இன்னும் 24 மணி நேரத்தில் துலாம் ராசியில் புதன் பெயர்ச்சி..இந்த ராசிக்கு தொட்டது எல்லாம் துலங்கும்..!
Budhan peyarchi 2022 Palangal: ஜோதிடத்தில் சம கிரகமாக கருதப்படும் புதன் பெயர்ச்சி சிலருக்கு சாதகங்களையும், வேறு சிலருக்கு பாதகங்களையும் கொடுக்கப்போகிறார். உங்கள் ராசிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஜோதிடத்தின் பார்வையில், புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வேலை , வியாபாரம், கல்வி, அறிவுத் திறன், நிதி நிலை மற்றும் வணிகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. புதன் ஒரு தீய கிரகத்துடன் இணைந்தால், அது சாதகமற்ற விளைவுகளை உருவாக்குகிறது, சுப கிரகங்களுடன் இணைந்தால் சாதகமான விளைவுகளை உருவாக்குகிறது.
12 ராசிகளில், புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளை ஆட்சி செய்யும் புதன் கிரகம் இன்னும் 24 மணி நேரத்தில் அதாவது, அக்டோபர் 26 ஆம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சில ராசிக்காரர்கள் இதனால், தொழில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மிதுனம்:
புதனின் பெயர்ச்சி உங்களுக்கு ஐந்தாம் வீட்டில் நடக்கப் போகிறது. இது உங்களுக்கு சாதகமாக பலன்களை தரும். எனவே, இந்த நேரத்தில் குழந்தைகளின் பக்கத்திலிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம். உங்களுக்கு இந்த நேரத்தில், காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் வேலை தொடர்பான விஷயங்களிலும் சாதகமான வாய்ப்புகளைப் பெறலாம்.
துலாம்:
உங்கள் ராசியை புதன் ஆட்சி செய்வதால், புதனின் பெயர்ச்சி, உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இதனால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு வேண்டிய பொருள் கிடைக்கும். தாயின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கூடும்.
கடகம்:
உங்கள் ராசியிலிருந்து நான்காம் வீட்டில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். இதனால், புதனின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும்.எனவே, இந்த நேரத்தில் உங்களுக்கு வேண்டிய பொருள் கிடைக்கும். தாயின் ஆதரவும் அன்பும் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் ஈடுபட்டவர்களுக்கும் பல நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
சிம்மம்:
புதனின் சஞ்சாரம் மூன்றாம் வீட்டில் நடைபெறும். சிம்ம ராசிக்காரர்களுக்கு வியாபாரத்திலும், தொழிலிலும் வெற்றியைத் தரும். இது வலிமை மற்றும் சகோதர சகோதரிகளின் இடம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்களுக்கு தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல வாய்ப்புகளும் உருவாகும். வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்.