Sani Peyarchi: இன்னும் மூன்று நாட்களின் சனி பெயர்ச்சி...யாருக்கு லாபம்..? யாருக்கு ஆபத்து..? தெரிஞ்சுக்கோங்க.
Sani Peyarchi 2022 Palangal: ஜூலை 12 அன்று, அதாவது இன்னும் மூன்று நாட்களில் சனி அதன் சொந்த ராசியான மகரத்தில் பிற்போக்கு நகர்வில் நுழைகிறது. இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
Sani Peyarchi 2022
நீதியின் கடவுளான சாய் பகவான் ஜூலை 12, 2022 அன்று தனது ராசியை மாற்றப் போகிறார். சனி வக்ர நகர்வில் கும்ப ராசியிலிருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைவார். இந்த தாக்கம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பாகவும், சிலருக்கு சோகமாகவும் இருக்கும். அப்படியாக, சனியின் தாக்கத்தால் எந்த ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும், யாருக்கு தீய பலன்கள் கிடைக்கும் என இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்:
சனியின் சஞ்சாரம் ரிஷப ராசியினருக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு நல்ல பலன்களைப் பெறுவீர்கள். ரிஷபம் ராசிக்காரர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
Sani Peyarchi 2022
மகரம்:
மகர ராசியில் சனியின் பிரவேசம் மிதுன ராசிக்காரர்களுக்கு தொல்லைகளைத் தரும் வகையில் உள்ளது. இந்த காலத்தில் உடல்நலப் பிரச்சினைகள் வரக்கூடும். தேர்வு மற்றும் நேர்காணலில் பங்கு கொள்ளவுள்ளவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனை வரலாம். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பொறுமையாக இருங்கள்.
Sani Peyarchi 2022
கும்பம்:
மகர ராசியில் சனியின் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். நீண்ட பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. வீட்டில் யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். வாக்குவாதத்தால் பிரச்சனைகளே அதிகரிக்கும். தேவையில்லாத செலவுகள் ஏற்படும். வாழ்வில் மிகவும் கவனமாக இருங்கள்.
Sani Peyarchi 2022
மீனம்:
மகர ராசியில் பிற்போக்கு நகர்வில் நுழையும் சனியின் பிரவேசம் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக அமையும். பல வழிகளில் பண பலன்கள் கிடைக்கும். மேலும், இது முதலீடு செய்வதற்கும் நல்ல நேரமாக இருகும். எதிர்பாராத இடங்களிலிருந்து திடீர் பண வரவு கிடைக்கும். வியாபாரிகள் லாபம் பெறலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கிடைக்கும். கூட்டு முயற்சி பலன் தரும்.