்ந்து வருவதற்கும் பல காரணங்கள் உண்டு. கார்பன் டை ஆக்சைடு, உடல் வியர்வை, அழுக்கு அல்லது பாதங்களில் துர்நாற்றம் உள்ளிட்டவற்றினால் மனித உடலில் இருந்து குறிப்பிட்ட ஒரு வாயு தோன்றும். அதனால் ஈர்க்கப்படும் போது கொசுக்கள் நம்மை வந்து கடிக்கின்றன. ஒரு 100 அடி தூரம் என்றாலும், அங்கு அமர்ந்து துர்நாற்றம் வீசுவதன் மூலம் அவை நம்மை எளிதில் அணுகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனுடைய வயிற்றுப் பிழைப்புக்கு நம்மை கடிக்கிறது என்றாலும், அதன்மூலம் நோய்களும் ஏற்படுகின்றன. கொசுக்களால் பல கொடிய நோய்கள் வரலாம். அதனால்தான் கொசுக்களை கொல்லவும் விரட்டவும் பல பொருட்கள் சந்தையில் உள்ளன. ஆனால் அது வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தி, உடலுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடுகின்றன. வீடுகளுக்கு கொசு வருவதை தடுக்கவும், கொசு மற்றும் ஈக்களால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தவும், இயற்கையான முறையில் இருக்கும் தீர்வுகளை தெரிந்துகொள்வோம்.
சாமந்திச் செடி
சாமந்தி செடி ஆண்டு முழுவதும் பூக்கும். இந்த செடியின் பூக்கள் கொசுக்களை விரட்டும். காலநிலை மாற்றத்தால் வரும் கொசுக்களை தவிர்க்க இந்த செடியை வெளியில் அல்லது பால்கனியில் வளர்க்கலாம். இந்த செடி எங்கும் எளிதில் வளரும். இந்த செடி கொசுக்களை விரட்டுவது மட்டுமின்றி அதன் பூக்களையும் பூஜைக்கு பயன்படுத்தலாம். இச்செடியில் இருந்து வரும் வாசனையில் பைரெத்ரம், சபோனின், ஸ்கோபொலெடின், கார்டினலோல் மற்றும் பிற கூறுகள் உள்ளன. இவை உங்கள் வீட்டிலிருந்து கொசுக்களை விலக்கி வைக்கின்றன.
துளசிச் செடி
துளசி செடி அதன் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது மற்றும் கொசுக்களை விரட்டுகிறது. அதிலிருந்து வரக்கூடிய வாடையினால், ஒரு கொசு கூட செடியை சுற்றி வராது. மேலும் இதை வைத்து ஸ்ப்ரே தயாரித்து கை மற்றும் கால்களில் தடவினால், எந்த கொசுவும் உங்களை கடிக்காது, ஈக்கள் எதுவும் அண்டாது. அதற்கு சில துளசி இலைகளுடன் இரண்டு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஆறிய பிறகு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிவிட்டு, மாலையில் வெளியே செல்லும் போதெல்லாம் கை, கழுத்து மற்றும் கால்களில் தெளிக்கவும். இதனால் கொசுக்கள் உங்களைச் சுற்றி வருவது கட்டுப்படுத்தப்படும்.
லாவெண்டர்
லாவெண்டர் நல்ல மணம் கொண்டது. அதனுடைய பூக்கள் மிகவும் அழகாக உள்ளது. இதிலிருந்து கிடைக்கும் அரோமாதெரபி மற்றும் மூலிகை, மருந்து தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த செடிகள் ஈக்கள், கொசுக்கள், சிலந்திகள் மற்றும் எறும்புகளை தடுக்கும் வகையில் செயல்படுகிறது. கொசுக்கடியால் ஏற்படும் அரிப்பு மற்றும் வலியைப் போக்கும் மூலிகை மருந்தாகவும் இது செயல்படுகிறது. விரும்பினால், செடியின் இலைகளை எடுத்து நேரடியாக தோலில் தடவலாம். இலைகளில் இருந்து வெளியாகும் எண்ணெய் பூச்சிகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கிறது.
Image: Getty Images
ரோஸ்மெரி
இது ஒரு நறுமண தாவரமாகும். அதன் ஊசி போன்ற மெல்லிய, கூர்மையான இலைகள் மிகவும் அழகாக இருக்கும். கோடையில் பூக்கும் இந்த செடியின் தண்டு வாசனை கொசுக்களை விரட்டும். இந்த செடியில் வெள்ளை மற்றும் நீல பூக்கள் பூக்கும். இது எண்ணெய் வடிவிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. அதை நீங்கள் தாராளமாக வாங்கி, உடலில் தேய்த்து கொள்ளலாம். இதன்மூலம் கொசு அல்லது ஈ போன்ற பூச்சிகள் எதுவும் உங்களை அண்டாது.